Home Tamil கேன் வில்லியம்சனின் அபார சதத்தோடு நியூசிலாந்து வெற்றி

கேன் வில்லியம்சனின் அபார சதத்தோடு நியூசிலாந்து வெற்றி

Sri Lanka tour of New Zealand 2023

132
Sri Lanka tour of New Zealand 2023

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 2 விக்கெட்டுக்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

அத்துடன் நியூசிலாந்து அணியானது இப்போட்டி வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

இதேநேரம் இப்போட்டியில் தோல்வி அடைந்ததனை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றது.

>> மெதிவ்ஸின் சதத்தோடு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை

கிறைஸ்ட்ச்சேர்ச் நகரில் நடைபெற்று வந்த இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்த போது இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸை (302) அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 286 ஓட்டங்களை பெறுவதற்கு, இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து சற்று தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த டொம் லேதம் 11 ஓட்டங்களைப் பெற்றிருக்க, கேன் வில்லியம்சன் 7 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இன்று (13) போட்டியின் ஐந்தாம் நாளில் ஆரம்பம் முதலே போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டிருந்தது. இதனால் இன்றைய நாளில் வீசப்படவிருந்த ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, ஐந்தாம் நாளின் மதிய போசணத்தின் பின்னரே போட்டியும் ஆரம்பித்தது.

போட்டி ஆரம்பித்த பின்னர் நியூசிலாந்திற்கு போட்டியின் வெற்றிக்காக 257 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரபாத் ஜயசூரிய இரண்டு துரித விக்கெட்டுக்களை கைப்பற்றி நியூசிலாந்து அணிக்கு சற்று அழுத்தம் வழங்கியிருந்தார். பிரபாத் ஜயசூரியவின் முதல் விக்கெட்டாக மாறிய டொம் லேதம் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜயசூரியவின் இரண்டாவது விக்கெட் இரையாகிய ஹென்ரி நிக்கோல்ஸ் 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதனை அடுத்து களத்தில் இருந்த கேன் வில்லியம்சன் மற்றும் புதிய துடுப்பாட்டவீரரான டேரைல் மிச்சலுடன் இணை்நது நியூசிலாந்து அணியினை துடுப்பாட்டத்தில் பலப்படுத்தியிருந்தனர். இரண்டு வீரர்களும் நியூசிலாந்து அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 142 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்திற்குள் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 27ஆவது சதத்தினைப் பதிவு செய்தார்.

>> டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறப்பட்ட த்ரில் வெற்றிகள்

இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு போட்டியின் வெற்றி இலக்கினை நியூசிலாந்து நெருங்கிய நிலையில் அசித்த பெர்னாண்டோ, டேரைல் மிச்சலின் விக்கெட்டினைக் கைப்பற்றி போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தினார். டேரைல் மிச்சல் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 8ஆவது அரைச்சதத்துடன் 86 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் மேலும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி அசித பெர்னாண்டோ நெருக்கடி வழங்கிய நிலையில், அவருக்கு லஹிரு குமாரவும் கைகொடுக்க நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 280 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாளின் இறுதி இரண்டு பந்துகளுக்கும் ஒரு ஓட்டம் தேவைப்பட, அந்த இறுதி ஓட்டத்தினை போட்டியின் இறுதிப் பந்தில் நியூசிலாந்து அணி பெற்று போட்டியின் வெற்றி இலக்கான 286 ஓட்டங்களை 70 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்தது அடைந்தது. அத்துடன் இது நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் விரட்டிய மூன்றாவது அதி கூடிய வெற்றி இலக்காகவும் காணப்படுகின்றது.

நியூசிலாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 235 பந்துகளில் 115 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்திருந்தனர்.

>> இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வெளியேறும் நியூசிலாந்து வீரர்

முன்னர் குறிப்பிட்டதன் அடிப்படையில் இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கு இருந்த வாய்ப்பினை இலங்கை கிரிக்கெட் அணியானது முழுமையாக இழக்கின்றது. எனவே தற்போது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் காணப்படும் இந்திய அணியானது அவுஸ்திரேலிய அணியுடன் 2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொள்கின்றது.

இதேவேளை போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் டேரைல் மிச்சல் தெரிவாகியிருந்தார். அடுத்ததாக இலங்கை-நியூசிலாந்து

அணிகள் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 17ஆம் திகதி வெலிங்டன் நகரில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


New Zealand
373/10 (107.3) & 285/8 (70)

Sri Lanka
355/10 (92.4) & 302/10 (105.3)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Tom Blundell b Tim Southee 13 31 2 0 41.94
Dimuth Karunaratne c Tom Latham b Matt Henry 50 87 7 0 57.47
Kusal Mendis lbw b Tim Southee 87 83 16 0 104.82
Angelo Mathews c Mitchell Santner b Matt Henry 47 98 6 1 47.96
Dinesh Chandimal c Tom Latham b Tim Southee 39 64 6 0 60.94
Dhananjaya de Silva c Tom Blundell b Tim Southee 46 59 5 1 77.97
Niroshan Dickwella lbw b Michael Bracewell 7 13 1 0 53.85
Kasun Rajitha c William Somerville b Matt Henry 22 39 4 0 56.41
Prabath Jayasuriya c Tom Blundell b Matt Henry 13 40 0 0 32.50
Lahiru Kumara not out 13 32 2 0 40.62
Asitha Fernando  lbw b Tim Southee 10 10 2 0 100.00


