நான்கு நாடுகள் பங்குகொள்ளும் ஜப்பான் – தெற்காசிய கால்பந்து பரிமாற்றத் தொடரில், இலங்கை 16 வயதின் கீழான அணியை தலைமை தாங்க, மொஹமட் சஹீல் மற்றும் மொஹமட் றிகாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தொடரில் இலங்கை அணியுடன் சேர்த்து ஜப்பான், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் 16 வயதுக்கு கீழான அணிகளும் பங்குபெறுகின்றன. ஜப்பான் – தெற்காசிய 16 வயதுக்கு உட்பட்ட கால்பந்து (வீரர்களின்) பரிமாற்ற நிகழ்ச்சி திட்டத்தின் பகுதியான இந்த தொடர், மார்ச் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஜப்பான் உட்பட 3 நாடுகளுடன் மோதவுள்ள இலங்கை 16 வயதின்கீழ் அணி

ஜப்பான் நாட்டு வீரர்களின் உயர்தரமான ஆட்டம் காரணமாக இத்தொடரில் பங்குபெறும் ஏனைய மூன்று நாடுகளும் தங்கள் குழாமில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் ஐவரினை சேர்க்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என ThePapare.com இற்கு அறியக்கூடியதாக உள்ளது.

எனவே, இலங்கை குழாமில் இஷான் தனுஷ, மொஹமட் சஹீல், மொஹமட் இஷான், மகேந்திரன் தினேஷ் மற்றும் ஜுட் சுமன் ஆகிய வீரர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள், ஜப்பான் அணியுடனான போட்டியில் மாத்திரமே அனுமதிக்கப்படுவதோடு, ஏனைய நாடுகள் உடனான போட்டிகளில் மொஹமட் றிகாஸ் தலைமையிலான இலங்கை 16 வயதுக்கு கீழான அணியே விளையாடவுள்ளது.

“நாங்கள் இத்தொடரில், ஜப்பான் நாட்டுடன் எங்களிற்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டிக்காகவே அதிக அக்கரை செலுத்துகின்றோம். நாங்கள் ஜப்பான் உடனான போட்டியில், அவ்வணியினை சரியான முறையில் எதிர் கொள்பவர்களாக செயற்படுவோம். எதிரணியினை தடுத்தாட கையாளும் உத்திகள் மிகவும் முக்கியமானவை. அத்துடன், ஜப்பான் அணியானது அதிகம் பலமுடைய அணிகளில் ஒன்றாகும்“ என இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சுசுகி சிகாக்ஸி ThePapare.com இற்கு பிரத்தியேகமாக தெரிவித்திருந்தார்.

 

“எங்கள் அணியில், கோல் காப்பாளருடன் சேர்த்து முக்கிய நான்கு வீரர்கள் சிறப்பாக ஆடக்கூடியவர்களவாக இருக்கின்றனர். மேலும் தினேஷ் மகேந்திரன் தனது கோல்காப்பாளர் பொறுப்பினை திறம்பட செய்து வரும் ஒருவர். அத்துடன், பயிற்சி நேரங்களின் போது, சஹீல் மற்றும் இஷான் ஆகியோர் பின்களத்தின் மத்தியில் அசத்தலாக செயற்பட்டிருந்தனர்.“

என தமது தடுப்பாட்ட வீரர்கள் பற்றி  இலங்கை 16 வயதுக்கு கீழான அணியின் தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார்.

“பந்து எங்களுக்கு கிடைக்கும் தருணத்தில் கவுண்டர் தாக்குதல் செய்வது முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. நாம் கவுண்டர் தாக்குதல் நடாத்தும் வேளையில், அதனை மொஹமட் முர்ஷித் ஒருவராக இருந்து நெறிப்படுத்தி செல்வார் என எதிர்பார்க்க்கிறோம்“

என சுசுகி சிகாக்ஸி தமது அணியின் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றி  தெரிவித்திருந்தார்.

