ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் ஏழு இலங்கை வீரர்கள்

115

நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த தெற்காசிய விளையாட்டு விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வீர, வீராங்கனைகளுக்கு ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. 

நேபாளத்தில் கடந்த முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 15 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

தெற்காசிய மெய்வல்லுனர் அரங்கை கலக்கிய தங்க மகள் டில்ஷி

நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை சார்பாக அதிக தங்கப் பதக்கங்களை …..

இந்த நிலையில், அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் சீனாவின் ஹன்ங்ஸுவில் நடைபெறவுள்ள ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கங்களை வென்ற ஏழு வீரர்களை பங்கேற்கச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது

இதன்படி, தெற்காசிய விளையாட்டு விழாவில் ஹெட்ரிக் தங்கப் பதக்கம் வென்ற டில்ஷி குமாரசிங்க (400 மற்றும் 800 மீற்றர்) அருண தர்ஷன (400 மீற்றர்), லக்ஷிகா சுகன்தி (60 மீற்றர், சட்டவேலி ஓட்டம் மற்றும் ஐந்து அம்சப் போட்டி), நிலானி ரத்னாயக்க (1500 மற்றும் 5000 மீற்றர்), இந்துனில் ஹேரத் (800 மீற்றர்) ஆகிய வீரர்கள் சுவட்டு நிகழ்ச்சிகளிலும், ஹசினி ப்ரபோதா பாலசூரிய (முப்பாய்யச்சல்) மற்றும் சாரங்கி சில்வா (நீளம் பாய்தல்) ஆகிய இருவரும் மைதான நிகழ்ச்சிகளிலும் இலங்கை சார்பாக பங்குபற்றவுள்ளனர்

இதில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் இந்துனில் ஹேரத்தைத் தவிர மற்ற 6 வீரர்களும் முதல்தடவையாக ஆசிய உள்ளக மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SAGஇல் பதக்கம் வென்றவர்களுக்கு 400 இலட்சம் ரூபா பணப்பரிசு

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் ………

இதேநேரம், பெண்களுக்கான 4x400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணியை பங்குபற்றச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற 8ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டது. இதில் பெண்களுக்கான 800 மீற்றரில் கயன்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்

இதேவேளை, இம்முறை ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்கின்ற வீரர்களுக்கு  சீனாவின் நன்ஜிங்கில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலக உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<