மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான கிரிக்கெட்டை 1980ஆம் ஆண்டுகளில் அப்போதைய அணித்தலைவர் கிளைவ் லொய்டின் வழிகாட்டலில் விளையாடியிருந்தது. இது நடந்து ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி அனைவரையும் கவரும் வகையில் தமது பாணியிலான கிரிக்கெட்டை உலகிற்கு காட்டியிருந்தது.   

எதிர்பார்ப்புகளைத் தாண்டி அப்போது பல சாதனைகளைப் புரிந்த இலங்கை அணி இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இந்த ஆண்டில் மூன்று தடவைகள் 5-0 என ஒரு நாள் தொடர்களில் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை, டெஸ்ட் தொடர்களையும்  3-0 என இரண்டு தடவைகள் பறிகொடுத்திருக்கின்றது. இப்படியாக ஒரு மோசமான நிலையில் காணப்படும் இந்த தீவுக்கு புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் வருகை நம்பிக்கை தரும் விடயமாக அமைந்திருக்கின்றது.

கொழும்பில் பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஹத்துருசிங்க

2017இல் மோசமான தோல்விகளை தழுவி…

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க இந்தியாவின் செய்தி ஊடகமான கிரிக்பஸ் (Cricbuzz) இற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இலங்கை அணிக்கு தனக்கு கடமையாற்ற கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தினை பற்றி பேசியிருந்ததோடு அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகிய வீரர்களை இலங்கை அணியின் பாணியில் மீண்டும் விளையாட வைக்க மேற்கொள்ளப்போகும் முயற்சிகள் பற்றியும் கூறியிருந்தார். அத்தோடு ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தமைக்கு தூண்டுகோலாக சகீப் அல் ஹஸனின் தீர்மானம் (ஹஸன் டெஸ்ட் போட்டிகளில் ஆறு மாத கால ஓய்வை அறிவிக்க முயற்சி செய்த விடயம்) இருந்தது என்ற விடயத்தையும் மறுத்திருந்தார்.

இப்படியாக ஹதுருசிங்கவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு அவர் வழங்கிய பதில்களும் கீழே தரப்படுகின்றது.

நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியையும், இங்கிலாந்து அணியையும் பங்களாதேஷின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியிருந்தீர்கள். அத்தோடு இலங்கையை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தீர்கள். நடைபெற்று முடிந்த சம்பியன் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிக்கும் முதற்தடவையாக உங்களால் செல்ல முடிந்தது. எல்லாம் நேரான திசையில் சென்று கொண்டிருக்கும் போது என்ன விடயம் உங்களை அந்நாட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகக் காரணமாக அமைந்தது?

முதலில் நான் அந்நாட்டு அணியை என்னால் முடிந்த அளவுக்கு ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டேன் என உணர்கின்றேன். அடுத்த விடயம் இலங்கை நான்கு தடவைகள் என்னிடம் இந்த பதவிக்காக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இத்தோடு குடும்பத்தை மிக நீண்ட காலத்துக்கு பிரிந்திருப்பது மிகவும் கடினம் என்கிற நிலைக்கும் நான் வந்திருந்தேன்.

எனது கனவும் இலங்கை அணிக்கு பயிற்சி வழங்குவதே. எனவே எனக்கு இதுவே சரியான தருணமாக தோன்றியது. ஏனெனில் இலங்கை அணி நேரான பாதையொன்றில் செல்லவில்லை. இன்னுமொரு விடயம் நான் மூன்று வருடங்கள் பங்களாதேஷ் அணிக்கும், இன்னும் நான்கு வருடங்கள் இலங்கை அணிக்கோ வேறொரு அணிக்கோ பயிற்சி வழங்கி எனது குடும்பத்தை பிரிந்து இருப்பது கடினம். இந்த தருணத்தில் இலங்கை அணிக்கு பயிற்சியாளராக இருப்பதையே நான் சவாலாக ஏற்க வேண்டும் என நான் நினைத்தேன். அந்த அடிப்படையில் எனக்கு ஒரே வாய்ப்பு இதுதான். அதற்கு  சரியான நேரமும் இதுதான். குறிப்பிட்ட இந்த விடயங்களை மனதில் கொண்டு இப்படியான முடிவொன்றை எடுத்தேன்.

