தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது தேசிய சாதனை முறியடிப்பு

64

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான இன்று (24) காலை நடைபெற்ற பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சானிகா மனோஜி, புதிய போட்டிச் சாதனையையும் புதிய தேசிய சாதனையையும் நிகழ்த்தினார்.    

மேல் மாகாணத்தை வீழ்த்திய கிழக்கு மாகாணத்திற்கு வரலாற்று வெற்றி

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின்…

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அயேஷா மதுவன்தி இம்மாத முற்பகுதியில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் 48.08 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். எனினும் அவருக்கு மிகப் பெரிய போட்டியாக, கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தென் மாகாணத்தைச் சேர்ந்த சானிகா மனோஜி அமரசிங்க விளங்கினார்.

அதிலும் குறிப்பாக அயேஷா, இன்று நடைபெற்ற சம்மெட்டி எறிதலில் தனது தனிப்பட்ட சிறந்த போட்டித் தூரத்தைப் பதிவு செய்ததுடன், அதனைத் தொடர்ந்து 43.36 மீற்றர் தூரத்தை எறிந்து கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் போட்டி சாதனை நிகழ்த்திய சானிகா மனோஜி அமரசிங்கவினால் நிகழ்த்தப்பட்ட சாதனையையும் முறியடித்தார்.

மறுபுறத்தில் அயேஷாவுக்கு கடந்த காலங்களில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் சவாலாக இருந்த சானிகா மனோஜி அமரசிங்க, தனது சொந்த ஊரில், புதிய தேசிய மற்றும் போட்டி சாதனையுடன் அயேஷா மதுவன்தியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 48.76 மீற்றர் தூரம் எறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஊவாக மாகாணத்தைச் சேர்ந்த அயேஷா மதுவன்தி (43.36 மீற்றர் தூரம்) வெள்ளிப் பதக்கத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏ.ஏ லக்ஷிகா, 42.86 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

லயனெலுக்கு 2ஆவது தங்கம்

ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக 7ஆவது தடவையாக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த லயனெல் சமரஜீவ தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டித் தூரத்தை 14 நிமிடங்கள் 59.35 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்திலும் தொடர்ச்சியாக 7ஆவது தடவையாக லயனெல் சமரஜீவ தங்கப் பதக்கம் வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் சபரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஏ.கே தரங்க வெள்ளிப் பதக்கத்தையும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஜி.கே பண்டார வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சபரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிலானி ஆரியதாஸ தங்கப் பதக்கம் வென்றார்.அவர் குறித்த போட்டித் தூரத்தை 36 நிமிடங்கள் 56.54 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Manjulaஉயரம் பாய்தலில் மஞ்சுளவுக்கு தங்கம்

ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் மாகாணத்தைச் சேர்ந்த மஞ்சுள குமார தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 2.18 மீற்றர் தூரம் பாய்ந்து தொடர்ச்சியாக 8ஆவது தடவையாகவும், தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 10ஆவது முறையாகவும் தங்கப்பதக்கம் வென்று புதிய மைல்கல்லை எட்டினார்.

தேசிய மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணம் இரண்டாவது நாளிலும் அபாரம்

ஆண்களுக்கான அஞ்சலோட்டப்…

துர்க்மெனிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற மஞ்சுள குமார, தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தென் மாகாணத்தில் நடைபெறுகின்றதும், தான் இறுதியாக பங்குபற்றவுள்ள தேசிய விளையாட்டு விழா போட்டியிலும் கலந்துகொள்ள நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இந்நிலையிலேயே, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தலில் அவர் தங்கம் வென்று அசத்தினார்.

இப்போட்டியில், தென் மாகாணத்தைச் சேர்ந்த இன்திக உதயகுமார (2.01 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், சபரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.டி ரணதுங்னக(2.01 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.