காசிப் நவீடின் சதத்தால் பாணந்துறை அணி முன்னிலையில்

139

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் நான்கு போட்டிகளின் 2ஆவது நாள் ஆட்டங்கள் இன்று (20) நிறைவுக்கு வந்தன.

காலி கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

காசிப் நவீடின் அபார சதத்தின் உதவியுடன் காலி அணிக்கு எதிரான போட்டியில் பாணந்துறை அணி தமது முதல் இன்னிங்சிற்காக 433 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இப்பருவகாலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரில் காசிப் நவீட் பெற்றுக்கொண்ட 2 ஆவது சதம் இதுவாகும்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி, தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து நேற்றைய நாளில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாணந்துறை அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் போட்டியின் 2ஆவது நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பாணந்துறை அணி காசிப் நவீடின் சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சிற்காக 433 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

லங்கன் அணிக்கு வலுச்சேர்த்த சஷின், லக்‌ஷானின் சதம்

இதில் காசிப் நவீட், 178 பந்துகளுக்கு முகங்கொடுத்து 2 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதேநேரம், சுரேஷ் பீரிஸ் 84 ஓட்டங்களையும், ரசிக்க பெர்னாந்து 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டு அவ்வணிக்கு வலுச்சேர்த்தனர்.

பந்துவீச்சில் காலி அணி சார்பாக கயான் சிறிசோம 4 விக்கெட்டுக்களையும், கொஹார் பாயிஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 217 (62.1) – அசந்த பெர்னாந்து 55, சரித புத்திக 42, கயான் சிறிசோம 30, மொஹமட் ரமீஸ் 2/31, சமிந்திர மதுஷன் 2/43, வினோத் பெரேரா 4/44

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 433 (112.1) – காசிப் நவீட் 159, சுரேஷ் பீரிஸ் 84, ரசிக்க பெர்னாந்து 64, அஷேன் கவிந்த 42, கயான் சிறிசோம 4/102, கொஹார் பாயிஸ் 3/135


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர சபை விளையாட்டுக் கழகம்

களுத்துறை நகர சபைக்கு அணிக்கு எதிரான இப்போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் அசத்திய லங்கன் கிரிக்கெட் அணி, போட்டிகளின் இரண்டாவது நாளிலும் முன்னிலை பெற்றது.

மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் லங்கன் அணி, தமது முதல் இன்னிங்ஸிற்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 420 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இன்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

அவ்வணி சார்பாக பின்வரிசை வீரர்களாக களமிறங்கி துடுப்பாட்டத்தில் அசத்திய சகலதுறை ஆட்டக்காரரான துசிர மதநாயக்க 64 ஓட்டங்களையும், யஷான் சமரசிங்க ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இதன்படி, 8 விக்கெட்டுக்களை இழந்து 534 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட லங்கன் அணி தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சைத் தொடங்கிய களுத்துறை நகர சபை அணி, இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 7 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக நிதானமாக விளையாடிய 25 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான எரங்க ரத்னாயக்க ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் லங்கன் அணி சார்பாக கல்ஹான் கீத் குமார 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி, மேலும் 277 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் களுத்துறை அணி முதல் இன்னிங்சிற்காகத் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 534/8d (111.1) – சஷின் பெர்ணாந்து 122, லக்‌ஷான் ரொட்ரிகோ 121, கீத் குமார 81, துசிர மதநாயக்க 64, யஷான் சமரசிங்க 52*, எம். நிமேஷ் 2/77, மதீஷ பெரேரா 2/82, ரவிந்து திலகரத்ன 2/120

களுத்துறை நகர சபை கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 257/7 (66) – எரங்க ரத்னாயக்க 102*, நிபுன காரியவசம் 30*, கீத் பெரேரா 35, எம் நிமேஷ் 32, கீத் குமார 3/32, ரஜீவ வீரசிங்க 2/43, நவீன் கவிகார 2/79


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

பொலிஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் அணித்தலைவர் உமேக சதுரங்கவின் 5 விக்கெட்டுக்களின் உதவியுடன் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக்கொண்டது.

ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம்

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு அணி, நேற்றைய முதல் நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இன்றைய 2ஆவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. அவ்வணி சார்பாக அணித் தலைவர் தினூஷ பெர்னாந்து மாத்திரம் நிதானமாக விளையாடி 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் 20 ஓட்டங்களைக் கூட எட்டமுடியாமல் ஆட்டமிழந்தனர். இதன்படி, பொலிஸ் அணி 51.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில், நீர்கொழும்பு அணி சார்பாக பந்துவீச்சில் அசத்திய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான உமேக சதுரங்க 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து தமது 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த நீர்கொழும்பு அணி, இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்படி, பொலிஸ் அணியை விட 317 ஓட்டங்களால் அவ்வணி முன்னிலை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 178 (63.3) – உமேக சதுரங்க 56*, லசித் குரூஸ்புள்ளே 22, அகீல் இன்ஹாம் 22, நிமேஷ் விமுக்தி 5/66, கல்யாண ரத்னப்பிரிய 5/79

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 100 (51.4) – தினூஷ பெர்ணாந்து 41,  உமேக சதுரங்க 5/33, செஹான் வீரசிங்க 2/16, சந்துன் டயஸ் 2/43

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 239/5 (75) – பிரவீன் பெர்னாந்து 70, சந்துன் டயஸ் 50*, அகீல் இன்ஹாம் 50, ஷெஹான் வீரசிங்க 38*, கல்யாண ரத்னப்பிரிய 3/70, நிமேஷ் விமுக்தி 2/78


குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குருநாகல் யூத் கிரிக்கெட் அணி, நேற்றைய முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், 2ஆவது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது.

போட்டி ஆரம்பித்து வெறும் 14 ஓவர்களுக்கு மாத்திரம் முகங்கொடுத்த குருநாகல் அணி, 19 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற்றுக்கொண்டு 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக ஹஷான் பிரபாத் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த விமானப்படை அணி, குருநாகல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

திமுத் கருணாரத்ன – கௌஷால் ஜேடியினால் மற்றொரு இரட்டைச்சத இணைப்பாட்டம்

பந்துவீச்சில் குருநாகல் அணி சார்பாக, சிவகுமார் டிரோன் 4 விக்கெட்டுக்களையும், கேஷான் விஜேரத்ன 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், 128 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் தமது 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த குருநாகல் அணி, இன்றைய நாள் ஆட்டநேர நேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்று தடுமாறியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 286 (104) – சரிந்த தசநாயக்க 63, ஹஷான் பிரபாத் 56*, சரித் மெண்டிஸ் 40, ஹஷான் ஜேம்ஸ் 3/29,  மிலான் ரத்நாயக்க 2/61, லக்‌ஷான் பெர்னாந்து 2/75

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 158 (49) – லியம் சாமிகர 45, ஹஷான் ஜேம்ஸ் 34, ரொஸ்கோ டெட்டில் 29, சிவகுமார் டிரோன் 4/29,  கேஷான் விஜேரத்ன 3/34

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 83/4 (19) – மலித் குரே 28*,  தனுஷ்க தர்மசிறி 22, ஹஷான் ஜேம்ஸ் 2/33