திலேஷின் சதம்; மிரங்கவின் அபார பந்துவீச்சினால் குருகுலவை வீழ்த்திய ஜோசப் கல்லூரி

143

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் தொடரின் ஐந்து போட்டிகள் இன்று (23) நிறைவுக்கு வந்தன. இதில் குருகுல கல்லூரிக்கு எதிரான போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்ய, ஏனைய நான்கு போட்டிகளும் சமநிலையில் முடிவுற்றன.

புனித ஜோசப் கல்லூரி, மருதானை எதிர் குருகுல கல்லூரி, களனி

புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி, திலேஷ் பெரேராவின் அபார சதம் மற்றும் சச்சின்த மஹிந்தசிங்கவின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது.

சில்வெஸ்டர், திரித்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு

ஜோசப் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திலேஷ் பெரேரா 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, சச்சின்த மஹிந்தசிங்க 90 ஓட்டங்களுடன் ஆறுதல் அளித்தார்.

பந்துவீச்சில் குருகுல கல்லூரி அணியின் சசித்த அஷான் 113 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைப் பதம்பார்த்தார்.

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி வீரர்களுக்கு 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்படி, பலோவ் ஒன் (follow on) முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட குருகுல கல்லூரி அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 22 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

முதல் இன்னிங்ஸில் குருகுல கல்லூரிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான மிரங்க விக்ரமகே 2 ஆவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அணிக்கு அதிக கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 292 (65.1) – திலேஷ் பெரேரா 101, சச்சின்த மஹிந்தசிங்க 90, லக்‌ஷான் கமகே 21, தினால் அனுராத 21, சசித்த அஷான் 6/113, நுவன் சானக 2/27

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 112 (52.2) – லிக்‌ஷான் ஷசங்க 20, மிரங்க விக்ரமகே 7/48, சாலிந்த செனவிரத்ன 2/26

குருகுல கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 158 (60) – நுவன் சானக்க 80, மிரங்க விக்ரமகே 4/78, சாலிந்த செனவிரத்ன 3/39, லக்‌ஷான் கமகே 2/15

போட்டி முடிவு – புனித ஜோசப் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 22 ஓட்டங்களால் வெற்றி


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரி அணி, சனுத் நந்தினுவின் (73) அரைச் சததத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி, 65.4 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. இதனால், இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலை அடைந்தது.

வர்த்தக ஒரு நாள் தொடரின் அரையிறுதியில் மாஸ் சிலுவேட்டா, கொமர்ஷல் கிரடிட் அணிகள்

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கமேஷ் நிர்மால், 96 ஓட்டங்களைப் பெற்று சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதுடன், கலன விஜேசிறி 68 ஓட்டங்களையும், கனிஷ்க ரந்திலககே 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

எவ்வாறாயினும், போட்டியின் முதல் இன்னிங்சை தர்ஸ்டன் கல்லூரி வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 190 (69.2) – ஜனிந்து ஜயவர்தன 42, கமேஷ் நிர்மால் 32, கனிஷ்க ரந்திலககே 27, சாமிக்க குணசேகர 22, வினூஜ விஜேபண்டார 20, யொஹான் லியனகே 3/29, அயேஷ் ஹர்ஷன 3/69, பவன்த ஜயசிங்க 2/19, சந்தரு டயஸ் 2/53

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 195 (48.5) – சனுத் நந்தினு 73, ஜயவிஹன் மஹவிதான 22, பவன்த ஜயசிங்க 20, சவிரு பண்டார 3/33, கமேஷ் நிர்மால் 2/08, சாமிக்க குணசேகர 2/43

ஆனந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 276/8 (65.4) – கமேஷ் நிர்மால் 96, கலன விஜேசிறி 68, கனிஷ்க ரந்திலககே 55, சுதீப அங்குலுகஹ 23, அயேஷ் ஹர்ஷன 3/86, யொஹான் லியனகே 2/69

போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவை எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்ததுடன், மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணிக்காக சுவத் மெண்டிஸ் 59 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடியிருந்த நாலந்த கல்லூரி அணி, 179 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து.

