ஒருநாள் அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கோஹ்லி சாதனை

378

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது லீக் போட்டி மென்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களைக் குவித்தது.

கடைசி ஒருநாள் போட்டியை வென்று தொடரை சமன் செய்த இலங்கை A அணி

நிரேஷன் திக்வெல்லவின் அபார சதத்தின் உதவியோடு இந்திய A அணியுடனான ஐந்தாவது…

இந்தப் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய கே.எல் ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகிய வீரர்கள் ஒருநாள் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியிருந்தனர்.

கோஹ்லியின் 11 ஆயிரம் ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக 57 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்தார்.

இதன்படி, சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்தார். அவர் இந்த மைல்கல்லை 222 போட்டிகளில் எட்டியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 10 ஆயிரம் ஓட்டங்களில் இருந்து 11 ஆயிரம் ஓட்டங்களை கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல்தான் விராட் கோஹ்லியும் 17 இன்னிங்ஸில் 10 ஆயிரம் ஓட்டத்தில் இருந்து 11 ஆயிரம் ஓட்டங்களைக் கடக்க எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கோஹ்லி ஏற்கனவே, 10 ஆயிரம் ஓட்டங்களை விரைவாகக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த சாதனைப் பட்டியலில், ரிக்கி பொண்டிங், சௌரவ் கங்குலி, ஜெக் கலிஸ் ஆகிய வீரர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ரோஹித் சர்மாவின் இரட்டை சாதனை

இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களை எடுத்தார். இம்முறை உலகக் கிண்ணத்தில ரோஹித் சர்மா பெற்றுக்கொண்ட 2ஆவது சதம் இதுவாகும்.

இந்த போட்டியில் 3 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிகம் சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்திய வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், டி-20, ஒருநாள் போட்டி) மகேந்திர சிங் டோனியும், ரோஹித் சர்மாவும் 355 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருந்தனர். தற்போது, ரோஹித் சர்மா 358 சிக்சர்கள் விளாசி டோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

மேலும் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 24 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். சச்சின் 219 போட்டிகளில் 24 சதங்கள் அடித்தார். ரோஹித் சர்மா 203 போட்டிகளில் 24 சதங்கள் அடித்து சச்சினை முந்தியுள்ளார்.

குறைந்த போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்கள்

142 – ஹஷிம் அம்லா (தென்னாபிரிக்கா)

161 – விராட் கோஹ்லி (இந்தியா)

192 – ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

203 – ரோஹித் சர்மா (இந்தியா)

219 – சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

பல சாதனைகளுடன் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து போட்டி

உலகக் கிண்ணத் தொடரில் சௌத்ஹெம்ப்டன் நகரில் நேற்று (14) நடைபெற்ற போட்டியில்…

அதிக போட்டிகளில் டோனி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் மகேந்திர சிங் டோனி புதிய சாதனை படைத்து இருக்கிறார். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மாத்திரம் தான் மற்றைய இந்திய வீரர்களை விட ஒருநாள் போட்டிகளில் அதிக முறை விளையாடி இருக்கிறார். சச்சின் மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் அதிக முறை இறுதி பதினொருவர் அணியில் இடம்பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டாவதாக ராகுல் டிராவிட் மொத்தம் 340 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனையை டோனி முறியடித்து இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் அவர் இந்திய அணிக்காக அதிக முறை ஒருநாள் அணியில் இடம்பிடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார். அதன்படி டோனி 341 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

முதல் விக்கெட் சாதனை

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். உலகக் கிண்ணத் தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் கே.எல்.ராகுல் நிதனமாக விளையாடினார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி கே.எல்.ராகுலின் பதற்றத்தைத் தணித்தார். ராகுல் நிதானமாக விளையாட மறுமுனையில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ஓட்ட எண்ணிக்கை சீராக உயர்ந்தது.

பொறுப்புடன் விளையாடி ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தனர். இதன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 ஓட்டங்கள் கடந்த இந்திய அணியின் முதல் ஆரம்ப ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர். இந்திய அணி 136 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் 57 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய A அணிக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் A குழாம் அறிவிப்பு

இந்திய A அணியுடனான தொடரில் விளையாடுவதற்கான மேற்கிந்திய…

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா சார்பில் பெறப்பட்ட அதிகபட்ச ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் இதுதான். இதற்கு முன்பாக 1996 இல் சச்சின் டெண்டுல்கர் – நவ்ஜோத் சிங் சித்து ஜோடி 90 ஓட்டங்கள் பெற்றதே அதிகபட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 ஓட்டங்களைக் கடந்த ஆரம்ப ஜோடி

175* – ஹேய்னஸ் – லாரா, 1992

147 – ஸ்மித் – ஆதர்டன், 1996

146 – வோர்னர் – பின்ச், 2019

136 – ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல், 2019

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<