Extras 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0)
Total 355/10 (92.4 Overs, RR: 3.83)
Bowling O M R W Econ
Tim Southee 26.4 10 64 5 2.42
Matt Henry 26 8 80 4 3.08
Blair Tickner 20 2 103 0 5.15
Neil Wagner 10 1 68 0 6.80
Daryl Mitchell 7 3 17 0 2.43
Michael Bracewell 3 0 17 1 5.67
Batsmen R B 4s 6s SR
Tom Latham b Asitha Fernando  67 144 7 0 46.53
Devon Conway lbw b Asitha Fernando  30 88 2 0 34.09
Kane Williamson c Dimuth Karunaratne b Lahiru Kumara 1 11 0 0 9.09
Henry Nicholls c Kasun Rajitha b Lahiru Kumara 2 6 0 0 33.33
Daryl Mitchell c Niroshan Dickwella b Lahiru Kumara 102 193 6 2 52.85
Tom Blundell c Niroshan Dickwella b Kasun Rajitha 7 22 0 0 31.82
Michael Bracewell c Niroshan Dickwella b Prabath Jayasuriya 25 57 2 0 43.86
Tim Southee c Lahiru Kumara b Kasun Rajitha 25 20 3 1 125.00
Matt Henry b Asitha Fernando  72 75 10 3 96.00
Neil Wagner c Dhananjaya de Silva b Asitha Fernando  27 24 1 3 112.50
Blair Tickner not out 2 5 0 0 40.00


Extras 13 (b 4 , lb 6 , nb 0, w 3, pen 0)
Total 373/10 (107.3 Overs, RR: 3.47)
Bowling O M R W Econ
Kasun Rajitha 31 10 104 2 3.35
Asitha Fernando  29.3 5 85 4 2.90
Lahiru Kumara 25 5 76 3 3.04
Dhananjaya de Silva 9 2 34 0 3.78
Angelo Mathews 3 0 18 0 6.00
Prabath Jayasuriya 10 1 46 1 4.60
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Tom Blundell b Blair Tickner 28 52 4 0 53.85
Dimuth Karunaratne c Henry Nicholls b Blair Tickner 17 45 1 0 37.78
Kusal Mendis c Michael Bracewell b Blair Tickner 14 55 1 0 25.45
Angelo Mathews c Tom Blundell b Henry Nicholls 115 235 11 0 48.94
Prabath Jayasuriya c Tom Blundell b Blair Tickner 6 32 0 0 18.75
Dinesh Chandimal b Tim Southee 42 107 2 0 39.25
Dhananjaya de Silva not out 47 73 7 0 64.38
Niroshan Dickwella c Tom Blundell b Matt Henry 0 4 0 0 0.00
Kasun Rajitha lbw b Matt Henry 14 21 2 0 66.67
Lahiru Kumara run out (Kane Williamson) 8 6 2 0 133.33
Asitha Fernando  c Kane Williamson b Tim Southee 0 3 0 0 0.00


Extras 11 (b 4 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 302/10 (105.3 Overs, RR: 2.86)
Bowling O M R W Econ
Tim Southee 26.3 9 57 2 2.17
Matt Henry 28 5 71 3 2.54
Blair Tickner 28 1 100 4 3.57
Neil Wagner 3 0 9 0 3.00
Daryl Mitchell 12 2 31 0 2.58
Michael Bracewell 8 1 27 0 3.38


Batsmen R B 4s 6s SR
Tom Latham b Prabath Jayasuriya 25 80 3 0 31.25
Devon Conway c & b Kasun Rajitha 5 16 0 0 31.25
Kane Williamson not out 121 194 11 1 62.37
Henry Nicholls c Kusal Mendis b Prabath Jayasuriya 20 24 1 0 83.33
Daryl Mitchell b Asitha Fernando  81 86 3 4 94.19
Tom Blundell b Asitha Fernando  3 5 0 0 60.00
Michael Bracewell c Chamika Karunaratne b Asitha Fernando  10 11 1 0 90.91
Tim Southee c Dhananjaya de Silva b Lahiru Kumara 1 2 0 0 50.00
Matt Henry run out (Kasun Rajitha) 4 3 0 0 133.33
Neil Wagner not out 0 0 0 0 0.00


Extras 15 (b 5 , lb 3 , nb 1, w 6, pen 0)
Total 285/8 (70 Overs, RR: 4.07)
Bowling O M R W Econ
Kasun Rajitha 17 5 61 1 3.59
Asitha Fernando  19 4 63 3 3.32
Prabath Jayasuriya 19 1 92 2 4.84
Lahiru Kumara 15 3 61 1 4.07



>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<