புனித ஜோசப் கல்லூரி கலிறுதிக்கு முன்னேற்றம்

171

17 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I பாடசாலை கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில் கொழும்பு, இசிபத்தன கல்லூரி அணி நிர்ணயித்த இலகுவான வெற்றி இலக்கை போராடிப் பெற்ற புனித ஜோசப் கல்லூரி காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I கிரிக்கெட் தொடரின் ஆரம்ப சுற்றில் 74 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த தொடர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளது. நடப்புச் சம்பியனான புனித செர்வாதியஸ் கல்லூரி முதல் சுற்றுடனேயே வெளியேறிய நிலையில் இம்முறை தொடரில் புதிய சம்பியன் அணி ஒன்று தெரிவாவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் 16 அணிகள் பங்கேற்றிருக்கு காலிறுதிக்கு முந்திய நொக் அவுட் சுற்று போட்டிகள் இன்று (18) ஆரம்பமாயின.

இதன்படி புனித ஜோசப் கல்லூரி தனது சொந்த மைதானத்தில் இசிபதன கல்லூரியை காலிறுதிக்கு தகுதிபெறும் நோக்கில் இன்று எதிர்கொண்டது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இசிபதன அணித்தலைவர் லேஷான் அமரசிங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

எதிரணிக்கு சவாலாக இருக்கும் அகிலவின் மாய சுழல்

பல்லேகலை மைதானத்தில் கடந்த வாரம் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரின் போது ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று…

எனினும் இசிபதன கல்லூரிக்கு ஆரம்பம் தொட்டே ஏமாற்றம். அந்த அணி விக்கெட்டுகள் சீரான இடைவெயில் வீழ ஆரம்பித்தது. 12 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட் பறிபோனதோடு மேலும் இரண்டு ஓட்டங்களை பெறுவதற்குள் இரண்டு விக்கெட்டுகள் சாய்ந்தன. தொடர்ந்து வந்த மத்திய வரிசை வீரர்களும் கைகொடுக்காத நிலையில் இசிபதன அணி 46.3 ஓவர்களுக்கு முகம்கொடுத்து 102 ஓட்டங்களுக்கே சுருண்டது.

பின்வரிசையில் வந்த யசிரு கஸ்தூரியாரச்சி ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களை பெற்றதே அதிகமாகும். இது தவிர, இசிபதன அணிக்காக மேலும் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றதோடு அதிலும் மத்திய வரிசை வீரர் இசுரு சதமால் 62 பந்துகளுக்கு 11 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புனித ஜோசப் கல்லூரி சார்பில் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் அஷான் டி அல்விஸ் 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இவர் விக்கெட் காப்பிலும் ஈடுபடும் திறமை மிக்கவராவார்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரியும் சளைக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப ஜோடி 12 ஓட்டங்களை பெறுவதற்குள் நடையை கட்டியதோடு அடுத்து வந்த வீரர்களும் நின்றுபிடிக்கவில்லை.

எனினும் மத்திய வரிசையில் துனித் வெல்லகே 41 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் பெற்ற 31 ஓட்டங்களும் புனித ஜோசப் கல்லூரியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இதனால் புனித ஜோசப் கல்லூரி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் குறைந்த ஓட்ட இலக்கு என்பதால் அதனை எட்ட முடிந்தது.

பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்ஷீடுக்கு 10 ஆண்டுகள் தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷீட், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு…

24.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த புனித ஜோசப் கல்லூரி வெற்றி இலக்கான 103 ஓட்டங்களை எட்டி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அந்த கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் சோபித்த வெல்லகே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி, கொழும்பு – 102 (46.3) – யசிரு கஸ்தூரியாரச்சி 25*, லொமித் நவிதித் 15, இசுரு சதமால் 11, அஷான் டி அல்விஸ் 3/16, யசித் ரூபசிங்க 2/15, மிரங்க விக்ரமகே 2/13

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு – 103/8 (24.2) – துனித் வெல்லகே 31, தெவிந்து திக்வெல்ல 2/10

முடிவு – புனித ஜோசப் கல்லூரி 2 விக்கெட்டுகளால் வெற்றி