இரண்டு கைகளாலும் பந்துவீசி, விக்கெட் வீழ்த்தி அசத்திய தென்னாபிரிக்க வீரர்

CSA twitter

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சுப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் சுழல் பந்துவீச்சாளரான க்ரெகரி மலொக்வானா இரண்டு கைகளாலும் பந்துவீசி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார் 

தென்னாபிரிக்காவில் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் கேப் டவுன் பிளிட்ஸ்டர்பன் ஹீட் அணிகள் மோதின.  

லசித் மாலிங்கவின் ஓய்வு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கை T20I அணியின் தலைவர் லசித் மாலிங்க அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில்…

முதலில் துடுப்பெடுத்தாடிய கேப் டவுன் பிளிட்ஸ் 174 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் 175 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டர்பன் ஹீட் அணி களமிறங்கியது.   

இதன்போது எட்டாவது ஓவரை சுழல் பந்துவீச்சாளர் மலொக்வானா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை அவர் வலது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட இடது கை துடுப்பாட்ட வீரர் சரெல்எர்வீ மிட் ஓப் திசையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்

தொடர்ந்து 10ஆவது ஓவரை மலொக்வானா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை இடது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட வலது கை துடுப்பாட்ட வீரரான டேன் விலாஸ் 8 ஓட்டங்களை எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.

இறுதியில் கேப் டவுன் பிளிட்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதில் கேப் டவுன் அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய சுழல்பந்து வீச்சாளரான க்ரெகரி மலொக்வானா இரண்டு கைகளாலும் பந்துவீசியதோடு, 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளார்

தென்னாபிரிக்காவின் ப்ரிடோரியாவை பிறப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய இவர், இதுவரை 6 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்

அத்துடன், கடந்த வருடம் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட CSA டி20 தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், அந்த அணிக்காக ஒருநாள் தொடரிலும் விளையாடியிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<