இலகு வெற்றியை சுவீகரித்த திரித்துவக் கல்லூரி

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு…

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஷ்முல் ஹஸனின் கூற்றுப்படி தென்னாபிரிக்க அணியுடனான மோசமான டெஸ்ட் தொடர் தோல்வியினை அடுத்து சகீப் அல் ஹஸன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து குறுகிய ஓய்வு ஒன்றினை அறிவித்ததே நீங்கள் பங்களாதேஷ் அணியில் இருந்து விலக காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அது பற்றி?

அதில் உண்மை ஏதும் இல்லை. நஷ்முல் ஹஸன் மிகவும் புத்திகூர்மை கொண்ட ஒருவர். இப்படியாக அவர் வேறு காரணம் ஒன்றுக்காக கூறியிருக்க முடியும். அதாவது ஹசனை உற்சாகமூட்ட கூறியிருக்கலாம். தற்போது டெஸ்ட் அணியின் தலைவராக சகீப் மாற்றப்பட்டிருக்கின்றார். இல்லையென்றால் அவர் இன்னொருவரின் உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதை அறிவதற்காகவும் அவர் இப்படி கூறியிருக்க முடியும். அவர் இவ்வாறான விடயங்களை கையாள்வதில் மிகவும் தேர்ந்தவர்.

வரலாற்றை புரட்டி பார்க்கும் போது இங்கிலாந்தும் அவுஸ்திரேலிய அணியும் மாத்திரமே அங்கு டெஸ்ட்

தொடர்களில் வென்றிருக்கின்றது. ஏனைய அணிகள் அங்கு டெஸ்ட் தொடர்களை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

துணைக்கண்ட நாடுகளுக்கு (இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான்) தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரொன்றினை வெல்வது மிகவும் கடினமான ஒன்று. அங்கு திறமைக்கு பெரிதாக வாய்ப்பு இருப்பதில்லை. அங்கே உடல்வாகு தான் முக்கியமாகின்றது. உங்களுக்கு 20 விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டுமெனில் திடகாத்திரமான உடல் வாகு கொண்ட மிகவேகமான வேகப்பந்து வீச்சாளர்கள் உங்களுக்கு அவசியம். தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடர் வென்ற இரண்டு வெள்ளை வீரர்கள் கொண்ட அணிகளும்  வேகப்பந்து வீச்சாளர்களினையே பெரிதும் நம்பியிருக்கின்றன. உங்களிடம் போதிய உயரமும் போதிய வேகமும், இல்லை எனில் உங்களால் அங்கு வெல்வது மிகவும் கடினம்.

இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுக்களை கைப்பற்றும் நிலையை எவ்வாறு உருவாக்குவீர்கள்? ஏனெனில், இவர்கள் துணைக்கண்ட நாடுகளிலேயே விக்கெட்டுக்கள் எடுக்க சிரமப்படுகின்றனர்.

