மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் திருவிழா புதுப்பொழிவுடன்

685

இலங்கை அணிக்கு திறமையான வீரர்களை உள்வாங்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் புதுப்பொழிவுடன் நேற்றைய தினம்(27) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது சம்பியன் அணிக்கு வழங்கப்படும் கிண்ணமும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவின் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, நான்கு அணிகளது தலைவர்கள், தெரிவுக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேசிய அணி, உள்ளூர் கழக வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூர் கழக போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்

இலங்கையின் பிரதான உள்ளூர்… இலங்கை கிரிக்கெட்…

எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இலங்கை அணியின் சுற்றுப்பயணங்களை இலக்காகக் கொண்டு இப்போட்டித் தொடர் இடம்பெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் தேசிய அணி வீரர்களோடு சுமார் 80 முன்னணி வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இதில் கொழும்பு அணியின் தலைவராக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் செயற்படவுள்ளதுடன், கண்டி அணிக்கு இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸும், காலி அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் உபதலைவர் சுரங்க லக்மாலும் தம்புள்ளை அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவும் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு நாட்கள் கொண்ட போட்டியாக எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானம், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம் மற்றும் தம்புள்ளை ரங்கிரி மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தங்களது எதிரணிகளுடன் தலா ஒவ்வொரு முறை மோதவுள்ளன.

அத்துடன், இந்த தொடரின் இரண்டு போட்டிகள் முதற்தடவையாக பகலிரவு போட்டிகளாக (இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படும்) நடைபெறவுள்ளன. இதில் தம்புள்ளை மற்றும் காலி அணிகளுக்கிடையில் தம்புள்ளையில் நடைபெறவுள்ள போட்டியும், கண்டி மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள போட்டியும் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் மெதிவ்ஸ், அசேல, திசர

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான…

இலங்கையின் கிரிக்கெட் அட்டவணையில் மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரானது 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால செயற்பட்டிருந்தார்.

இதன்படி, இப்போட்டித் தொடரின் மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் தொடர்பில் நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில் கலந்துகொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து வெளியிடுகையில்,

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட், அவுஸ்திரேலியாவின் ஸ்டேட் கிரிக்கெட் மற்றும் இந்தியாவின் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டிகள் போன்று இலங்கையிலும் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும். அந்த வகையில் இந்த நான்கு நாட்கள் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடர் எமக்கு சிறந்ததொரு ஆரம்பமாக அமையும் என்று நம்புகிறோம்.  

கடந்த காலங்களில் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளுக்கு உரிய முறையில் நேர அட்டவணைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் திறமையான வீரர்களை இனங்கண்டு கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டது.  

எனினும், எதிர்வரும் 5 வருடங்களுக்கு நாம் இலங்கையின் உள்ளூர் மட்ட போட்டிகளுக்கான காலப்பகுதியாக நவம்பர் 31 முதல் ஏப்ரல் 31 வரையான காலப்பகுதியை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்என்றார்.

அதுமாத்திரமின்றி இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க சிரேஷ்ட வீரர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதால் அவர்களது எதிர்காலத்துக்கு இந்த தொடர் சிறந்த அடித்தாளமாக அமையும். அதேபோல இத்தொடரில் சிறப்பாக விளையாடி தேசிய அணியில் இடம்பெறுவதற்காக தெரிவுக்குழுவின் அவதானத்தைப் பெற்றுக்கொள்ள அனைத்து வீரர்களும் முயற்சி செய்ய வேண்டும். எனவே வீரர்களைப் போல, இந்த அணிகளில் உள்ள பயிற்றுவிப்பாளர்களுக்கும் இந்த தொடர் மிகப் பெரிய சவாலாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்மித், வோர்னர், பான்க்ரொப்ட் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப அழைப்பு

கேப்டவுனில் நடந்த தொன்னாபிரிக்காவுடனான…

இதேநேரம், இலங்கையில் அதி திறமைமிக்க வீரர்கள் கலந்துகொள்ளும் ஒரேயொரு போட்டித் தொடர் இதுவென்பதால், இலங்கை கிரிக்கெட் எதிர்காலத்துக்கு சிறந்த முதலீடாகவும் இது அமையவுள்ளதுடன், இத்தொடரில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இப்போட்டித் தொடர் நிறைவடைந்த பிறகு மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் லங்கன் பிரீமியர் லீக் T-20 தொடரை நடத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இங்கு கருத்து தெரிவித்த 4 அணிகளினதும் தலைவர்கள், இலங்கையில் உள்ள திறமையான 80 வீரர்கள் பங்குபற்றும் இப்போட்டித் தொடரில் அனைவரும் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும், கிரிக்கெட்டின் நற்பெயருக்கு ஒருபோதும் கலங்கம் ஏற்படுத்தாத வகையில் சகோதர உணர்வுடன் விளையாட வேண்டு எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, இவ்வருட முற்பகுதியில் இடம்பெற்ற பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது உபாதைகளுக்கு உள்ளாகிய இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ், இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனவும், இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்படி, கண்டி அணி பங்கேற்கவுள்ள முதலிரண்டு போட்டிகளிலும் நிரோஷன் திக்வெல்ல கண்டி அணியின் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்கவின் சதத்தால் உள்ளூர் ஒருநாள் சம்பியனான SSC

