SAGஇல் பதக்கம் வென்றவர்களுக்கு 400 இலட்சம் ரூபா பணப்பரிசு

167

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) பதக்கம் வென்ற அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் 414 இலட்சம் ரூபா பணப்பரிசுத் தொகையை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

விளையாட்டுத்துறை யாப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இந்தப் பணப்பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதுடன், தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாவும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

சுகததாச விளையாட்டரங்கை முற்றுகையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய ……….

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 500 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். இதில் 40 தங்கம், 83 வெள்ளி மற்றும் 128 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 251 பதக்கங்களை இலங்கை அணி சுவீகரித்தது.  

இதன்படி, தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 120 இலட்சம் ரூபாவும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 166 இலட்சம் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 128 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதில் குழு நிலை போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பணப்பரிசு அனைத்து வீரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும், அனைத்து வீரர்களுக்கும் விசேட நினைவுச் சின்னமொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கபடியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றது. எனினும், விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்படவுள்ள குறித்த பணப்பரிசுத் தொகையை இலங்கை கபடி சம்மேளனம் நிராகரித்துள்ளது.

SAG போட்டிகளில் 250 பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இலங்கை

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் ……..

இலங்கை பெண்கள் கபடி அணி, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுடன் தோல்வியை சந்தித்த போதிலும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது

எனினும், இலங்கை பெண்கள் அணி மோசமான ஆட்டத் திறமையை இத்தொடரில் வெளிப்படுத்தியதால் அந்தப் பணப்பரிசை ஏற்க மறுப்பதாக இலங்கை கபடி சம்மேளனம் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தலைமையில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<