19 வயதிற்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்கான நான்கு போட்டிகள் நேற்றைய தினம் நடைபெற்றன.

கிழக்கு மாகாணம் எதிர் தென் மாகாணம்

பனாகொட ராணுவ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், தென் மாகாணம் இலகுவாக வெற்றியீட்டியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாணம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக அலன் டொனால்ட்

அந்த வகையில், களமிறங்கிய அவ்வணி தென் மாகாண அணியின் அதிரடி பந்து வீச்சின் மூலம் தொடர்ச்சியாக, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தமையினால், 48.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது.

அவ்வணி சார்பாக தினுக்க டில்ஷான்  அதிக பட்ச ஓட்டங்களாக 54 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், பந்து வீச்சில் அதிரடி காட்டிய அவிந்து தீக்ஷன 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் மாகாணம் 16 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக ஹன்சக்க  வெலிஹிந்த  ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

கிழக்கு மாகாணம்: 146/10 (48.3) – தினுக்க டில்ஷான்  54, ஜே. நிதேஷ் 27, அவிந்து தீக்ஷன  4/27, சசித்  மதுரங்க 3/24

தென் மாகாணம்: 147/2 (16) ஹன்சக்க  வெலிஹிந்த  53*, தனஞ்சய லக்ஷான் 50, அவிந்து தீஷன 29*


வட மாகாணம் எதிர் வட மேல் மாகாண

கொழும்பு, சிசிசி மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், வட மேல் மாகாண அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வட மேல் மாகாண அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய வட மாகாண அணி, எதிரணியின் அதிரடிப் பந்து வீச்சில் 24 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய ரந்தீர ரணசிங்க 28 ஓட்டங்குக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய வட மேல் மாகாண அணிக்கு குறித்த இலக்கை எட்டுவது இலகுவாக அமையவில்லை. ஆரம்பத்தில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டனான சூழ்நிலையில் அணி இருந்தபோது களமிறங்கிய கவிந்து இஷாரா மற்றும்  துலாஜ் ரணதுங்க  ஆகியோர் இணைந்து முறிக்கப்படாத 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடாத்தினர்.

எனினும் எதிரணிக்கு கடும் சவால் கொடுத்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி வீரர் கபில்ராஜ் 2 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

வட மாகாணம்:  75/10 (24) ரந்தீர ரணசிங்க  4/28, வணித வணிகநாயக்க 3/13, நிபுன் தனஞ்சய  2/12

வட மேல் மாகாணம்: 76/4 (16.2) கவிந்து இஷாரா  25*, துலாஜ் ரணதுங்க  24*, கே. கபில்ராஜ்  2/30

சகல துறையிலும் பிரகாசித்த அசெல் சிகெரா

மேல் மாகாண வடக்கு எதிர் மேல் மாகாண மத்தி

மக்கோன, சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் மேல் மாகாண வடக்கு அணி  வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண வடக்கு அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி மகேஷ் தீக்ஷனவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஒவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்களை வெற்றி இலக்காக பதிவு செய்தது.

பின்னர் குறித்த இலக்கை நோக்கி களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணிக்கு சந்தோஷ் குணதிலக்க 55 ஓட்டங்களுடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்டுத்தார். எனினும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவறியதன் காரணமாக அவ்வணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

அதேநேரம், மேல் மாகாண வடக்கு  அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அசெல் சிகர 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்    

மேல் மாகாண வடக்கு: 221/9 (50) மகேஷ் தீக்ஷன 74, லஹிறு அத்தனாயக்க  34, சஜித்  சமீர 31, விமுக்தி குலதுங்க 3/21, லக்ஷித முனசிங்க 2/39

மேல் மாகாண மத்தி: 208 (46.2) சந்தோஷ் குணதிலக்க 55, பசிந்து சூரியபண்டார 39, சஞ்சுல அபேவிக்ரம 35, லக்ஷித முனசிங்க 20, அசெல் சிகர 3/28, மகேஷ் தீக்ஷன 2/34


மேல் மாகாண தெற்கு எதிர் ஊவா மாகாணம்

வெலிசர, கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் மேல் மாகாண தெற்கு அணி 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண தெற்கு அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி 49.5 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பதிவு செய்தது.

அதிரடியாக துடுப்பாடிய கமில் மிஷ்சார வேகமாக 105 ஓட்டங்களை விளாசினார். அதேநேரம், கவிந்து உமயங்கன 65 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு பங்களிப்பு செய்தார். ஊவா மாகாண அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய பிரமுதித மதுபாஷ, சதுர மஹேல மற்றும் சசிக்க துல்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு

அந்த வகையில் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஊவா மாகாண அணி முதல் 15 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நவீன் ஹசரங்க பெறுமதியான 33 ஓட்டங்களைப் பெற்று பங்களிப்பு செய்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.

அதேநேரம், அதிரடியாக துடுப்பாடிய சசிக்க துல்ஷான்  75 ஓட்டங்களை விளாசினார். எனினும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றதால் வெற்றி இலக்கை 43 ஓட்டங்களால் தவற விட்டது ஊவா மாகாண அணி.

மேல் மாகாண தெற்கு அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தஷிக் பெரேரா 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்

போட்டியின் சுருக்கம்  

மேல் மாகாண தெற்கு: 268/10 (49.5) கமில் மிஷ்சார 105, கவிந்து உமயங்கன 65, நிஷான் மதுஷங்க 54, பிரமுதீத மதுபாஷ 2/28, சதுர மஹேல 2/34, சசிக்க துல்ஷான் 2/42

ஊவா மாகாணம் :  225/9 (50) சசிக்க துல்ஷான்  75, நவீன் ஹசரங்க 33,அதிதிய சந்தருவான் 22, தஷிக் பெரேரா  3/42, ரொஷான் சஞ்சய  2/42, அஷான் டில்ஹார 2/48