2019இன் முதலாது மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இவ்வாரம் ஆரம்பம்

190

இவ்வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய, ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களில் பங்குபற்றவுள்ள இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்கின்ற முதலாவது தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் 22ஆம், 24ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பாடநெறிகள் மார்ச் மாதம் ஆரம்பம்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள…

2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சுமார் 22 சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கை வீரர்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு ஆசிய கிரான்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளை இரண்டு கட்டங்களாக சீனாவில் நடத்துவதற்கு ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஆசிய மெய்வல்லுனர் மற்றும் ஆசிய கிரான்ட் பிரிக்ஸ் போட்டிகளில் அதிகளவான இலங்கை வீரர்களை பங்குபற்றச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும், ஏப்ரல் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், ஜுன் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய கிரான்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடர் மற்றும் எதிர்வரும் ஜூலை மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா உள்ளிட்ட போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை மெய்வல்லுனர் வீரர்களை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளை இவ்வார இறுதியில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களைக் கொண்ட விசேட மெய்வல்லுனர் குழாம் ஒன்றையும் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வீரர்கள் அடுத்த மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும். இதன்போது, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட அடைவுமட்டத்தினை வீரர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, 400, 200 மற்றும் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளுக்காக அதிகளவு வீரர்கள் பங்குபற்றவுள்ளதால், இம்முறை தகுதிகாண் போட்டிகளில் பல இளம் வீரர்களை இனங்காண முடியும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேநேரம், வருடத்தின் மிகப் பிரதான தேசிய மெய்வல்லுனர் சம்பயின்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் திறமைகளை வெளிப்படுத்தி, உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்கின்ற வீரர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அரிசோனா அரை மரதனில் இலங்கையின் ஹிருனிக்கு வெண்கலப் பதக்கம்

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜேயரத்ன அமெரிக்காவின்…

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்ட அடைவுமட்டங்கள்

போட்டிகள் ஆண்கள் பெண்கள்
100 மீற்றர் 10.25 மீற்றர். 11.5 மீற்றர்
200 மீற்றர் 20.7 மீற்றர். 23.5 மீற்றர்
400 மீற்றர் 46.2 மீற்றர். 53.2 மீற்றர்
800 மீற்றர் ஒரு நிமி. 48.0 செக். 02 நிமி. 04.5 செக்.
1500 மீற்றர் 3 நிமி. 44.0 செக். 4 நிமி. 18.0 செக்.
5000 மீற்றர் 14 நிமி. 05.0 செக். 16 நிமி. 00.0 செக்.
10 ஆயிரம் மீற்றர் 30 நிமி. 00.0 செக். 32 நிமி. 50.0 செக்.
110ஃ100 சட்டவேலி 13.85 மீற்றர். 13.7 மீற்றர்
400 மீற்றர் சட்டவேலி 50.5 மீற்றர். 58.0 மீற்றர்
3000 மீ. தடைதாண்டல் 8 நிமி. 46.0 செக். 10 நிமி. 00.0 செக்
4ஓ100 மீற்றர் 39.5 மீற்றர். .5 மீற்றர்
4ஓ400 மீற்றர் 3 நிமி. 06.0 செக். 3 நிமி. 37.0 செக்
உயரம் பாய்தல் 2.23 மீற்றர். 1.84 மீற்றர்
கோலூன்றிப் பாய்தல் 5.4 மீற்றர். 4.0 மீற்றர்
நீளம் பாய்தல் 7.9 மீற்றர். 6.3 மீற்றர்
முப்பாய்ச்சல் 16.4 மீற்றர். 13.5 மீற்றர்
குண்டு எறிதல் 18.5 மீற்றர். 16.5 மீற்றர்
தட்டெறிதல்  58.0 மீற்றர். 54.5 மீற்றர்
சம்மெட்டி எறிதல் 68.0 மீற்றர். 58.0 மீற்றர்
ஈட்டி எறிதல் 78.5 மீற்றர். 57.0 மீற்றர்
டெகத்லன் 7400 புள்ளிகள்.
ஹெப்டத்லன் 5400 புள்ளிகள்.

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமாக ThePapare.com வாயிலாக இத் தெரிவுப் போட்டிகளின் இறுதி முடிவுகள், அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றை பார்க்கலாம்.  >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<