Home Tamil சகலதுறையிலும் பிரகாசித்த ஜோசப் கல்லூரிக்கு ஒருநாள் வெற்றி

சகலதுறையிலும் பிரகாசித்த ஜோசப் கல்லூரிக்கு ஒருநாள் வெற்றி

Battle of the Saints – 47th Limited Overs Cricket Encounter

180

லஹிரு அமரசேகரவின் அபார பந்துவீச்சு மற்றும் நிரான் ஜயசுந்தர, மிதிர தேனுர ஆகியோரது அரைச்சதங்களின் உதவியால் அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 85 ஓட்டங்களால் மருதானை புனித ஜோசப் கல்லூரி அணி வெற்றியீட்டியது.

மருதானை புனித ஜோசப் கல்லூரிக்கும், பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரிக்கும் இடையிலான 47ஆவது அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த  கிண்ண ஒருநாள் போட்டி இன்று (16) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மருதானை புனித ஜோசப் கல்லூரி அணித் தலைவர் ஷெரான் பொன்சேகா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஜோசப் கல்லூரியின் முன்வரிசை வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறியிருந்தாலும், நிரான் ஜயசுந்தர மற்றும் மிதிர தேனுரவின் அரைச்சதங்களின் உதவியுடன் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோசப் கல்லூரிக்காக மத்திய வரிசையில் வந்த நிரான் ஜயசுந்தர 58 ஓட்டங்களையும், மிதிர தேனுர 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

Victorious St. Joseph’s retain Joe-Pete limited-overs shield

புனித பேதுரு கல்லூரியின் பந்துவீச்சில் தனால் சமெல்க டி சில்வா மற்றும் தனால் ஹேமானந்த ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

200 ஓட்டங்கள் என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி வீரர்கள் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணி சார்பாக ஆரம்ப வீரர் nஷனால் பொதேஜு 48 ஓட்டங்களையும், நிபுன பொன்சேகா 31 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று நம்பிக்கையளித்த போதிலும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, புனித பேதுரு கல்லூரி 115 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட புனித ஜோசப் கல்லூரியின் லஹிரு அமரசேகர 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, தேஷhன் செனவிரட்ன மற்றும் யெசித் ரூபசிங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதன்படி மருதானை புனித ஜோசப் கல்லூரி 85 ஓட்டங்களினால் வெற்றியீட்டி இந்த ஆண்டு புனிதர்களின் ஒருநாள் சமரில் அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த  கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இதன்மூலம் புனிதர்களின் ஒருநாள் கிண்ணத்தை புனித ஜோசப் கல்லூரி அணி தொடர்ச்சியாக 3ஆவது தடவையாகக் கைப்பற்றி அசத்தியது. அந்த அணி இறுதியாக 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photos – 47th Joe-Pete Limited Overs Encounter

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை ஜோசப் கல்லூரியின் ஹிரான் ஜயசுந்தர பெற்றுக்கொள்ள, சிறந்த களத்தடுப்பாளராக ஷெரான் பொன்சேகாவும், போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை அதே கல்லூரியின் லஹிரு அமரசேகர பெற்றுக்கொண்டார்.

அதேபோல, சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது புனித பேதுரு கல்லூரியின் தனால் ஹேமானந்தவுக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, இவ்விரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் 87ஆவது தடவையாக நடைபெற்ற புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.


Result


St. Peter’s College
115/10 (35.2)

St. Joseph’s College
200/10 (49.1)

Batsmen R B 4s 6s SR
Sheran Fonseka c Monil Silva b Danal Hemananda 18 35 0 0 51.43
Yesith Rupasinghe c Nipunaka Fonseka b Chamelka De SIlva 0 3 0 0 0.00
Hirun Kapurubandara lbw b Danal Hemananda 0 2 0 0 0.00
Niran Jayasundara c Niman Umesh b Shelon Rodrigo 58 101 0 0 57.43
Mithira Thenura c Shelon Rodrigo b Chamelka De SIlva 52 89 0 0 58.43
Dinal Anuradha lbw b Danal Hemananda 30 39 0 0 76.92
Shenuka De Silva st b Nimuthu Gunawardene 11 9 0 0 122.22
Keneth Liyanage c Lahiru Dewatage b Danal Hemananda 7 11 0 0 63.64
Deshan Seneviratne run out () 1 2 0 0 50.00
Lahiru Amarasekara b Nimuthu Gunawardene 3 4 0 0 75.00
Yenula Dewthusa not out 0 0 0 0 0.00


Extras 20 (b 0 , lb 13 , nb 1, w 6, pen 0)
Total 200/10 (49.1 Overs, RR: 4.07)
Bowling O M R W Econ
Danal Hemananda 10 2 30 2 3.00
Vinuda Liyanage 2 0 16 0 8.00
Nimuthu Gunawardene 8.1 1 29 1 3.58
Chamelka De SIlva 7 1 27 2 3.86
Shelon Rodrigo 10 0 42 1 4.20
Monil Silva 10 0 27 0 2.70
Niman Umesh 2 0 12 0 6.00


Batsmen R B 4s 6s SR
Shenal Boteju c Yesith Rupasinghe b Lahiru Amarasekara 48 59 0 0 81.36
Vishen Halambage b Deshan Seneviratne 0 2 0 0 0.00
Lahiru Dewatage lbw b Deshan Seneviratne 9 21 0 0 42.86
Nimuthu Gunawardene c & b Yesith Rupasinghe 0 1 0 0 0.00
Nipunaka Fonseka b Yesith Rupasinghe 31 69 0 0 44.93
Vinuda Liyanage c Sheran Fonseka b Lahiru Amarasekara 1 6 0 0 16.67
Niman Umesh st b Lahiru Amarasekara 6 10 0 0 60.00
Danal Hemananda c Sheran Fonseka b Lahiru Amarasekara 14 27 0 0 51.85
Shelon Rodrigo b Lahiru Amarasekara 0 3 0 0 0.00
Monil Silva c & b Yenula Dewthusa 0 3 0 0 0.00
Chamelka De SIlva not out 0 11 0 0 0.00


Extras 6 (b 0 , lb 1 , nb 0, w 5, pen 0)
Total 115/10 (35.2 Overs, RR: 3.25)
Bowling O M R W Econ
Deshan Seneviratne 4 0 14 2 3.50
Yenula Dewthusa 7 0 22 1 3.14
Yesith Rupasinghe 7.2 0 17 2 2.36
Mithira Thenura 1 0 5 0 5.00
Lahiru Amarasekara 10 0 36 5 3.60
Shenuka De Silva 6 0 20 0 3.33



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<