இரு மாற்றங்களுடன் அபுதாபி டெஸ்ட்டில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

269

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி சற்று முன்னதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் ஆரம்பமாகியுள்ளது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி

எனினும் இலங்கையை விட மோசமான வரலாற்றினைக் கொண்ட கிரிக்கெட் அணிகள்…

முதல் இரண்டு நாட்களுக்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் என எதிர்வுகூறப்பட்ட இந்த ஆடுகளத்தில் களமிறங்கும் இலங்கை அணியில், இறுதியாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் இடம்பெறவில்லை.

அவர்களின் இடத்தினை நிரப்ப ஆரம்ப வீரர் கெளஷால் சில்வா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இன்றைய இலங்கை அணியில் களமிறங்குவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சதீர சமரவிக்ரம அணியில் இடம்பெறவில்லை.

இலங்கை அணி  

திமுத் கருணாரத்ன, கெளஷால் சில்வா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), லஹிரு திரிமான்ன, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப்

அனுபவமிக்க மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனுஸ் கான் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் இன்றி சர்பராஸ் அஹ்மட் தலைமையில் களமிறங்கும் இளம் பாகிஸ்தான் அணியில் இடது கை துடுப்பாட்ட வீரர் ஹரிஸ் சொஹைல் அறிமுகம் செய்யப்படுகின்றார்.

பாகிஸ்தான் அணி

 ஷான் மசூத், சமி அஸ்லம், அஸ்கர் அலி, அசாத் சபீக், பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), மொஹமட் அமீர், யாசிர் சாஹ், ஹசன் அலி, மொஹமட் அப்பாஸ்