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான…

இதேநேரம், ஒவ்வொரு அணிகளிலும் தலா இவ்விரண்டு 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், இறுதி பதினொருவரில் அவர்கள் விளையாட வேண்டிய அவசியம் கிடையாது என இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க இதன்போது தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் குறித்த உடனடித் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் போட்டி முடிவுகளை அறிந்துகொள்வதற்கு WWW.ThePapare.Com உடன் இணைந்திருங்கள்.

அணிகளில் பங்கேற்கும் வீரர்கள் விபரம்

கொழும்பு அணி

தினேஷ் சந்திமால்(தலைவர்), தனஞ்சய டி சில்வா(உதவித் தலைவர்), கௌஷால் சில்வாஷெஹான் ஜயசூரியலஹிரு திரிமான்னபிரிமோஷ் பெரேராசாமர சில்வாஅஞ்செலோபெரேராலசித் அபேரத்னலஹிரு உதாரவனிந்து ஹசரங்கதிஸர பெரேராலசித்எம்புல்தெனியதில்ருவன் பெரேராலக்ஷான் சந்தகென்துஷ்மன்த சமீரவிஷ்வபெர்ணான்டோகவிஷ்க அன்ஜுலகமிந்து மெண்டிஸ்நிபுல் மாலிங்க

பயிற்றுவிப்பாளர் – அவிஷ்க குணவர்தன
முகாமையாளர் – சரித் சேனாநாயக்க

காலி அணி

சுரங்க லக்மால்(அணித் தலைவர்), தசுன் சானக(உதவித் தலைவர்), லஹிரு மிலன்தருமேஷ்புத்திகபபசர வடுகேசம்மு அஷான்ஒசத பெர்னாண்டோரொஷேன் சில்வாசதுரங்க டிசில்வாஜனித் லியனகேலக்ஷித மதுஷான்சதீர சமரவிக்ரமஅகில தனஞ்சயமாதவவர்ணபுரமொஹமட் டில்ஷாட்உபுல் தரங்கமலிந்த புஷ்பகுமாரநிசல தாரகநிசான் பீரிஸ்தனஞ்சய லக்ஷான்அஷேன் பண்டார

பயிற்றுவிப்பாளர் – ஹஷான் திலகரத்ன
முகாமையாளர் – வருண வராகொட

கண்டி அணி

அஞ்செலோ மெதிவ்ஸ்(தலைவர்), நிரோஷன் திக்வெல்ல(உதவித் தலைவர்), பெதும்நிஸ்ஸங்கபியுமால் பெரேராதனுஷ்க குணதிலகபிரபாத் ஜயசூரியஅசேல குணரத்னதரங்க பரணவிதாரனமினோத் பானுகசாமர கபுகெதரசாமிக கருணாரத்னஜீவன்மெண்டிஸ்லஹிரு குமாரரமேஷ் மெண்டிஸ்மஹேல உடவத்தசச்சித் பத்திரனகசுன்ராஜிதலஹிரு சமரகோன்ஜெஹான் டேனியல்ஹசித போயகொட

பயிற்றுவிப்பாளர் – மலிந்த வர்ணபுர
முகாமையாளர் – பியால் விஜேதுங்க

தம்புள்ளை அணி  

திமுத் கருணாரத்ன(தலைவர்), குசல் ஜனித் பெரேரா(உதவி தலைவர்), நிபுன் கருணாநாயக்கமிலிந்த சிறிவர்தனகுசல் மெண்டிஸ்தரிந்து ரத்னாயக்கசச்சித்ர சேரசிங்கலஹிரு கமகேசங்கீத் குரேஅஷான் பிரியன்ஜன்ரங்கன ஹேரத்இஷான் ஜயரத்னசானக கொமசாருஅசித பெர்னாண்டோஜெப்ரி வெண்டர்சேசச்சித்ர சேனாநாயக்கஷெஹான் மதுஷங்கஹிமேஷ் ராமநாயக்கதிஸரு ரஷ்மிக்க டில்ஷான்  

பயிற்றுவிப்பாளர் – சுமித்ர வர்ணகுலசூரிய
முகாமையாளர் – வினோத் ஜோன்