சிம்பாபே அபிவிருத்தி அணியினர் 301 ஓட்டங்களுடன் முன்னிலையில்

205
sl d v zim d

தென்னாபிரிக்காவின் சுற்றுப்பயணம் நிறைவில் தொடர்ந்து  சிம்பாப்வேவிற்கு  சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர் முதலாவது  டெஸ்ட் போட்டியை சிம்பாபே அபிவிருத்தி  அணியுடன் 28ஆம்  திகதி  ஹராரே மைதானத்தில் ஆரம்பித்தனர். இந்த தொடரில்  ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் உள்ளடங்குகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அபிவிருத்தி அணியின் தலைவர் ரமேஷ் புத்திக சிம்பாபே அபிவிருத்தி அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் பிரியன் சாரீ, சார்லஸ் குஞ்செ ஆகியோர் இணைப்பாட்டமாக 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுவூட்டினர்.

அதைத் தொடர்ந்து அரைச்சதம் பெற்ற குஞ்சே 53 ஓட்டங்களுடனும், சாரீ 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய முஸகண்டா, கும்பீ  ஆகியோர் 84 ஓட்டங்களை   இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர்.

47 ஓட்டங்கள் பெற்ற வேளையில் சதுரங்காவின்   பந்துவீச்சுக்கு எல்பிடபிள்யூ முறையில் கும்பீ ஆட்டம் இழந்தார். நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த முஸகண்டா அரைச்சதத்தை கடந்து 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அபிவிருத்தி அணியின் பந்து வீச்சை பொருத்தமட்டில் செஹான் மதுசங்க, சதுரங்க, தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினையும் அசலங்க 2 விக்கட்டுகளையும்  வீழ்த்தினர்.

முதல் நாள் முடிவில் சிம்பாபே அபிவிருத்தி அணியினர்  86  ஒவர்களுக்கு முகம் கொடுத்து 302 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்துள்ளனர்.

ஆடுகளத்தில் லுகே ஜொங்வெ, கார்ல் மும்பா ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  2ஆவது நாள் ஆட்டம் எவ்வாறு அமையப்பெரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டியின் சுருக்கம் :

சிம்பாபே அபிவிருத்தி அணி – 302/6

சாரீ 76, குஞ்சே 53, கும்பீ 47, முஸகண்டா 61
அசலங்க 2/73, செஹான் மதுசங்க 1/49, சதுரங்க 1/52, தனஞ்சய 1/59