போனஸ் புள்ளியால் அரையிறுதிக்கு முன்னேறிய புனித செபஸ்தியன் கல்லூரி

18

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு 1 (டிவிஷன் 1) கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு, போனஸ் புள்ளிகளால் புனித செபஸ்தியன் கல்லூரி முன்னேறியுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மொறட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிக்கான இடத்தை தக்கவைத்திருந்தன.

இந்த நிலையில், அரையிறுதிக்கான மூன்றாவது அணியை தெரிவு செய்யும் போட்டியில், புனித செபஸ்தியன் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகள் ஆகியன பண்டாரகம பொது மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டித் தொடரானது ஒரு நாளில் நான்கு இன்னிங்சுகள் கொண்ட போட்டிகளாக நடத்தப்படுத்துகின்றது.                 

அரையிறுதிக்குள் நுழைந்த ரோயல் மற்றும் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகள்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு 3 (டிவிஷன் – 3)…

இதன்படி ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித செபஸ்தியன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித செபஸ்தியன் கல்லூரி அணி மிக குறைந்த வேகத்துடன் ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது.

இதன்படி தங்களது ஆட்டத்தை நிறைவு செய்ய தீர்மானித்த புனித செபஸ்தியன் கல்லூரி அணி (95) ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாடி, 7 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிகபட்சமாக யெசான் அவிஷ்க ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் சந்தேஷ் பெர்னாண்டோ 41 ஓட்டங்களையும், இந்துவர அல்விஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரி அணியின் ஒவிந்து பெரேரா 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நிமுத் குணவர்தன 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணி ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த புனித பேதுரு கல்லூரி ஆட்ட நேர முடிவில் 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. புனித பேதுரு கல்லூரி சார்பில், லஹிரு சீதக 33 ஓட்டங்களை பெற, புனித செபஸ்தியன் கல்லூரி சார்பில் கிரிஷேன் பெரேரா 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்படி முதல் இன்னிங்ஸில் ஓட்டங்களை குவித்த புனித செபஸ்தியன் கல்லூரி அணிக்கு, போனஸ் புள்ளிகள் மூலம் அரையிறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது.  இதேவேளை, இறுதி காலிறுப் போட்டியில் புனித அனா மற்றும் மஹனாம கல்லூரிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி மோதவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்தியன் கல்லூரி – 224/7d (95) – யெசான் அவிஷ்க 73* , சந்தேஷ் பெர்னாண்டோ 41, நிமுத் குணவர்தன 18/2 

புனித பேதுரு கல்லூரி – 64/7 (16) – லஹிரு சீதக 33, கிரிஷேன் பெரேரா 27/4 

போட்டி முடிவு –  போட்டி சமநிலையில் முடிவுற்றது (புனித செபஸ்தியன் கல்லூரி அணிக்கு போனஸ் புள்ளிகளால் அரையிறுதி வாய்ப்பு)