இலகு வெற்றியை சுவீகரித்த திரித்துவக் கல்லூரி

107

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (31) இரண்டு போட்டிகள் முடிவடைந்தன.

திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

அஸ்கிரிய மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியை 92 ஓட்டங்களால் வீழ்த்தியது.  

போட்டியின் இரண்டாம் நாளில் 138 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த கம்பஹா அணி முதல் இன்னிங்சில் 148 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. அரோஷ மதுஷான் பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக 66 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்திருந்தார்.

மறுமுனையில் திரித்துவக் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக விமுக்தி நெதுமல் 5 விக்கெட்டுக்களையும் கவிஷ்க சேனாதீர 4 விக்கெட்டுக்களயும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது இன்னிங்சைத் தொடங்கிய திரித்துவக் கல்லூரி அணி 177 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஹசிந்த ஜயசூரிய திரித்துவக் கல்லூரிக்காக அரைச்சதம் (57) கடந்தார்.

நேற்றைய நாளில் முடிவடைந்த திரித்துவக் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் (177) இன்றைய நாளின் இரண்டாம் இன்னிங்ஸ் என்பவற்றின் அடிப்படையில் போட்டியின் வெற்றி இலக்காக 208 ஓட்டங்கள் பண்டாரநாயக்க கல்லூரி அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இன்னிங்ஸ் வெற்றிகளை சுவீகரித்த றோயல், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிகள்

இதை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கம்பஹாவின் இளம் வீரர்கள் 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தனர். கவிஷ்க சேனாதீர 4 விக்கெட்டுக்களையும், விமுக்தி நெதுமல் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி திரித்துவக் கல்லூரியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 178 (57.4) – அபிஷேக் ஆனந்தகுமார் 53, சஹிரு ரொஷென் 4/12, ஜனிது  ஜயவர்த்தன 3/47

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (முதல் இன்னிங்ஸ்) -148 (58.4) – அரோஷ மதுஷான் 66, விமுக்தி நெதுமல் 5/53, கவிஷ்க சேனாதீர 4/43

திரித்துவ கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 177/5d (34.2) – ஹசிந்த ஜயசூரிய 57, திரவோன் பெர்சிவேல் 39, சஹிரு ரொஷென் 3/46

பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 115 (48.4) – பசிந்து பண்டார 45, அரோஷ மதுஷான் 30, கவிஷ்க சேனாதீர 4/36, விமுக்தி நெதுமல் 3/46

முடிவு – திரித்துவக் கல்லூரி 92 ஓட்டங்களால் வெற்றி


டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

கொழும்பின் பாடசாலைகளான தர்ஸ்டன் கல்லூரி அணிக்கும், டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணிக்கும் இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

தர்ஸ்டன் கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று (30) ஆரம்பமான இந்தப் போட்டியில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் முதல் இன்னிங்சை (163) அடுத்து தர்ஸ்டன் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சில் 132 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் இரண்டாம் நாளில் தமது துடுப்பாட்டத்தை தொடர்ந்த தர்ஸ்டன் கல்லூரி 231 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்டது. நிமேஷ் பெரேரா தர்ஸ்டன் கல்லூரிக்காக அதிகபட்சமாக 74 ஓட்டங்களை குவித்துக் கொண்டார்.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்சில் ஆடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 7 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்காக முதித லக்ஷான் மற்றும் பசிந்து ஆதித்ய ஆகியோர் அரைச்சதம் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து 145 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி போட்டியின் ஆட்ட நேரம் முடிவடையும் போது 4 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 163 (45.5) ஷெனால் சந்திர 49, சந்தரு டயஸ் 4/42, அயெஷ் ஹர்ஷன 3/11

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 231 (66.4) – நிமேஷ் பெரேரா 74, சவன் பிரபாஷ் 51, பசிந்து தேஷன் 45, முதித லக்ஷன் 4/31

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 213/7d (51) – முதித லக்‌ஷான் 84, பசிந்து ஆதித்ய 52, அயெஷ் ஹர்ஷன 4/32

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 43/4 (9)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (தர்ஸ்ட்டன் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)