முதலில் நாம் எதிரணியின் 20 விக்கெட்டுக்களையும் வீழ்த்தக் கூடிய பந்து வீச்சாளர்களை கண்டு பிடிக்க வேண்டும். எனது யோசனையின்படி மணிக்கட்டு சுழல் வீரர்களே அதற்கு பொருத்தமானவர்கள் அல்லது விரலினால் பந்தினை சுழற்றக்கூடிய வீரர்களில் முரளி, நேதன் லயன், ரவிச்சந்திரன் அஷ்வின் அல்லது ரங்கன ஹேரத் போன்ற வீரர்கள் உங்களிடம் இருந்தால் பரவாயில்லை. இன்னும் இவர்கள் எப்போதும் அவர்கள் செய்யும் விடயத்தில் அதீத கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பார்கள். இவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி எமக்கு கண்டு பிடிக்க முடியாது போனாலும், எம்மால் இருக்கும் வீரர்களை கொண்டு சரியான உத்திகளை  பயன்படுத்துவதன் மூலம் சமாளிக்க முடியும். அடுத்து எப்போதும் விடாமுயற்சியோடு போராட வேண்டும். இதுவே, எதிர்பார்த்த பந்து வீச்சாளர்கள் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியது.

பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேலவினால் வெளியீடு

பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பது…

சிலர் இலங்கை அணி மிகவும் மோசமான களத்தடுப்பினை கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்..

நான் அந்த அடிப்படையில் இதனைப் பார்க்கவில்லை. நாங்கள் களத்தடுப்பில் அந்த அளவுக்கு மோசமாக இல்லை. எங்களால் முன்னேற முடியும். நீங்கள் போட்டியில்  சிறந்த களத்தடுப்பில் ஈடுபடும் போது எப்போதும் அது அனுகூலமாகவே காணப்படும். ஏனெனில் இப்படியான நிலைமைகளில் இருக்கும் போது அரைவாசி வாய்ப்புக்களை உருவாக்க முடியும். உருவாக்கும் இந்த அரைவாசி வாய்ப்பு புதிய துடுப்பாட்ட வீரர் ஒருவர் வரும் போது உங்களது பந்துவீச்சு துறைக்கும் சாதகமாகவே அமையும். களத்தடுப்பு ஒரு முக்கியமான பகுதிதான் அத்தோடு எல்லோரும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட வேண்டும்.

சில பயிற்றுவிப்பாளர் சிலரை முன்னுதாரணமாக கொண்டு செயற்படுவார்கள். அவ்வாறு உங்களுக்கு யாராவது உண்டா?

எனக்கு யாரும் இல்லை. ஏன் இப்படி சொல்கின்றேன் என்றால் நீங்கள் யாராவது ஒருவரைப் பின்பற்றும் போது உங்களுக்கு உங்களின் இயற்கையான திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போகும். எனினும் நான் ஏனைய பயிற்சியாளர்களிடம் இருந்து பல விடயங்களைக் கற்றிருக்கின்றேன். எனக்கு தேவையானவற்றை நான் எடுத்துக் கொள்வேன். அத்தோடு சிறந்த பயிற்சியாளர்கள் எப்படி அவ்வாறு வெற்றிகரமாக இருக்கின்றார்கள் என்பதனையும் நான் படித்துக்கொள்வேன்.  நான் அவர்களது அணிகளையும் நோக்குவேன். ஆனால், எனக்கு தனித்துவமான பாணியிலேயே நான் பயிற்சி வழங்குவேன். எனது அணியை சிறந்த ஒன்றாக மாற்ற எப்போதும் என் வேலைகள் தொடரும். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவை.

நீங்கள் படிப்பீர்கள் எனக் கூறினீர்கள், அது என்ன புத்தகங்களா?

