இந்தியாவில் நடைபெற்று வரும் 9ஆவது ஐ.பி.எல். கிரிக்கட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அவுஸ்திரேலிய அணியின் இடதுகைத் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் முதுகுவலி காரணமாக ஐ.பி.எல். கிரிக்கட் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்குப் பதிலாக இதுவரை காலமும் ஐ.பி.எல். போட்டிகளில் ஏலம் போகாத தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான 33 வயது நிரம்பிய ஹஷிம் அம்லா பஞ்சாப் அணியில் இணைய உள்ளார்.
எல்லாமாக 88 டி20 போட்டிகளில் பங்குபற்றியுள்ள அம்லா 31.35 என்ற துடுப்பாட்ட சராசரியோடு 16 அரைச் சதங்கள் அடங்கலாக 2446 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஓட்டங்கள் ஆட்டம் இழக்காமல் 97 பெற்றிருந்தமையாகும். நடந்து முடிந்த டி20 போட்டித் தொடரில் 4 போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 2 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்