BRC அணிக்காக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்த மொஹமட் சிராஸ்

178
Major Club Limited Over

இலங்கையின் பிரதான முதல்தரக் கழகங்கள் இடையே நடைபெறும், 50 ஓவர்கள் கொண்ட மேஜர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (24) மொத்தமாக 12 குழுநிலை மோதல்கள் நிறைவுக்கு வந்திருந்தன. 

இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் தேசிய அணி வீரர்கள் அதிகம் விளையாடும் அணிகளின் ஆதிக்கம் வெகுவாக இருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது. 

>> ஓசத, திரிமான்னவின் இணைப்பாட்டத்தால் முன்னிலைப்பெற்றுள்ள இலங்கை

அந்தவகையில் டில்ருவான் பெரேரா விளையாடுகின்ற தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகம், களுத்தறை நகர கழக அணிக்கு எதிராக 134 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்க, SSC அணி 31 ஓட்டங்களால் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தியிருந்தது. 

அதேநேரம், சிலாபம் மேரியன்ஸ் அணி, NCC மற்றும் BRC ஆகிய அணிகளும் வெற்றிகளை பதிவு செய்திருந்தன. 

வீரர்களின் துடுப்பாட்டத்தினை நோக்கும் போது, SSC அணிக்காக சரித் அசலன்க அபார சதமொன்றுடன் ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்களை விளாச, NCC அணியின் ஹசித்த பொயகொட (101), சிலாபம் மேரியன்ஸ் அணியின் கசுன் விதுர (107*) ஆகியோரும் சதம் விளாசினர். மறுமுனையில், தேசிய அணி வீரர்களில் திசர பெரேரா இராணுவப்படை விளையாட்டுக் கழகத்திற்காக அரைச்சதம் (68) விளாச, டில்ருவான் பெரேரா (55*) மற்றும் சதீர சமரவிக்ரம (54) ஆகியோரும் அரைச்சதங்களைப் பெற்றிருந்தனர். 

>> தாயகம் திரும்பிய இலங்கை லெஜன்ட்ஸ் கிரிக்கெட் அணி

பந்துவீச்சினை நோக்கும் போது BRC அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் உஸ்மான் இஷாக் மற்றும் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சமிந்த பண்டார ஆகியோர் தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தனர். 

போட்டிகளின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

  • தர்ஸ்டன் கல்லூரி மைதானம், கொழும்பு

லங்கன் கிரிக்கெட் கழகம் – 229/8 (50) கீத் குமார 73*, சவான் கன்கனாகமகே 40, பினுர பெர்னாண்டோ 2/35

றாகம கிரிக்கெட் கழகம் – 222/5 (50) இஷான் ஜயரட்ன 86*, ஜனித் லியனகே 51*, சன்ஜிக்க ரித்ம 2/35

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 7 ஓட்டங்களால் வெற்றி 

சிலாபம் மேரியன்ஸ் எதிர் காலி கிரிக்கெட் கழகம் 

  • காலி சர்வதேச மைதானம், காலி 

சிலாபம் மேரியன்ஸ் – 241/5(41) கசுன் விதார 107*, லசித் குரூஸ்புள்ளே 54, ரவிஷ்க விஜேசிரி 2/40

காலி கிரிக்கெட் கழகம் – 240 (41) எரங்க ரத்நாயக்க 59, ராஜூ கயாஷன் 55, திக்ஷில டி சில்வா  3/36

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் ஒரு ஓட்டத்தினால் வெற்றி 

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

  • வெலகதர மைதானம், குருநாகல்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 180/9 (47) லஹிரு ஜயரத்ன 29, சமிந்த பண்டார 5/39 

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 148/7 (41) ப்ரமோத் மதுவந்த 45, நிம்சர அத்தரகல்ல 3/32

முடிவு – குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 6 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

SSC எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

  • SSC மைதானம், கொழும்பு

SSC – 339/4 (50) சரித் அசலன்க 178*, ஷம்மு அஷான் 51, மஞ்சுல ஜயவர்தன  2/62

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 295/9 (49) சுபுன் மதுசங்க 89, ப்ரபாத் ஜயசூரிய 3/42

முடிவு – SSC 31 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

  • P. சரவணமுத்து மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் – 292/2 (49) சித்தார கிம்ஹான் 62, டில்ருவான் பெரேரா 55*, R. புஞ்சிவேவ 2/72

களுத்துறை நகர கழகம் – 126/8 (37) R. புஞ்சிவேவ 27*, ப்ரமோத் மதுஷன்  3/30

முடிவு – தமிழ் யூனியன் 134 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் 

  • மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 224 (47.1) அஞ்செலோ ஜயசிங்க 77, கவிந்து ரித்மால் 4/48

ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் – 182 (40) இரோஷ் சமரசூரிய 67, நிஷால தாரக்க 3/60

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 42 ஓட்டங்களால் வெற்றி 

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனக கிரிக்கெட் கழகம்

  • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 263/9 (50) ஜெஹான் டேனியல் 79, திலேஷ் குணவர்தன 3/44

சோனக கிரிக்கெட் கழகம் – 176/9 (40.3) மஹேல உடவத்த 63, அதீஷ திலன்ச்சன 55*, சங்கீத் கூரே 3/39

முடிவு – கோல்ட்ஸ் அணி 74 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம் 

  • சர்ரேய் மைதானம், மக்கோன 

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 209 (27.5) திசர பெரேரா 68, அஷேன் ரன்திக்க 63, அலங்கார அசங்க  3/33

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 99/3 (18.3) சந்துன் வீரக்கொடி 70*, சுமிந்த லக்ஷான் 2/14

முடிவு – முடிவுகள் இல்லை

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் 

  • CCC மைதானம், கொழும்பு

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 274/8 (50) ஹர்ஷ விதான 79, சச்சின் ஜயவர்தன 62, மலிந்த புஷ்பகுமார 3/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 196 (39.2) சமிந்து விஜேசிங்க  48*, உஸ்மான் இஷாக் 5/37

முடிவு – ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 78 ஓட்டங்களால் வெற்றி 

பாணதுறை கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

  • பாணதுறை எலஸ்பந்த மைதானம்

பாணதுறை கிரிக்கெட் கழகம் – 220 (47.2) கோஷான் தனுஷ்க 41, நிமேஷ் விமுக்தி 38, புத்திக்க மதுஷன்  3/40

கடற்படை விளையாட்டுக் கழகம் – 154/4 (28) அரவிந்த அகுருகொட 63, புத்திக்க மதுஷன் 45, நிமேஷ் விமுக்தி 2/38

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 119 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)

NCC எதிர் நுகேகொட கிரிக்கெட் கழகம் 

  • NCC மைதானம், கொழும்பு

NCC – 375/5 (50) ஹாசித்த பொயகொட 101, விகும் சஞ்சய 2/61

நுகேகொட கிரிக்கெட் கழகம் – 211 (40.3) மலிங்க மலிகஸ்பே 37, அஞ்செலோ பெரேரா 3/50

முடிவு – NCC 164 ஓட்டங்களால் வெற்றி

BRC எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

  • விமானப்படை விளையாட்டுக் கழகம், கட்டுநாயக்க

BRC – 112 (34.1) ரமிந்த விஜேசூரிய 35, அனுக் டி அல்விஸ் 3/33

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 76 (23.5) மொஹமட் சிராஸ் 5/34, உமேஷ்கா மொரேஸ் 2/08

முடிவு – BRC அணி 36 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<