அது விளையாட்டு தொடர்பான பல விடயங்கள். புத்தகங்கள் என்று வரும் போது கிரஹம் ஹென்றி எழுதிய புத்தகத்தை வாசித்துள்ளேன். பெப் கர்டியோலாவின் புத்தகங்களும் அதிகம் வாசிக்கப்பட்டுள்ளன.  நான் வேறு விளையாட்டுக்களையும் தொடர்வேன். கால்பந்து பயிற்சியாளர்களான ஜோஸ் மொரின்ஹோ மற்றும் ஜோன் லோங்மைர் ஆகியோர் பற்றியும் படித்திருக்கின்றேன். எனக்கு எப்போதும் பயிற்சியாளர்கள் அவர்களது அணிகளை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றார்கள் என்பதை கற்பதற்கு பிடிக்கும். அதாவது நான் முன்னர் குறிப்பிட்ட பெப் போன்றவர்கள் பற்றி. பெப் அவரது ஆளுகையில் இருந்த மூன்று அணிகளுக்கு செய்த விடயங்கள் (பார்சிலோனா, பேயர்ன் மூனிச், மென்சஸ்டர் சிட்டி) மிகவும் பிரம்மிக்கத்தக்கது. மென்சஸ்டர் அணியில் இருந்த போது கூட அவர் ஒரு இலக்குடன் செயற்பட்டிருந்தார். அவர் ஒரு போதும் தன்னுடைய தத்துவங்களில் சந்தேகப்பட்டதில்லை. அதனால் தான் அந்த அணியை (மென்சஸ்டர் சிட்டி) இந்தப் பருவகாலத்தில் வேறு கட்டத்துக்கு பிரம்மிக்கும் வகையில் கொண்டு சென்றிருக்கின்றார். அவரிடம் இருந்து கற்ற விடயங்ளை நான் சரியான திறமை கொண்ட வீரர்களை வைத்தே செய்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது வேலைக்கு ஆகாது. பெப் இடம் இருந்து நான் கற்றது ஒரு விடயம். உங்களுக்கு இயலுமானால் அதனை உங்களது முடிவுக்கு விட்டு விட வேண்டும். அவர் இதனாலேயே அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.

இன்னும் நீங்கள் ஏன் உங்களது புத்தகத்தை எழுதவில்லை?

உங்களால் அது முடியுமென்றால், நான் அதைப்பற்றி பேசுவேன்.

நாம் இனி 2002 ஆம் ஆண்டு பற்றி கதைப்போம். நீங்கள் 14 ஆவது வயதில் தமிழ் யூனியன் அணிக்காக விளையாடி, அவ்வணிக்காகவே இறுதி முதல்தரப் போட்டியிலும் விளையாடினீர்கள். அத்தோடு சோனகர் அணிக்காக வீரராகவும் பயிற்சியாளராகவும் செயற்பட்டீர்கள். அப்போது சோனகர் அணி கிட்டத்தட்ட 100 வருடங்களின் பின்னர் முதல்தர கிரிக்கெட்  தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அப்போது உங்களால் சிறந்த பயிற்சியாளராக வர முடியும் என நினைத்திருந்தீர்களா?

அப்போதுதான் என்னால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை நான் பெற்றுக்கொண்டேன். அந்த காலப்பகுதியில் நான் கடுமையாக வேலை செய்திருந்தேன். அதற்கு முன்னதாக நான் அவுஸ்திரேலியாவுக்கு சென்று 2000 ஆம் ஆண்டில் அங்கெ கிரேட் கிரிக்கெட் (Grade Cricket) தொடர் போட்டிகளில் விளையாடியிருந்தேன். அங்கே எனக்கு கிரிஸ் ஹர்ரிஸ் என்னும் நபரை சந்திக்க வாய்ப்புக் கிட்டியது. அவர் விக்டோரிய அணிக்கு கிரிக்கெட் ஆலோசகராக செயற்பட்டவர். அவர்தான் எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சி வழங்க ஆர்வம் ஊட்டினார். அங்கே தரம் – II இற்குரிய பயிற்சியாளர்களுக்குரிய நிகழ்ச்சித் திட்டத்தில் என்னைப் பங்கேற்க வைத்தார். அங்கேதான் நான் பயிற்சியாளர் ஆவதற்குரிய முதல் விதை விதைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்தே சோனகர் கழகத்தின் பயிற்சியாளர் பதவியை ஏற்றிருந்தேன்.

குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் போன்றோர் உங்களது பயிற்றுவிப்பை எப்போதும் பாராட்டும் விதத்தில் செயற்பட்டிருந்தனர். ஏன் அவர்கள் உங்களுடன் இந்தளவுக்கு நல்ல முறையில் காணப்படுகின்றனர்?

