T20I தொடருக்காக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை

Sri Lanka tour of Australia 2022

168

இலங்கை அணிக்கு எதிரான ஐந்து T20I போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளமையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் (19) உறுதிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த பருவகாலத்தில் சொந்த மண்ணில் விளையாடவுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. குறித்த இந்த போட்டி அட்டவணையில், இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடர் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில் இருந்து விலகும் மதிவாணன் தரப்பு

அதன்படி, எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், அவுஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. முதல் போட்டி பெப்ரவரி 11ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன். இரண்டாவது போட்டி 13ம் திகதி, மூன்றாவது போட்டி 15ம் திகதி, நான்காவது போட்டி 18ம் திகதி மற்றும் இறுதி T20I போட்டி 20ம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டிகள் அனைத்தும் முறையே சிட்னி கிரிக்கெட் மைதானம், தி கெப்பா, மெட்ரிகன், அடிலெய்ட் ஓவல் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியுடன் பருவகாலத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன். ஆஷஷ் டெஸ்ட் தொடர் டிசம்பர் 8 முதல் ஜனவரி 18ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் ஒரு T20I போட்டிக்கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. குறித்த இந்த தொடரையடுத்து இலங்கை அணிக்கு எதிரான தொடர் ஆரம்பமாகின்றது.

இலங்கை அணி தங்களுடைய அடுத்த சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளதுடன், குறித்த இந்த தொடரையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…