ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் இரண்டாம் வாரப் போட்டிகள் ஆரம்பம்

657

இலங்கை பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் நாடெங்கும் நடைபெறும் பரபரப்பான போட்டிகளுடன் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இரண்டாம் வார மோதல்கள் ஒக்டோபர் 17 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.   

ThePapare சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி

குதிரைப்பந்தய திடல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற …

தொடரின் முதல் வாரத்தில் முன்னணி அணிகளுக்கு ஏமாற்றங்கள், அதிக கோல்கள் மற்றும் அதிகமாக தவறவிடப்பட்ட பெனால்டி வாய்ப்புகள் என்பவற்றுடன் மொத்தம் 8 போட்டிகள் இடம்பெற்றன. குறித்த போட்டிகளில் மொத்தமாக 42 கோல்கள் பெறப்பட்டன.  

கடந்த வாரப் போட்டிகளின்படி எழுச்சி பெற்ற அணியாக கொழும்பு, புனித ஜோசப் கல்லூரி உள்ளது. குதிரைப் பந்தயத் திடல் சர்வதேச அரங்கில் நடைபெற்ற போட்டியில் அந்த அணி காலி மஹிந்த கல்லூரியை 5-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது.  

மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்த அணியாக கின்தொட்டை ஸாஹிரா கல்லூரி அணி உள்ளது. பம்பளப்பிட்டியில் நடைபெற்ற போட்டியில் அந்த அணி கொழும்பு புனித பேதுரு கல்லூரியை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாடசாலை கால்பந்தில் அதிகம் அறியப்படாத யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரியுடனான போட்டியை, முன்னணி கொழும்பு ஸாஹிரா அணி 1-1 என சமன் செய்தது.   

புனித பேதுரு கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்த கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரி

தற்பொழுது இடம்பெற்று வரும் ThePapare கால்பந்து …

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினரால் மிகப்பெரிய வெற்றியை பெற முடிந்தது. அந்த அணி கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரிக்கு எதிரான போட்டியை 8-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. கம்பளை ஸாஹிரா 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் கொழும்பு றோயல் கல்லூரியை தோற்கடித்தது.    

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி அதன் சொந்த மைதானத்தில் கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியிடம் 2-1 என தோல்வியை சந்தித்தது.  

சமநிலையில் நிறைவுற்ற ஸாஹிரா – மகாஜனா இடையிலான விறுவிறுப்பான மோதல்

ThePapare.com இன் அனுசரணையில் இடம்பெறும் …

அதிக கோல்கள் பெறப்பட்ட ஆட்டமாக, வெலிசரையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி 6-4 என்ற கோல் வித்தியாசத்தில் புனித பெனடிக்ட் அணியை வீழ்த்தியதோடு கந்தானை டி மெசனோட் கல்லூரி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் கட்டுனேரிய புனித செபஸ்டியன் கல்லூரியை வென்றது.    

இவ்வாறான ஒரு நிலையில், சில அணிகள் தமது வெற்றியை தொடர்ந்து நகர்த்தும் நோக்கிலும், மேலும் சில அணிகள் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்குடனும் இந்த வாரப் போட்டிகளில் களம் காணவுள்ளன.

2ஆவது வார போட்டி அட்டவணை

அனைத்துப் போட்டிகளும் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

புகைப்படங்களைப் பார்வையிட …