நான் எல்லோருடனும் நேர்மையான முறையில்  காணப்படுகின்றேன். இதுவே அதற்கு காரணம். நான் நானாகவே எப்போதும் இருக்க முயல்கின்றேன். உங்களிடம் குறிப்பிட்ட விடயமொன்றில் அறிவு இருந்தாலும் அதனை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகின்றீர்கள் என்பதிலேயே உங்கள் திறமை தங்கியிருக்கின்றது. அத்தோடு உங்களுக்கு எந்த விடயத்தினை எப்போது சொல்ல வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்களது வேலைகளில் எப்போதும் நேர்மையானவர்களாக இருப்பின், உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் உங்களை நம்புவார்கள். இது இப்படியான சின்ன விடயம் தான்.

சில வருடங்கள்  தமிழ் யூனியன் அணிக்காக விளையாடியமைக்காக முரளி உங்களுடன்  தொடர்ந்தும் நீண்ட கால உறவு ஒன்றினை பேணி வந்தார். அது குறித்து

எனக்கு முரளியைப் பற்றி பேசுவதில் பெருமைதான். முரளி அவரது 19 ஆவது வயதில் தமிழ் யூனியன் குழாமுக்குள் நுழையும் போது நான்  23 வயதின் கீழான அணிக்கு தலைவராக இருந்தேன். அப்போது எனது அணியின் உப தலைவராக இருந்தவர் டேமியன் நடராஜா. அவர் முரளி படித்த பாடசாலையில் கல்வி கற்ற ஒருவர். அவர் எனக்கு முரளி பற்றிக் கூறினார். இந்த இளைஞர் பந்தினை வித்தியாசமான முறையில் சுழற்றக்கூடிய ஒருவர். அத்தோடு புனித அந்தோனியர் கல்லூரிக்காக கடந்த இரண்டு பருவகாலங்களிலும் 100 இற்கு அதிகமான விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார் என்று கூறினார்.

DCLஇன் ரினௌன் – கொழும்பு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில்

இந்த பருவகாலத்துக்கான…

இதைக்கேட்ட பின்னர் முரளியுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படத் தொடங்கியது. முரளியினால் போட்டியின் முதல் நாளிலிருந்து எதிரணிகளுக்கு சவால் தரும் விதமாக செயற்பட முடியும். அது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்த போதிலும் சரி. அவருக்கு அவருடைய கிரிக்கெட் பிடிக்கும். எனக்கு அவருடைய முதல் டெஸ்ட் போட்டி ஞாபகம் இருக்கின்றது. நாங்கள் அவுஸ்திரேலிய அணியுடன் ஆர். பிரேமதாச மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருக்கின்றோம். முரி (முரளி) தனது முதல் பந்தினை வீசப் போகின்றார். நான் சோர்ட் லெக் திசையில் களத்தடுப்பில் நிற்கின்றேன். அப்போதைய அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க களத்தடுப்பினை சரிசெய்து கொண்டிருக்கின்றார். அப்போது முரளி என்னிடம் சத்தம் போட்டு “ஹது அண்ணா இந்த களத்தடுப்பு சரியா?” என்று கேட்டார். எனக்கு அது சிறிது தர்மசங்கடமான நிலை ஒன்றினை ஏற்படுத்தி விட்டது. இதைப்பார்த்த அர்ஜூன சிரிக்கின்றார். அவர் என்னைக் கூப்பிட்டு“ நீங்கள் மிட் ஓப் திசைக்கு செல்லுங்கள் அப்போதுதான் இந்த இளம் இரத்தத்துடன் அடிக்கடி பேச முடியும்“ என அறிவுரை வழங்கினார். இது நான் முரளியுடன் பகிர்ந்து கொண்ட சுவாரஷ்யமான நினைவுகளாகும்.

