Home Tamil LPL தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்கு முதல் தோல்வி!

LPL தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்கு முதல் தோல்வி!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

251
SLC

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் இன்று (12) நடைபெற்ற கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் தம்புள்ள வைகிங் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைகிங் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தம்புள்ள வைகிங் அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கியதுடன், கொழும்பு கிங்ஸ் அணி டேனியல் பெல்-ட்ரெமோண்ட்டுக்கு பதிலாக தம்மிக பிரசாத்தை இணைத்திருந்தது.

முதல் வெற்றியினைப் பதிவு செய்த கண்டி டஸ்கர்ஸ் அணி

தம்புள்ள வைகிங் –  உபுல் தரங்க, போல் ஸ்ட்ரேலிங், தசுன் ஷானக (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல,, சமித் பட்டேல், அஞ்செலோ பெரேரா, மலிந்த புஷ்பகுமார, சச்சிந்து கொலம்பகே, அன்வர் அலி, கசுன் ராஜித, புலின தரங்க

கொழும்பு கிங்ஸ் –  லோரி எவன்ஸ், தினேஸ் சந்திமால், அசான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), அன்ரே ரசல், இசுரு உதான, கைஸ் அஹமட், துஷ்மந்த சமீர, ஜெப்ரி வெண்டர்சே, தம்மிக பிரசாத்

மேற்குறிப்பிட்ட மாற்றங்களுடன் களமிறங்கிய தம்புள்ள அணி, நேற்றைய தினம் ஸ்டாலியன்ஸ் அணிக்கு எதிராக தடுமாறியதை போன்று, இன்றும் ஆரம்பத்தில் ஓட்டங்களை குவிக்க தடுமாறியது. 

எனினும், அணித்தலைவர் என்ற ரீதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க தசுன் ஷானக உதவினார். இவருடன், சமித் பட்டேல், உபுல் தரங்க மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் சற்று பங்களிப்பை வழங்க, வைகிங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

தசுன் ஷானக 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதற்கு அடுத்தப்படியாக சமித் பட்டேல் 30 ஓட்டங்களையும், உபுல் தரங்க 25 ஓட்டங்களையும், அஞ்செலோ பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக பந்துவீசிய இசுரு உதான 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இறுதித் தருணத்தில் 2 ஓவர்களை மாத்திரம் வீசிய அன்ரே ரசல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர்களுடன், வேகத்தால் ஆட்டத்தை ஈர்த்திருந்த துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதில், லோரி எவன்ஸ் மாத்திரம் தனியொருவராக போராடி ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், அந்த அணி 18.4 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

கொழும்பு கிங்ஸ் அணி சார்பில் லோரி எவன்ஸ் 33 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இறுதியாக அதிரடியை வெளிப்படுத்திய துஷ்மந்த சமீர 17 ஓட்டங்களையும், கைஸ் அஹமட் 14 ஓட்டங்களையும், அஷான் ப்ரியன்ஜன் 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

தம்புள்ள வைகிங் அணி சார்பாக சமித் பட்டேல், புலின தரங்க, அன்வர் அலி மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைகிங் அணி, 2 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது. கொழும்பு கிங்ஸ் அணி தொடர்ந்தும் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.

Result


Colombo Stars
147/10 (18.4)

Dambulla Aura
175/9 (20)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Dinesh Chandimal b Angelo Mathews 1 4 0 0 25.00
Paul Stirling c Thikshila de silva b Isuru Udana 1 1 0 0 100.00
Upul Tharanga c Andre Russell b Dushmantha Chameera 25 24 3 1 104.17
Samit Patel c Dinesh Chandimal b Dushmantha Chameera 30 27 3 1 111.11
Dasun Shanaka c Andre Russell b Isuru Udana 56 34 3 4 164.71
Angelo Perera c Dinesh Chandimal b Isuru Udana 21 16 2 1 131.25
Anwar Ali c Qais Ahmed b Andre Russell 2 4 0 0 50.00
Pulina Tharanga c & b Andre Russell 4 5 0 0 80.00
Malinda Pushpakumara not out 11 3 1 1 366.67
Sachindu Colambage c Isuru Udana b Andre Russell 0 1 0 0 0.00


Extras 24 (b 0 , lb 5 , nb 1, w 18, pen 0)
Total 175/9 (20 Overs, RR: 8.75)
Did not bat Kasun Rajitha,

Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 14 1 7.00
Isuru Udana 4 0 25 3 6.25
Dhammika Prasad 2 0 24 0 12.00
Qais Ahmed 4 0 36 0 9.00
Ashan Priyanjan 1 0 9 0 9.00
Jeffrey Vandersay 1 0 17 0 17.00
Dushmantha Chameera 4 0 27 2 6.75
Andre Russell 2 0 18 3 9.00


Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal c & b Samit Patel 0 1 0 0 0.00
Laurie Evans b Pulina Tharanga 59 33 5 4 178.79
Thikshila de silva c Paul Stirling b Kasun Rajitha 5 5 1 0 100.00
Angelo Mathews c Malinda Pushpakumara b Anwar Ali 11 14 2 0 78.57
Andre Russell c Angelo Perera b Sachindu Colambage 5 6 1 0 83.33
Ashan Priyanjan c Angelo Perera b Malinda Pushpakumara 11 12 1 0 91.67
Isuru Udana c Dasun Shanaka b Malinda Pushpakumara 5 11 0 0 45.45
Qais Ahmed c Angelo Perera b Pulina Tharanga 14 9 1 1 155.56
Dhammika Prasad st Niroshan Dickwella b Samit Patel 7 6 1 0 116.67
Dushmantha Chameera c Pulina Tharanga b Anwar Ali 17 12 3 0 141.67
Jeffrey Vandersay not out 4 3 1 0 133.33


Extras 9 (b 0 , lb 2 , nb 0, w 7, pen 0)
Total 147/10 (18.4 Overs, RR: 7.88)
Bowling O M R W Econ
Samit Patel 4 0 30 2 7.50
Kasun Rajitha 3 0 27 1 9.00
Malinda Pushpakumara 4 0 19 2 4.75
Anwar Ali 1.4 0 10 2 7.14
Sachindu Colambage 3 0 28 1 9.33
Pulina Tharanga 3 0 31 2 10.33



>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<