இலங்கை பிரீமியர் லீக் ஆரம்ப போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய கயான் சிரிசோம

1096
SLC Premier League - Tier B

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் B தரத்திலான அணிகளுக்கான ஆரம்பப் போட்டிகளாக இன்று 3 போட்டிகள் இடம்பெற்றன.

ஏற்கனவே கடந்த மாத இறுதிப் பகுதியில் இப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், அப்பொழுது நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக அப்போட்டிகள் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பு

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இந்த வாரம் ஆரம்பிக்க இருந்த 2016/17ஆம் பருவகால இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக்.

பாணதுறை விளையாட்டுக் கழகம்  எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பொலிஸ் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய பாணதுறை விளையாட்டுக் கழகம் 59.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து  263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாணதுறை விளையாட்டுக் கழகம் சார்பாக மிஷேன் சில்வா கூடிய ஓட்டங்களாக 6௦ ஓட்டங்களைப் பதிவு செய்தார். பந்து வீச்சில் பொலிஸ் அணியை சேர்ந்த மயேஷ் பிரியதர்சன 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பாணதுறை விளையாட்டுக் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய கயான் சிரிசோம 38 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் : 263 (59.2) – மிஷேன் சில்வா 6௦, சரிக்க புத்திக 44*, நிசல் ரண்டிக்க 37, சமர சில்வா 29, மயேஷ் பிரியதர்சன 62/3, சுவஞ்சி மதநயக்க 76/3

 பொலிஸ் விளையாட்டுக் கழகம் : 97/(27.3) – கயான் சிரிசோம 38 /9


SLPA கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற SLPA கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய விமானப்படை விளையாட்டுக் கழகம் 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சிறப்பாகத் துடுப்பாடிய உடயவன்ச பாராக்ரம, அணி சார்பாக 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

நேர்த்தியாக பந்து வீசிய யோஹான் டி சில்வா 2௦ ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய SLPA கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் : 172(45.1) – உடயவன்ச பாராக்ர்ரம 76, யோஹான் டி சில்வா 2௦/3, சமிந்த பண்டார 37/2, சமிக்கற எதிரிசிங்க 37/2, அக்கலங்கா கனேகம 39/2

SLPA கிரிக்கெட் கழகம்: 86/1(22) – யோஹான் டி சில்வா 31* இஷான் ரங்கன 26* ஹசான் குணதிலக்க 24


குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

இந்தப் போட்டியிலும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகல இளையோர் அணி முதலில் களத்தடுப்பையே தெரிவு செய்தது. இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் சார்பாக களமிறங்கிய புத்திக ஹசரங்க, தனது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 72 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணி தமது இன்னிங்ஸ் நிறைவில் 71 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 297  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய அனுராதா ராஜபக்ஷ 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து  குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது 83 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்தது.

அவ்வணி சார்ப்பாக  ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தனுஷ்க தர்மசிறி ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் : 297(71) – புட்டிக ஹசரங்க 72, குசல் எதுரிசூரிய 61, சமீர சந்தமல் 48, அஷான் ரணசிங்க 46, அனுராதா ராஜபக்ச 42/3 ஹிரத் மப்படுன 63/3

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் :  83/1 (17) தனுஷ்க தர்மசிறி 44*    

இந்த மூன்று போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> போட்டி அட்டவணை <<