HomeTamil“2022இல் 100 இலங்கை வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி

“2022இல் 100 இலங்கை வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி

Published on

spot_img

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 100 விளையாட்டு வீரர்களை அடுத்த ஆண்டு முதல் தொழில்சார் ஒப்பந்தங்களில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விளையாட்டில் திறகைளை வெளிப்படுத்தி வருகின்ற வீரர்களின் எதிர்காலத்துக்காக எமது அரசாங்கம் ஒருசில முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதற்கான திட்டம் மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் பகுதியாக 59 தொழில்சார் வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம் செய்வதற்கு அண்மையில் நடவடிக்கை எடுந்தோம். எனவே இரண்டாவது பகுதியில் இன்னும் 50 வீரர்களுக்கு தொழிசார் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

வீரர்களுக்கு திறமை அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்க திட்டம்

பின்தங்கிய கிராமங்களில் உள்ள திறமையான வீரர்களை இனங்காண்பதற்கான பொறுப்பு விளையாட்டு சங்கங்களின் கைகளில் தான் உள்ளது. இதனால் ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்

இதில் ஒன்று தான் நாட்டில் உள்ள விளையாட்டுப் பாடசாலைகளுக்கு தரம் 8 இற்குப் பிறகு மாணவர்களை இணைத்துக்கொள்வதும், விளையாட்டு குழாம்களுக்கு திறமையான வீரர்களைத் தெரிவு செய்வதும் ஆகும். அதேபோல, அனைத்து விளையாட்டு வசதிகளையும் கொண்ட ஒருசில பாடசாலைகளை பெயரிட்டு அதற்காக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள வீரர்கள் முன்னணி பாடசாலைகளில் இணைந்துகொண்டு அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

இதனிடையே, நாட்டில் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

தகுதிபெற்ற பயிற்சியாளர்கள் இல்லாமை எமக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய சவாலாகும். எங்களுடைய எதிர்பார்ப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஒரேயொரு வீரரை மாத்திரம் அனுப்பமால் அதில் பங்கேற்கின்ற வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்

தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு

இதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஓலிம்பிக் விழாவில் பங்கேற்பதற்கான அடைவுமட்டத்தினை ஐந்து வீரர்கள் நெருங்கியுள்ளார்கள்குறித்த வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிச்சயம் எம்மால் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற முடியும் என நம்புகிறேன்

அத்துடன், அடுத்த ஆண்டு முதல் அனைத்து விளையாட்டுக்களையும் உள்ளடக்கிய வகையில் 100 வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் இதன்போது பதிலளித்தார்

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<< 

Latest articles

Photos – Colombo Fitness Festival 2024

ThePapare.com | Waruna Lakmal | 02/03/2024 | Editing and re-using images without permission of...

ජාතික මලල ක්‍රීඩා තේරීම් තරග සාර්ථකව අවසන් වෙයි

2024 වසර වෙනුවෙන් ශ්‍රී ලංකා ජාතික මලල ක්‍රීඩා සංචිත සඳහා ක්‍රීඩක ක්‍රීඩිකාවන් තෝරා ගැනීම වෙනුවෙන්...

சமநிலையில் முடிந்த 107ஆவது பொன் அணிகளின் சமர்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரி அணிகள் இடையிலான 107ஆவது பொன் அணிகளின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (01) நிறைவுக்கு வரும் வந்த போது யாழ்ப்பாண கல்லூரியின் முதல் இன்னிங்ஸை (189) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ்.பத்திரிசியார் கல்லூரி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. >>வட்டுக்கோட்டை யாழ்ப்பாண அணிக்காக அசத்திய ரொபின்சன் உதயகுமார் இன்று போட்டியின் இரண்டாம் நாளில் தமது...

මංගල “මිත්‍රත්වයේ සටන” විසඳුමකින් තොරයි

වීරකැටිය ශ්‍රී ලංකා - සිංගප්පූරු මිත්‍රත්ව විද්‍යාලය සහ අම්බලන්ගොඩ ප්‍රජාපතී ගෝතමී බාලිකා විද්‍යාලය අතර...

More like this