நான் நிறவெறிக்கு ஆதராவானவன் அல்ல – குயின்டன் டி கொக்

177

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்புத் துடுப்பாட்டவீரரான குயின்டன் டி கொக் நிறவெறி தொடர்பான சர்ச்சையொன்றுக்கு ஆளான நிலையில் அது தொடர்பில் தனது சக அணி வீரர்களிடமும், தனது நாட்டு இரசிகர்களிடமும் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டிருக்கின்றார். 

>>3ஆம் இலக்கத்தில் விளையாட மிகவும் விரும்புகிறேன் – சரித்

நிறவெறிக்கு எதிரான உடல் சைகை (Gesture) ஒன்றினை காட்ட மறுத்த நிலையில், குயின்டன் டி கொக் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடிய போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை.

டி கொக்கின் இந்த செயற்பாட்டினால் அவருக்கு எதிர்ப்பலைகள் உருவானதை அடுத்து இந்த விடயம் தொடர்பிலான விளக்கம் அவரின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கின்றது.

>>தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் நிறவெறி சர்ச்சை ???

நான் இதனை எனது அணியின் சகாக்கள் மற்றும் நாட்டில் இருக்கும் இரசிகர்கள் இடத்தில் மன்னிப்பு கோருவதன் மூலம் ஆரம்பிக்க விரும்புகின்றேன்.”

நான் இதனை குயின்டனின் விடயமாக்க விரும்பவில்லை. நிறவெறிக்கு எதிராக இருப்பதன் அவசியம் பற்றி எனக்கு புரிந்து கொள்ள முடியுமாக இருக்கின்றது. அதோடு வீரர்களாக இதற்கு எதிராக குரல் கொடுக்க பொறுப்பு இருப்பதனையும் எனக்கு புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.”

நான் நிறவெறிக்கு எதிராக முழந்தாளிடுவது ஏனையோருக்கு கற்றுக்கொள்ள உதவியாக இருப்பின், ஏனையவர்களின் வாழ்க்கையினை சிறப்பாக மாற்றுமெனில், எனக்கு இதனை செய்வதில் மகிழ்ச்சியே” எனக் குறிப்பிட்ட டி கொக், (குறிப்பாக கறுப்பினவீரர்கள் கொண்ட) மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆடாமல் போனதன் மூலம் நிறப்பல்வகைமை (Mixed Race) கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்து யாருக்கும் மதிப்பு வழங்காமல் விடுவதற்கு நினைத்திருக்கவில்லை என சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டி கொக், தான் ஒரு நிறவெறியாளர் இல்லை என்பதனை வெறும் ஒரு உடல் சைகை (Body Gesture) மூலம் நிரூபிப்பது தனக்கு புரியவில்லை எனக் குறிப்பிட்டிருப்பதோடு, தான் நிறவெறியாளர் எனில் பொய்யாக அந்த உடல் சைகையில் பங்கெடுத்திருக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

>>WATCH – அவுஸ்திரேலியா போட்டிக்கான தயார்படுத்தல்கள் எப்படி? கூறும் அசலங்க

அதோடு மேலும் தன்னுடன் கிரிக்கெட் விளையாட்டில் பழகியவர்களுக்கு தான் எவ்வாறானவர் என்பது குறித்து தெரியும் எனக் குறிப்பிட்டுள்ள குயின்டன் டி கொக் தவறான புரிதல் ஒன்றினால் தன்னை நிறவெறியர் என அழைப்பது வேதனையினை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்ததோடு, தன்னால் இயலுமானவரை இந்த விடயம் தொடர்பிலான விளக்கத்தினை தான் வழங்கியிருப்பதாகவும்  குறிப்பிட்டிருக்கின்றார்.

குயின்டன் டி கொக் தான் வழங்கியிருக்கும் இந்த விளக்கத்துடன் T20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணி விளையாடவுள்ள எஞ்சிய போட்டிகளில் பங்கெடுக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

இதேநேரம் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, T20 உலகக் கிண்ணத்தில் தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (29) இலங்கை வீரர்களை எதிர்கொள்கின்றது.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>