இளையோர் உலகக் கிண்ணத்திற்காக தயாராகும் இலங்கை இளம் அணி

207
Sri Lanka U19 starts

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ்  கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (16) ஆரம்பமாகின்றது.

ஐ.சி.சி. இன் விதிமுறைகளை மீறியதாக சனத் ஜயசூரிய மீது குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்..

கடந்த வாரம் இடம்பெற்று முடிந்த இளையோர் ஆசியக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று, சிறந்த பதிவு ஒன்றினை காட்டியிருந்த இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, தமது அடுத்த இலக்காக 2020ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவில் இடம்பெறும் இளையோர் உலகக் கிண்ணத்தை கருத்திற் கொண்டுள்ளது.  

இளையோர் உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ள ஒவ்வொரு நாடுகளும் முயற்சிகளை இப்பொழுதே ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியும் இளையோர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் முயற்சிகளை பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடனான இருதரப்பு தொடருடன் ஆரம்பம் செய்கின்றது.

பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியும் இளம் வீரர்களோடு இளையோர் உலகக் கிண்ணத்திற்கான கனவுகளுடன் இருக்கும் என்பதால், இரண்டு அணிகளுக்கும் இடையில் இன்று ஆரம்பமாகும் இருதரப்பு தொடர் சுவாரசியமான ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குசல் பெரேரா விளையாடுவது சந்தேகம்

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல்..

இந்த இருதரப்பு தொடர் பற்றி நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணித் தலைவர் நிப்புன் தனன்ஜய,  “எங்களது அணி நல்லதொரு மனநிலையில் காணப்படுகின்றது. அவர்கள் (பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி) மிகவும் சிறந்த ஒரு அணி. நாங்கள் அவர்களை ஆசியக் கிண்ணத்திலும் சந்தித்திருந்தோம். புதிய வீரர்கள் சிலர் எமது அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் இணைந்து நாம் தற்போது கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டுகின்றோம். எனவே, இத்தொடரில் சிறப்பாக செயற்பட நம்பிக்கை வைத்துள்ளேன். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டு நியூசிலாந்தில் இடம்பெற்றிருந்த இளையோர் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றிய அனுபவத்தை கொண்டிருக்கும் நிப்புன் தனன்ஜய, இளையோர் ஆசியக் கிண்ணத்தை அடுத்து சர்வதேச தொடர் ஒன்றில் இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியினை தலைமை தாங்குவது இம்முறை மூன்றாவது தடவையாகும்.

இதேநேரம், பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை இளையோர் ஆசியக் கிண்ணத்தில் வழிநடாத்திய தவ்ஹித் ரித்தோயே இலங்கைக்கு எதிரான தொடரிலும் பங்களாதேஷ் தரப்பினை மீண்டும் வழிநடாத்துகின்றார். அவர் நேற்றைய ஊடக சந்திப்பில் பேசும் போது, இளையோர் உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவு தங்களுக்கும் உண்டு எனக் கூறியிருந்தார்.

“எல்லாவற்றிற்கும் முதலில் இத்தொடரினை ஒழுங்கு செய்த இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றிகள். எங்களது பிரதான இலக்கு 2020ஆம் ஆண்டின் உலகக் கிண்ணமாகும். எனவே, இத்தொடர் அந்த இலக்கினை அடைவதற்கு முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. “

இந்த தொடரில் இரு அணிகளதும் பயிற்றுவிப்பாளர்கள் கவனிக்கதக்க வேண்டியவர்கள். இரண்டு அணிகளும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களினாலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. அந்த வகையில் இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி ஹஷான் திலகரட்னவினாலும், பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி நவீட் நவாஸினாலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதில் நவீட் நவாஸ் இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராக கடமையாற்றிய அனுபவத்தினையும் கொண்டுள்ளார்.

இந்த தொடர் பற்றி கருத்து தெரிவித்த நவாஸ், “ நான் இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை மூன்று உலகக் கிண்ணங்களுக்காக பயிற்றுவித்துள்ளேன். பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொறுப்பெடுத்துக்கொண்டேன் முன்னர், தவ்ஹித் ரித்தோய் கூறியது போன்று உலகக் கிண்ணத்தை மனதில் வைத்தே ஒரு அணியினை தெரிவு செய்துள்ளோம். இதே அணியை வைத்தே ஆசியக் கிண்ணத் தொடரிலும் விளையாடினோம். பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு, அவர்களது சிரேஷ்ட அணிக்குரிய வீரர்களை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியிலிருந்து உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, அதனடிப்படையில் நாங்கள் சில நல்ல வீரர்களை  உலகக் கிண்ணத்தில் நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்த தேர்வு செய்ய வேண்டி உள்ளது“ என்றார்.

>> புகைப்படங்களைப் பார்வையிட <<

இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஹஷான் திலகரட்ன குறிப்பிடுகையில், நவாஸ் சொன்ன கருத்துக்களை கூறி அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தயராகுவதே தமது இலக்கு எனக் குறிப்பிட்டு, தற்போது பங்களாதேஷிற்கு எதிரான இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்கள் யாவரும் 2020ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதியுள்ளவர்கள் எனவும் தெவித்திருந்தார்.

இறுதியாக, இரண்டு அணிகளும் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் சந்தித்திருந்ததோடு, குறித்த போட்டியில் இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இலகுவாக பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியை தோற்கடித்திருந்தது.

இதேநேரம், இரண்டு அணிகளும் இதுவரையில் நான்கு இளையோர் டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளதோடு அதில் ஒன்றில் இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வெற்றி பெற, எஞ்சிய மூன்று போட்டிகளும் சமநிலை அடைந்திருக்கின்றன. அதேவேளை இரண்டு அணிகளும் 11 இளையோர் ஒரு நாள் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, அதில் பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 6 வெற்றிகளையும், இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 4 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன.

இந்த தொடர் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்

>> இலங்கை, பங்களாதேஷ் குழாம் மற்றும் போட்டி அட்டவணை