முரளி எப்போதும் என்னுடன் நெருக்கமாகவே இருந்தார். நாங்கள் தமிழ் யூனியன் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தோம். அத்தோடு முரளி எனக்கு சிறிய அறிவுரை ஒன்றினையும் வழங்கியிருந்தார். அதனை நான் உங்களிடம் கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எனக்கு ஏதாவது விடயங்கள் சரியாகப்படும் இடத்து அதனை எப்படியாவது பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்பு செய்வேன். முரளி எனக்கு அந்த விடயத்தில், “நீங்கள் உங்களது இயல்பான கிரிக்கெட்டை விளையாடுங்கள். கிரிக்கெட் வீரர் ஒருவரின் ஆயுட்காலம் குறைந்தது பத்து வருடங்களாவது இருக்க வேண்டும். இப்படியாக நீங்கள் செயற்படுவது உங்களது கிரிக்கெட் வாழ்க்கையை ஐந்து வருடங்களாகக் குறைத்து விடும்“ எனக் கூறினார். உண்மையில் அவை தங்கத்தில் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்.

இலங்கை அணியின் பின்னடைவுக்கு அசேல, மெதிவ்சின் உபாதையும் காரணம்

பயிற்றுவிப்பாளராக நீங்கள் ஏதாவது சிறந்த தருணத்தை உணர்ந்திருக்கின்றீர்களா?

நான் பல விடயங்களுக்காக மகிழ்ச்சி அடைகின்றேன். அது மிகச்சிறந்த ஓர் உணர்வு ஒன்று. ஒரு நாள் நான் சிட்னியில் சந்தைத் தொகுதி ஒன்றில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது ஒரு நபர் வந்து தீடிரென என்னைக் கட்டித்தழுவினார். எதுவும் அறியாத நான் அவரைத் தள்ளினேன். பின்னர் அவர் கூறினார் “இங்கே பாருங்கள், நான் பங்களாதேஷைச் சேர்ந்தவன். நீங்கள் செய்த விடயங்கள் காரணமாகத்தான் எங்களால் எங்களது அலுவலகங்களில் தலை நிமிர முடிகின்றது“ அவர் இப்படிக் கூறியது என்னை மிகவும் திருப்திப்படுத்தியது. அந்த வகையில் பங்களாதேஷ் கிரிக்கெட்டை  ஒரு கட்டத்திற்கு உயர்த்துவதில் பங்கெடுத்திருக்கின்றேன்“ இதே மாதிரியான ஒரு உணர்வை நாங்கள் 1996 ஆம் ஆண்டின் உலக கிண்ணத்தினை வென்ற போதும் அடைந்திருந்தோம். இப்படியான வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் ஆறுதல் தருகின்றது.

©AFP

ஆனால், ஏதாவது சிறந்த தருணம் இருக்குமே?

பங்களாதேஷ் அணி இலங்கை அணியை தோற்கடித்தது. (P. சரவணமுத்து மைதானத்தில் வைத்து) அது பல காரணங்களுக்காக எனக்கு முக்கியத்துவம் கொண்டதாக அமைகின்றது.

அது உங்களது (தமிழ் யூனியின்) கழக அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றதன் காரணமாகவா? ஏனெனில் நீங்கள் அந்த மைதானத்தினை ஏனையோரை விட அதிகம் அறிந்து வைத்த ஒருவர் என மக்கள் கதைக்கின்றனர்.

அது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தது. ஏனெனில் குறித்த மைதானம் எனக்கு முக்கியமான ஓர் இடம். அது பங்களாதேஷ் அணியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து தோற்கடிப்பது மிகப்பெரிய அடைவே. ஏனெனில் இலங்கை அதனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் வலிமையாக காணப்படும்.

