றக்பி அணியின் தலைவராக ஃபஸில் மரிஜா நியமனம்

116

பிலிப்­பைன்ஸில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள அணிக்கு பதி­னைவர் கொண்ட ஆசிய 5 நாடுகள் றக்பி போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை அணியின் தலை­வ­ராக கண்டி விளை­யாட்டுக் கழக வீரர் ஃபஸில் மரிஜா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவர் அணிக்கு எழுவர் கொண்ட இலங்கை அணியின் தலை­வ­ராக கடந்த சில வரு­டங்­க­ளாக விளை­யாடி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

கிங்ஸ்வூட் கல்­லூ­ரியின் முன்னாள் றக்பி வீர­ரான ஃபஸில் மரிஜாஇ இலங்­கையின் பல வெற்­றி­களில் பிர­தான பங்­காற்­றி­ய­வ­ராவார்.

இவர் ஃப்ளை ஹாஃவ் நிலை வீர­ராவார்.

பெனல்­டிகள் மற்றும் மேல­திகப் புள்­ளி­க­ளுக்­கான உதை­களை இலக்கு தவ­றாமல் உதைக்கும் ஆற்றல் மிக்­கவர்.

இதே­வேளைஇ ஆசிய 5 நாடுகள் றக்பி போட்­டி­க­ளுக்­கான இறுதி குழாம் விரைவில் அறி­விக்­கப்­படும் என இலங்கை றக்பி கால்­பந்­தாட்ட ஒன்றியம் தெரி­வித்­தது.

சில வீரர்கள் உபா­தை­யினால் பீடிக்­கப்­பட்­டுள்­ளதால் இறுதி குழாமை உடன் அறி­விக்­க­மு­டி­யா­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

மேலும் இப் போட்­டி­களை முன்­னிட்டு அறி­விக்­கப்­பட்ட 40 வீரர்­களைக் கொண்ட உத்­தேச குழாம் தற்­போது 28 வீரர்­க­ளாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசிய 5 நாடுகள் போட்­டியில் பிலிப்பைன்ஸ்இ இலங்கைஇ கஸகஸ்தான்இ சிங்­கப்பூர் ஆகிய நாடுகள் விளை­யா­ட­வுள்­ளன.

பிலிப்பைன்ஸ் அணியில் வெளி­நாட்டு வீரர்கள் அதிளவில் இடம்பெறுவதால் இலங்கை அணிக்கு அவ்வணி பெரும் சவாலாக அமையும் என நம்பப்படுகின்றது.