இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு அபார வெற்றி

215
sl devolopment

ஸஞ்ஜய சதுரங்கவின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு சுற்றுப்போட்டியில் முதலாவது வெற்றி.

இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க சென்று விளையாடிக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித்தொடரின் மற்றுமொரு போட்டி நேற்று நடைபெற்றது.

இலங்கை அபிவிருத்தி அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப்போட்டி         தொடரின் மற்றுமொரு போட்டி நேற்று பிரிட்டோரிய மைதானத்தில் இலங்கை அபிவிருத்தி அணிக்கும் தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு      அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் அணித் தலைவர் விஹான் லுபெ நிதானமான ஆட்டத்தினால் 115 பந்துகளை எதிர் கொண்டு 95 ஓட்டங்களைக் குவித்தார். ஜனநேமன் மாலன் 79 பந்துகளுக்கு 69 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அபிவிருத்தி அணி சார்பாகப் பந்து வீச்சில் சஞ்சய சதுரங்க 47 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அபிவிருத்தி அணியினர் 50 ஓவர்கள் முடுவில் 7 விக்கட்டுகளை இழந்து இறுதிப் பந்து வரை போராடி 303 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தனர். லஹிரு மிலந்த 70 பந்துகளை எதிர் கொண்டு 2 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 70 ஓட்டங்களைக் குவித்தார்.

ஹசன் துமிந்து 52 ஓட்டங்களை 69 பந்துகளிலும், அதிரடியாக ஆடிய சதுரங்க 38 ஓட்டங்களை 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 28 பந்துகளில் குவித்தார். தென்னாபிரிக்க பல்கலைக்கழக அணி சார்பாகப் பந்துவீச்சில் லிசாட் வில்லியம்ஸ் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், கெய்த் டுதுஜான் மற்றும் டுமீசோ வெல்ஸ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் சாரம்சம்

தென்னாபிரிக்க பல்கலைக்கழக விளையாட்டு அணி – 299/6(50) விஹான் லுபெ 95, ஜனநேமன் மாலன் 69, ஸுபைர் ஹம்சா 44 ஸஞ்ஜய சதுரங்க 3/47, கேஷன் விஜயரத்ன 1/38

இலங்கை அபிவிருத்தி அணி – 303/7(50)
லஹிரு மிலந்த 70, ஹஸன் துமிந்து 52, சந்துன் வீரக்கொடி 48,
ஸஞ்ஜய சதுரங்க 38

லிசாட் வில்லியம்ஸ் 2/64, கெய்த் டுதுஜான் 1/48, டுமீசோ வெல்ஸ 1/36

இலங்கை அபிவிருத்தி அணியினர் 3 விக்கட்டுகளால் அபார வெற்றியடைந்தனர்