இலங்கை அணியின் பின்னடைவுக்கு அசேல, மெதிவ்சின் உபாதையும் காரணம்

1152

தொடர் தோல்விகளால் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம் ஒளியை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையை புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஏற்படுத்தியுள்ளார். அந்த புதிய பயணத்தின் ஆரம்பமாக ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கான பயிற்றுவிப்பு பணியையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.  

கொழும்பில் பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஹத்துருசிங்க

இலங்கை அணிக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தமையை எனக்கு… அதேபோல பயிற்சிகளை…

இலங்கை கிரிக்கெட் அணியைப் பொருத்தவரை உலக அளவில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பும் ஒரு அணியாகவே பார்க்கப்படுகின்றது. எனினும், அண்மைக் காலமாக மோசமான ஒரு காலப் பகுதியை சந்தித்து வந்த இலங்கை கிரிக்கெட் மீது விமர்சகர்கள் மாத்திரமன்றி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் முதல் சர்வதேச மட்டத்தில் மிகவும் அச்சுறுத்தலான அணியாக இருந்து வந்த இலங்கை அணிக்கு கடந்த ஓரிரு வருடங்கள் அதிகமான தோல்விகளை சந்தித்த வருடமாக இருந்தன. அதிலும் குறிப்பாக இந்த வருடம் மிகவும் மோசமான வைட் வொஷ் தோல்விகளும் இலங்கை அணிக்கு இருந்தன.

இவ்வருடம் இடம்பெற்ற தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான வைட் வொஷ் தோல்விகள் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட மோசமான பதிவுகளாகவே உள்ளன.

இவற்றின் விளைவுகளாகவே இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள், அணி மீதான விமர்சனங்களையும், வீரர்களது செயற்பாடுகள் குறித்தும் தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். அவ்வாறே இலங்கை முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் ரசிகர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் அசேல குணரத்ன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரது உபாதை குறித்ததாகவே இருந்தன.

அவை தொடர்பிலான சில விடயங்களை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அசேல, மெதிவ்சின் உபாதை எவ்வாறு அணிக்கு தாக்கம் செலுத்தும்?

இலங்கை அணியின் முக்கிய தூண்கள் என வர்ணிக்கப்பட்டு வந்த முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், அதிரடி மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா ஆகியோரது உபாதைகள் இலங்கை அணியின் பின்னடைவில் முக்கிய காரணியாக இருக்கின்றது என்பது அதிகமான ரிசிகர்களின் கருத்தாக உள்ளது.

கபுகெதர, கருணாரத்ன ஆகியோரின் சதத்தால் SSC அணி வலுவான நிலையில்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான ப்ரீமியர் லீக் A நிலை…

இதில் இலங்கை அணியின் மத்திய வரிசைக்கும், பந்து வீச்சுக்கும் பலம் சேர்த்த இருவராக இருக்கும் மெதிவ்ஸ் மற்றும் அசேல ஆகியோர் உபாதைக்குள்ளாகியமையைத் தொடர்ந்து அந்த இடத்தை நிரப்ப எந்தவொரு வீரரும் சிறப்பாக செயற்படவில்லை.

குறிப்பாக இவர்கள் இருவரும் சகலதுறை வீரர்கள் என்பதனால் இரு துறைகளிலும் சிறந்து விளங்கும் இருவரை இலங்கை கிரிக்கெட்டினால் கண்டுபிடிக்க முடியாமல் போனது. அவர்களுக்கு ஈடாக ஒரு சகலதுறை வீரர், மற்றும் மேலும் இருவரை சேர்க்க வேண்டிய நிலை (ஒரு பந்து வீச்சாளர், ஒரு துடுப்பாட்ட வீரர்) தேர்வுக் குழுவுக்கு ஏற்பட்டது.

அது போன்றே, அவ்வாறு தேர்வு செய்த பல வீரர்களும் தொடர்ந்து சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தாத காரணத்தினால் வீரர்களை மாற்றி மாற்றி பரிசோதிக்க வேண்டிய நிலையும் அணி முகாமைக்கு ஏற்பட்டது.

எனினும், அசேல குணரத்ன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரது மீள் வருகையினால் இலங்கை அணி மீண்டும் மத்திய வரிசையில் பலமடையும் என்றே அதிகமான ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மெதிவ்சின் துடுப்பாட்ட விபரம்

  போட்டிகள் இன்னிங்ஸ் ஓட்டம் சராசரி சதங்கள் அரைச் சதம்
டெஸ்ட் 72 128 4,914 44.27  8 28
ஒரு நாள் 195 165 5,065 41.85 2 35
T-20 71 56 1,055 27.76 0 5

தற்பொழுது அணியின் நான்காம் இலக்க இடத்திற்கான நிரந்தரத் துடுப்பாட்ட வீரராக மாற்றம் பெற்றுள்ள மெதிவ்ஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருகின்றமை குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும். தொடர்ச்சியாக அவர் அணியில் நீடிக்கின்றமையே அவருக்கும், அணிக்கும் ஆரோக்கியமானது.

பின்தொடை காயத்தால் மெதிவ்ஸ் மீண்டும் அணியில் இருந்து விலகல்

நேற்று நிறைவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது T20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின்ர…

மறுமுனையில் அணியின் தன்மைக்கு ஏற்ப நிலையாக நின்று ஆடும் ஆற்றல் கொண்ட வலது கை அதிரடித் துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்ன மத்திய வரிசையில் இணைந்துள்ளமை ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

நீண்ட ஒரு அனுபவத்தை இன்னும் பெறாத நிலையிலேயே அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு வீரராக மாற்றம் பெற்றுள்ளமையே தாம் அசேலவை sriகாரணம் என்கின்றனர் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள்.

அசேலவின் துடுப்பாட்ட விபரம்

  போட்டிகள் இன்னிங்ஸ் ஓட்டம் சராசரி சதங்கள் அரைச் சதம்
டெஸ்ட் 6 10 455 56.87 1 3
ஒரு நாள் 24 19 523 34.86 1 1
T-20 12 12 225 25.00 0 2

முன்னர் போட்டியின் இறுதித் தருணங்களில் வேகமாக ஓட்டங்களை சேர்ப்பதற்காக இலங்கை அணியின் மத்திய வரிசையில் சிறந்த முறையில் விளையாடிய டி.எம் டில்ஷான் மற்றும் ரசல் ஆர்ணல்ட் ஆகியோர் போன்றே தற்பொழுது அசேல ஆடுகின்றார்.

அது போன்றே சங்கா, மஹேலவின் இடத்திற்கான இடைவெளியை நிரப்ப எதிர்பார்க்கும் அஞ்செலோ மெதிவ்ஸ் மீதான நம்பிக்கையுடனேயே அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

எனவே, 2019 உலகக் கிண்ணத்தை எதிர்பார்த்து, ஒரு மாற்றத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள இரண்டு முக்கிய வீரர்கள் மெதிவ்ஸ் மற்றும் அசேல என்பதை ThePapare.com இன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் நிரூபித்துள்ளனர்.