இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

England tour of Sri Lanka 2021

838

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி  டெஸ்ட்  சம்பியன்ஷிப்புக்கான தொடரின், இலங்கை குழாத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

தசைப்பிடிப்பு உபாதை காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து நீக்கப்பட்ட மெதிவ்ஸ், மீண்டும் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கையை வீழ்த்துவதற்கு எங்களால் முடியும் – கிறிஸ் சில்வர்வூட்

அதேநேரம், உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவந்த சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் முதன்முறையாக டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இவருடன், தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து நீக்கப்பட்ட லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப் மற்றும் துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா ஆகியோரும் மீண்டும் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா தொடரில் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்த ஓசத பெர்னாண்டோ, சுரங்க லக்மால் ஆகியோர் உபாதையிலிருந்து மீண்டு, குழாத்தில் இடம்பிடித்துள்ளதுடன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமாரவும் குழாத்தில் இடத்தை தக்கவைத்துள்ளார்.

இவர்களை தவிர்த்து, தென்னாப்பிரிக்கா தொடரில் உபாதைக்குள்ளாகிய தனன்ஜய டி சில்வா மற்றும் கசுன் ராஜித ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் குழாத்தில் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (14) ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், ஓசத பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, மினோத் பானுக, லஹிரு திரிமான்ன, லசித் எம்புல்தெனிய, வனிந்து ஹசரங்க, டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, துஸ்மந்த சமீர, தசுன் ஷானக, அசித பெர்னாண்டோ, ரொஷேன் சில்வா, நுவான் பிரதீப், லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<