வர்த்தக சங்க ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சம்பியன்களாக HNB அணி

122

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 29 ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் வர்த்தக சங்க (MCA) ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (A) அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, ஹட்டன் நஷனல் வங்கி (HNB) அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

>> ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த முதல் இரு T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகள்!

MCA மைதானத்தில் இன்று (05) ஆரம்பமாகிய இந்த இறுதிப் போட்டிக்கு தொடரின் அரையிறுதி போட்டிகளில் Mode Engineering அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்திய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியும், CDB அணியினை 2 விக்கெட்டுக்களால் வீழ்த்திய HNB அணியும் தெரிவாகின.

இறுதிப் போட்டி அணிக்கு 30 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்ற நிலையில், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற HNB அணி முதலில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியினை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி 30 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை எடுத்தது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சஜித்த ஜயத்திலக்க 43 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 63 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம் அரைச்சதம் தாண்டிய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம 45 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>> இலங்கை – அவுஸ்திரேலிய தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

மறுமுனையில் HNB அணியின் பந்துவீச்சு சார்பாக டில்ஷான் முனவீர 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 219 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய HNB அணி போட்டியின் வெற்றி இலக்கினை 26.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து பெற்றுக்கொண்டது.

HNB அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் வீரர்களின் துடுப்பாட்டத்தில் மாதவ வர்ணபுர வெறும் 32 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக அதிரடியான முறையில் 86 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, கசுன் அபேரத்ன 79 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம் 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 218/6 (30) – சஜித்த ஜயத்திலக்க 63(43), சதீர சமரவிக்ரம 52(45), டில்ஷான் முனவீர 31/3(6)

HNB – 219/3 (26.3) – மாதவ வர்ணபுர 86*(32), கசுன் அபேரத்ன 88*(79)

முடிவு – HNB அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<