இலங்கை கிரிக்கெட் சபை உங்களை 2010ஆம் ஆண்டில் மோசமாக நடாத்தியிருந்தது. நீங்கள் உங்களது தொழிலை இழந்ததோடு நாட்டை விட்டும் வெளியேறி இருந்தீர்கள். எப்படி இவ்வாறனதொரு நிலையை மீண்டும் தாண்டி வர முடிந்தது?

எனக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதிலிருந்த சில தனிப்பட்டவர்களுடன் தான் குழப்பம். என்னால் அப்போது இலகுவாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஏனெனில் எனது வழக்கு அறிஞர்கள் என்னிடம் அவர்கள் மீது உங்களுக்கு வழக்கு தொடர முடியும் என்று கூறியிருந்தனர்.

நான் அப்படி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றேன். ஏனெனில் நான் அடைந்த அனைத்து விடயங்களும் இலங்கை கிரிக்கெட் மூலம் தான். எனக்கு அந்த வகையில் அந்த பாதையில் போக விருப்பம் இருக்கவில்லை.

உங்களது வேலையை இழந்தது உங்களுக்கு எப்படி இருந்தது?

நிச்சயமாக அது  வாழ்க்கையைப் பாதிக்கும். எனக்கு அப்போது குடும்பம் ஒன்று இருந்தது. அவர்களை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் எனது தொழில் வாழ்க்கையை அது பாதிக்கவில்லை. ஏனெனில் நான் என்ன செய்து கொண்டு இருந்தேன் என்பது எனக்கு தெரியும். உண்மையில் வேலை ஒன்று இல்லாத போது ஒரு குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமான விடயம்.

நீங்கள் விளையாட்டு உளவியலை நம்பும் ஒருவரா?

ம்ம், Dr. பில் ஜோன்சி அவர்கள் வித்தியாசமான ஒரு உளவியலாளர். அவர் எனக்கு வீர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விளங்க உதவினார். வீரர்கள் பற்றி மற்றும் அவர் பேசவில்லை. அவர்களது உள்ளங்களை எப்படி சரி செய்ய முடியும் என்பதையும் அறிந்து வைத்திருந்தார்.

அவரது நம்பிக்கைப்படி வீரர் ஒருவர் சரியாக விளையாட குறித்த வீரரின் மனநிலை சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நிறைய உளவியலாளர்களின் கருத்துப்படி வீரர் ஒருவர் சரியாக பிரகாசிக்க அவருக்கு சரியான மனநிலை அவசியம். எங்கள் அனைவருக்கும் சந்தேகங்கள் இருக்கும். அனைவருக்கும் ஏமாற்றங்களும் இருக்கும். இதை நீங்கள் மறுக்கும் ஒருவராக இருப்பின் உங்களால் உங்கள் பிரச்சினைகளை சரி செய்ய முடியாது.  

இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்ட மாலிங்கவின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் 2019 உலகக் கிண்ணத்…

பிரச்சினைகள் உங்களுக்குள்ளேயே எரிந்து கொண்டிருக்கும். அவரது கொள்கைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்றால், பிரச்சினைகள் எது இருந்தாலும் உங்களால் சரியாக பிரகாசிக்க முடியும். அவர் எப்போதும் நேரான மனநிலை உடையவர் அதில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.

அஞ்செலோ மெதிவ்ஸ் உங்களுடன் இலங்கை A அணியில் இருக்கும் போது நிறைய நேரம் செலவழித்து இருந்தார். அப்போது நீங்கள் மெதிவ்சை, இவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு எனக் குறிப்பிட்டு காட்டி இருந்தீர்கள். இப்போது நீங்கள் மெதிவ்சின் அடைவைக் கண்டு திருப்தி கொள்கின்றீர்களா?