பந்துவீச்சில் மிரட்டிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் கௌமால் நாணயக்கார 76 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த போது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

பந்துவீச்சில் நாலந்த கல்லூரியின் லக்‌ஷித ரசன்ஜன 32 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற நாலந்த கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக் கெண்டது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 150 (43.3) – சுவத் மெண்டிஸ் 59, தேவக பீரிஸ் 33, லக்‌ஷான் பெரேரா 20, ஜிதேஷ் வாசல 4/48, தினெத் சமரவீர 3/31, ரனிந்து டி சில்வா 2/23

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 179 (70.1) – மஹீம வீரகோன் 40, தில்ஹார பொல்கம்பொல 33, ரனிந்து டி சில்வா 29, அவிஷ்க பெரேரா 25, கௌமால் நாணயக்கார 7/76, சுவத் மெண்டிஸ் 3/71

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135 (72.1) – தனூஜ் கவிஷான் 30, பிரின்ஸ் பெர்னாண்டோ 28, லக்‌ஷான் பெரேரா 24, லக்‌ஷித ரசன்ஜன 6/32, தினெத் சமரவீர 2/25, கவீஷ் மதுரப்பெரும 2/26

போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித செர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித செர்வேஷியஸ் கல்லூரி அணி, மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் புனித தோமியர் அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து 17 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய செர்வேஷியஸ் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த நிலையில், 90 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி அணி, 9 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியின் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. இதனால், இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலை அடைந்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற புனித தோமியர் கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக் கெண்டது.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வேஷியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 82 (27.4) – தேஷக்க தேனுவன் 40, கலன பெரேரா 3/27, கிஷான் முனசிங்க 2/03, ஷலின் டி மெல் 2/22

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 99/6d (23.4) – மனீஷ ரூபசிங்க 46, சிதாரா ஹப்புஹின்ன 20, கேஷர நுவன்த 2/10, சரித் ஹர்ஷன 2/28

புனித செர்வேஷியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 106 (45) – ருசிர லக்சின் 24, கேஷர நுவன்த 21, புஷ்பித்த டில்ஷhன் 21, டில்மின் ரத்னாயக்க 5/35, டெல்லோன் பீரிஸ் 4/25

புனித தோமியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76/9 (19) – டிலோன் பீரிஸ் 18, ஷசிக்க துல்ஷான் 3/29, சேதக்க தேனுவன் 2/16, கேஷர நுவன்த 2/30

போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


ராஹுல கல்லூரி, மாத்தறை எதிர் தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய மரபு ரீதியான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஹுல கல்லூரி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்த அணிக்காக பினர சங்கேத் 69 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தர்மாசோக கல்லூரியின் கவிந்து நதீஷான் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய தர்மாசோக கல்லூரி அணியினர், தினித டில்ஷான் (76) மற்றும் ஹசித ராஜபக்ஷ ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து 128 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ராஹுல கல்லூரி அணி, 137 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

பிக் பேஷ் லீக்கில் முதன் முறையாக விளையாடவுள்ள நேபாள வீரர்

அவ்வணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய சசித் மனுரங்க ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

போட்டியின் சுருக்கம்

ராஹுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 203 (64.1) – பினர சங்கேத் 69, ஒவின் போபகே 33, பாக்ய விமத் 30, கவிந்து நதீஷான் 5/26, அரோஷன் டி சொய்ஸா 3/44

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 331 (84.5) – தினித டில்ஷான் 76, ஹசித ராஜபக்ஷ 58, அரோஷன் டி சொய்ஸா 42, கவிந்து நதீஷான் 35, சசிந்து மல்ஷான் 31, ஒவின் போப்கே 4/96, சசித் மனுரங்க 3/96, திமிர சந்தீப 2/40

ராஹுல கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137/5 (41) – சசித் மனுரங்க 103*, அகில மெண்டிஸ் 2/21, கவிந்து நதீஷான் 2/50

போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<