Zim Afro T10 தொடரில் விளையாடவுள்ள 12 இலங்கை வீரர்கள்!

Zim Afro T10 2024

63
Zim Afro T10 2024

ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள Zim Afro T10 தொடரில் இலங்கையைச் சேர்ந்த 12 வீரர்கள் விளையாடவுள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக போல்ட்ஸ் ஹராரே அணிக்காகவும், குசல் பெரேரா பங்ளா டைகர்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் தற்போதைய தலைவர் சரித் அசலங்க பங்ளா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், திசர பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் முறையே நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ் மற்றும் புலவாயோ பிராவோ ஜகுவார் அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

>>இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பும் ரிஷப் பாண்ட்<<

இவர்களுடன் இளம் வீரர்களான சினெத் ஜயவர்தன, விஹாஸ் தெவ்மிக, கெவின் கொத்திகொட, கவீஷ சத்ஷர மற்றும் ரவீன் டி சில்வா ஆகியோருக்கும் Zim Afro T10 தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

Zim Afro T10 தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகள் இம்மாதம் 21ம் திகதி முதல் 29ம் திகதிவரை ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zim Afro T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

  • கேப் டவுண் சேம்ப் ஆர்மி – சினெத் ஜயவர்தன
  • போல்ட்ஸ் ஹராரே – தசுன் ஷானக, ஜனிஷ்க பெரேரா
  • பங்ளா டைகர்ஸ் – குசல் பெரேரா, சரித் அசலங்க, கெவின் கொத்திகொட
  • டர்பன் வோல்வ்ஸ் – ரவீன் டி சில்வா
  • புலவாயோ பிராவோ ஜகுவார்ஸ் – அகில தனன்ஜய, விஹாஸ் தெவ்மிக
  • நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ் – திசர பெரேரா, பினுர பெர்னாண்டோ, கவீஷ சத்ஷர

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<