சகல துறைகளிலும் சோபித்த இந்தியாவுக்கு தொடர் வெற்றி

99

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிராக நேற்று (24) நடைபெற்ற கடைசி இரண்டு டி-20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய கட்புலனற்றோர் அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றியது.

இலங்கை கட்புலனற்றோர் அணி எதிர் இந்திய கட்புலனற்றோர் அணி, 4ஆவது டி-20

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணித்தலைவர் தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் நாணய சுழற்சியில் வென்று இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இந்தியாவை வீழ்த்தி டி-20 தொடரை தக்கவைத்த இலங்கை

எனினும் சவாலான ஓட்டங்களை பெற தடுமாறிய இலங்கை கட்புலனற்றோர் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களையே பெற்றது. எவ்வாறாயினும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஓவர்களை வீச தாமதித்ததால் இலங்கைக்கு 6 தண்டப் புள்ளிகள் கிடைத்தன. இதனால் இலங்கை அணியின் ஓட்டங்கள் 148 ஆக அதிகரித்தது.  

சந்தன தேஷப்ரிய இலங்கை அணிக்காக அதிகபட்சம் 30 ஓட்டங்களை பெற்றார். அஜே ரெட்டி மற்றும் அமோல் சார்ச்சி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

149 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக ஆட 15.2 ஓவர்களில் 8 விக்கெட்டுள் மீதம் வைத்து இலக்கை எட்டியது. ஆரம்ப வரிசை வீரர்களான துர்கா ராவ் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை பொற்றதோடு அணித்தலைவர் அஜே ரெட்டி (37) மற்றும் நரேஷ் (30) ஆகியோர் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தனர்.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 148/9 (20) – சந்தன தேஷப்ரிய 30, அஜே ரெட்டி 2/20, அமோல் கார்ச்சி 2/27

இந்தியா – 152/2 (15.2) – துர்கா ராவ் 68*, அஜே ரெட்டி 37, நரேஷ் 30

முடிவு – இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை கட்புலனற்றோர் அணி எதிர் இந்திய கட்புலனற்றோர் அணி, 5ஆவது டி-20

கொழும்பு BRC மைதானத்தில் தொடர்ச்சியாக நடந்த கடைசிப் போட்டியிலும் மீண்டும் ஒருமுறை நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் எந்த தயக்கமும் இன்றி முதலில் பந்துவீச தீர்மானித்தார். கடைசி போட்டியை விடவும் துடுப்பாட்டத்தில் சோபித்த இலங்கை கட்புலனற்றோர் அணி 20 ஓவர்களுக்கும் அதிரடியாக துடுப்பாடி 189 ஓட்டங்களை விளாசியது. தொடர்ந்து சோபித்து வரும் சந்தன தேஷப்ரிய மற்றும் அஜித் சில்வா மீண்டும் துப்பாட்டத்தில் சாகசம் நிகழ்த்தி முறையே 80 மற்றும் 64 ஓட்டங்களை பெற்றனர்.  

சவாலான 190 ஓட்டங்களை துரத்திய இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 16 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் சோபிக்க தவறிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் ரமேஷ் இந்த போட்டியில் சதம் குவித்தார். இந்திய அணித்தலைவர் அஜே ரெட்டி மறுமுனையில் அவருக்கு உதவியாக துடுப்பாடி 66 ஓட்டங்களை பெற்றார்.

தென்னாபிரிக்க ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இதன்படி ஐந்தாவது டி-20 போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய கட்புலனற்றோர் அணி தொடரை 4-1 என வென்றது. எனினும் இலங்கை அணி இந்திய கட்புலனற்றோர் அணியுடனான ஒருநாள் தொடரை வென்றமை குறிப்பிடத்தக்கது. போட்டிக்கு பின்னரான பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற உலகக் கிண்ணத்தை வென்று தந்த அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க வீரர்களுக்கான பரிசுகளை வழங்கினார்.    

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 189/5 (20) – சந்தன தேஷப்ரிய 80, அஜித் சில்வா 64, அக்பர் அன்ஸார் 1/19

இந்தியா – 190/0 (16) – சுனில் ரமேஷ் 107*, அஜே ரெட்டி 66*

முடிவு – இந்தியா 10 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க …