தொடரும் சங்கவின் சதங்கள்

203

இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரரும் முன்னாள் அணி தலைவருமான குமார் சங்கக்கார கடந்த உலகக்கிண்ண தொடருடன் ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்கு பின் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சரே பிராந்திய அணியில் இம்முறை முதல் முறையாக விளையாடும் வாய்ப்பினை குமார் சங்கக்கார பெற்றார்.

இதன் போது நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான போட்டியில் சிறப்பாக விளையாடி சதத்தினை பெற்றுக்கொண்டார்.

மூன்றாவதாக களமிறங்கிய சங்கக்கார முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்த போது ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதில் 14 நான்கு ஓட்டங்களும் 1 ஆறு ஓட்டமும் அடங்கும். அத்துடன் சக வீரரான ஸ்டீபன் டேவிஸுடன் இணைந்து 213 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.