பழங்குடி மக்களுக்கான உலக விளையாட்டுக்களை நடத்த தயாராகும் பிரேஸில்

138

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி மற்றும் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பிறேஸில்இ பழங்குடி மக்களுக்கான உலக விளையாட்டுக்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றது.

 

பழங்குடி மக்களுக்கான உலக விளையாட்டுப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் பிறேஸிலின் வடக்கு மாநிலமான டோகான்டின்ஸில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளை நடத்தும் தருணம் பிறேஸிலின் மிக முக்கியமான தருணம் என பிறேஸில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோர்ஜ் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் குறித்த போட்டியில் 22 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 48 இனங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போட்டியானது பழங்குடியினர் மத்தியில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் அதேவேளை கலாசார பரிமாற்றமாகவும் விளங்கும் என ஹில்டன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போட்டிகளின் போது ஒவ்வொரு பழங்குடியினரும் தமது கலாசாரத்தினை உணவு மற்றும் கலை உணர்வின் மூலம் வெளிப்படுத்தக் கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போட்டிகளில் கலந்து கொள்ளும் பழங்குடியினர் தொடர்பாடல்களுக்காக மொழி பெயர்பாளர் ஒருவரையும் அழைத்து வருவர்.

பிறேஸிலைப் பொறுத்த வரையில் 305 பல்வேறு நகரங்களிலிருந்து 274 வேறுபட்ட மொழிகளை பேசக்கூடிய 900 ஆயிரம் பழங்குடி மக்கள் வாழ்க்கின்றனர். அதேவேளை ஐ. நா மதிப்பீட்டின் படி சர்வதேச ரீதியில் 370 மில்லியன் பழங்குடியினர் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பழங்குடி மக்களுக்கான உலக விளையாட்டுக்கள் மெக்ஸிகோஇ பிலிப்பைன்ஸ்இ பெரு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒன்றில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.