அங்குரார்ப்பண உலகக் கிண்ண மெய்வல்லுனர் போட்டிகள் லண்டனில்

104
Inaugural Athletics World Cup

மெய்வல்லுனர் போட்டிகளுக்கான உலகக் கிண்ணமொன்றை நடத்தவுள்ளதாக ஐக்கிய இராச்சிய மெய்வல்லுனர் சம்மேளனம் நேற்று(07) உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதன்படி, லண்டனில் இவ்வருடம் முதல் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் உலகக் கிண்ணப் போட்டிகள் மெய்வல்லுனர் விளையாட்டில் முன்னிலை வகிக்கும் எட்டு நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியும் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிகளும் நடைபெறும் அதே காலப் பகுதியான ஜுலை மாதத்திலேயே அங்குரார்ப்பண மெய்வல்லுனர் உலகக் கிண்ணப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

பொதுநலவாய தொடருக்கான தேசிய மெய்வல்லுனர் குழாமில் அஷ்ரப்

இவ்வருடத்திற்கான பொதுநலவாய நாடுகளின்..

இதன்படி, லண்டன் ஒலிம்பிக் பார்க் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, தென்னாபிரிக்கா, போலந்து, பிரான்ஸ், சீனா, ஜேர்மனி, ஜமைக்கா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளடதுடன், ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் தலா 45 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து வகையான மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த மெய்வல்லுனர் வீரர் ஒருவரும், மெய்வல்லுனர் வீராங்கனை ஒருவரும் 1,500 மீற்றர் வரையான சுவட்டு, மைதான போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். இப்போட்டிகளில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்குவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரித்தானியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுகூரும் வகையில் அங்குரார்ப்பண மெய்வல்லுனர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் நாடுகள் தமது அணித் தலைவராக மெய்வல்லுனர் வீராங்கனை ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாம் இடத்தைப் பெறும் அணிக்கு 450,000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படும். அத்துடன் எட்டாம் இடம்வரை பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன் கடைசி அணிக்கு பரிசாக 100,000 அமெரிக்க டொலர் கிடைக்கும்.

பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும்..

இதுதவிர வழமைபோல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதங்கங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் பிரித்தானிய நேரப்படி இரவு 7.00 மணிமுதல் 10.00 மணிவரை நடைபெறும்.

இதேநேரம், உலகெங்கிலுமுள்ள பல கோடி கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜுலை 15ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், உலகின் மிகவும் பழமையான கிரான்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் ஜுலை 2ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அது போன்றே கால்பந்து, டென்னிஸ் ஆகிய பிரபலமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற காலப்பகுதியில் அங்குரார்ப்பண உலகக் கிண்ண மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.