தனிப்பட்டரீதியாக, எனது நம்பிக்கையின்படி அவர் எதிர்பார்த்த விடயங்களை இன்னும் பெறவில்லை. நான் அவரிடம் சில நாட்களுக்கு முன்னர் பேசிய போது அவர் இப்போது இருப்பதை விட சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். அவரின் உபாதைகள் அவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி விட்டன. அவர்  அணியில் நிரந்தர இடம் ஒன்றை பிடித்துக் கொண்ட பொழுது இலங்கை அணி முழுமையாக மாறியதனால் அவரின் கீழ் பாரிய பொறுப்புக்கள் வந்தன.  இதுவும் அவரின் பின்னடைவுக்கு சிறிய காரணம்.

தினேஷ் சந்திமால் இந்த வருடத்தில் இலங்கை அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற ஒருவராக காணப்படுகின்றார். அவரை எப்படி நீங்கள் ஒரு நாள் போட்டிகளுக்கு தயாரான ஒருவராக மாற்றப்போகின்றீர்கள்?

இது அனைத்தும் அவர் துடுப்பாட வரும் போது இருக்கும் அவரது மனநிலையில் தான் தங்கி இருக்கின்றது. அவர் டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட வரும் போது சிறந்த போட்டி உத்திகளை கொண்டிருக்கின்றார். எனவே, அவரது மனநிலையில் சிறிது மாற்றங்கள் கொண்டு வந்து குறிப்பிட்ட இடத்துக்கான சவாலை அவருக்கு புரிய வைக்க வேண்டும். நாங்கள் அவரது தனிப்பட்ட ரீதியிலான ஆட்டத்தினால் வெற்றி பெற்ற போட்டிகளையும் தோல்வி அடைந்த போட்டிகளையும் எடுத்து பார்க்கப்போகின்றோம். அத்தோடு நான் ஒரு நாள் போட்டிகளில் அவரது நடத்தை பற்றி அவரிடம் கதைக்க இருக்கின்றேன்.

நீங்கள் அவரால் (சந்திமாலால்) ஒரு நாள் போட்டிகளில் இன்னும் சாதிக்க முடியும் என்பதை நம்புகின்றீரா?

இலங்கை அணிக்காக நான் 2010ஆம் ஆண்டில் இறுதியாக சுற்றுப் பயணம் ஒன்றில் பங்கேற்று இருந்தேன். அது சிரேஷ்ட இலங்கை அணியுடன் இளம் சந்திமாலின் முதல் சுற்றுப்பயணமாக அமைந்தது. அவரது இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அவர் இந்திய அணிக்கெதிராக ஜிம்பாப்வேயில் வைத்து சதம் கடந்தார். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது அவர் சிக்ஸர் ஒன்றுடன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது காணப்பட்ட இந்த விடயம் தான் அவரிடம் இப்போது இல்லாமல் இருக்கின்றது. நான் அவரிடம் அது எங்கே போய்விட்டது? என்று கேட்கின்றேன். இதற்கான பதிலை நாம் கண்டு பிடிக்க வேண்டும்.

இலங்கை மண்ணில் பிரகாசிக்கும் பாகிஸ்தானின் காஷிப் நவீத்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும்…

என்ன காரணத்துக்காக ஷெஹான் மதுஷங்க இலங்கை அணியின் அடுத்த சுற்றுப்பயணத்துக்கான 23 பேர் அடங்கிய குழாமில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்? அவர் குறைவான முதல் தரப் போட்டிகளிலேயே விளையாடிய அனுபவம் கொண்டிருக்கின்றார்.  

ஆம், அவரினால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச முடியும். எனது நம்பிக்கைப்படி அது இறைவனால் அவருக்கு கிடைக்கப்பெற்ற ஒரு கொடையாகும். இப்படி வேகமாக பந்தை வீச பயிற்சி தர முடியாது. அவருக்கு இதை எப்படி உத்திகளுடன் பயன்படுத்துவது என்பதில் மட்டும் பயிற்சி தர முடியும். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் ஒருவரை எம்மால் இலகுவாக பெற்றுவிட முடியாது.

ஆக்கம் – Rex Clementine

நன்றி – Cricbuzz