ஜப்பான் அணி, இலங்கைக்கு சவாலாக இருப்பினும் இலங்கை அணி, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய அணிகளுடனான போட்டியில் வெற்றி பெறுவதில் உறுதியாக உள்ளது.

“இரு அணிகளுடனும் (பூட்டான், நேபாளம்) ஒப்பிடும் போது, ஜப்பான் அதிசிறந்த அணிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு விதமான உக்தி தொகுதிகளை கையாளவுள்ளோம். அனைத்து போட்டிகளிலும் எமது தாக்குதல்களை அதிகரித்து செயற்படவுள்ளோம்.“

போட்டியை நேரடியாக பார்வையிட

ஆசிய கால்பந்து சங்கத்தின் (AFC இன்) A வகை அனுமதிப்பத்திரத்தினை (License) தன்னகத்தே உடைய மொஹமட் அஜ்வட் தனது சேவைகளை இலங்கை 16 வயதுக்கு கீழான அணிக்கு துணைத்தலைவராக செயற்பட்டு வழங்கவுள்ளார்.

“ஜப்பான் அணியானது எமக்கு அதிக சவால் தரும் அணியாகும். நாங்கள் கடந்த இருவாரங்களில் வீரர்களின் உடற்தகுதியிலும், கவுண்டர் தாக்குதல்களிலும் எதிர் தாக்குதல்களை விட அதிக கவனம் செலுத்தியிருந்தோம்“

என உப பயிற்சியாளரான மொஹமட் அஜ்வட் கூறியிருந்தார்.

“16 வயதுக்கு உட்பட்ட அணி வீரர்களான முஸ்பிர், சஹான், சமத் மற்றும் றிகாஸ் ஆகியோர் தமது ஆட்டங்களில் மேம்பட்டு வருகின்றனர், அத்துடன் அவர்கள் பயிற்சிகளின் போதும் திறம்பட செயற்பட்டிருந்தனர்“

எனக்கூறி அஜ்வத் தமது அணி சாதிக்கும் என்னும் தன்னம்பிக்கையினை வெளியிட்டிருந்தார்.

“நாங்கள் பயிற்சி வேளைகளின் போது, புதிய விடயங்களையும் உத்திகளையும் பெற்றிருந்தோம். ஒவ்வொரு பயிற்சி வேளையின் போதும், வீரர்கள் ஏதாவது புதிய நுட்பம் ஒன்றினை பெற்றுக் கொண்டவர்களாகவே இருந்திருந்தனர்”

இலங்கை குழாம்

மொஹமட் இஷான், மகேந்திரன் தினேஷ், ஜூட் சுமன், மொஹமட் சஹீல் (அணித்தலைவர்), மொஹமட் அப்ரான், சபீர் ரசூனியா, பிரனீத் சமிந்த, மொஹமட் முஸ்பிர், பாக்கியநாதன் ரெக்ஷோன், மொஹமட் பைஸர், மொஹமட் முர்ஸித், ஆகிப் பைஸல், விக்கும் அவிஷ்க, மொஹமட் உமர், மொஹமட் றிகாஸ் (அணித்தலைவர்), மொஹமட் ஆஷிக், மொஹமட் ஷிபான், H.M.J. சமோத், சமத் கொடித்துவக்கு, சந்தீப்ப வாஸ், ரவிகுமார் தனுஜன், D.K.V. சுலக்ஷன, தினேஷ் சுரேன், அப்துல்லாஹ் பாரிஸ், நபீல் நிஸாம், லுஷானே டி சில்வா, இஷான் தனுஷ, மொஹமட் சஹான்

சுசுகி சிகாக்ஸி (தலைமைப் பயிற்சியாளர்), மாமொரு நக்கானோ(உதவி பயிற்சியாளர்), மொஹமட அஜ்வட்(உதவி பயிற்சியாளர்), சம்பத் பண்டார(கோல் காப்பு பயிற்சியாளர்), நாலக்க திசநாயக்க(முகாமையாளர்), பிரசன்ன ஹெட்டியராச்சி(உடற்பயிற்சி நிபுணர்)