ரெட்புல் பலகலைக்கழக  கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (15) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாவது போட்டியாக பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.  போட்டியில் நாணயச் சுழட்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணிமுதலில் களத்தடுப்பினைத் தேர்ந்தெடுத்தது.

இதன்படி வழமையான ஜோடிக்கு மாற்றமாக வித்தியாசமான ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடியுடன் இலங்கை அணி களமிறங்கத் தீர்மானித்தது. இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிய 22 விக்கெட்டுக்களில் 19 விக்கெட்டுக்கள் வேகப்பந்து வீச்சாளர்களினால் கைப்பற்றபட்டிருந்தமை சிறப்பம்சமாகும். அந்த வகையில் அவுஸ்திரேலிய அணியின் மிகத்துல்லியமான வேகப்பந்து வீச்சு மூலம் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய மிலந்த மற்றும் சரத்சந்திர ஆகியோர் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 3 ஆக இருந்த வேளை அடுத்தடுத்து போல்ட் முறையில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினர். தொடர்ந்து களம் கண்ட துமிந்து மற்றும் விக்ரமநாயக்க முறையே  5 மற்றும்ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது.

எனினும் கருணாரத்ன மற்றும் ஜயதிலக்க ஆகியோரின் சற்று நிதானமான 54 ஓட்டங்களுடன் இலங்கைத் தரப்பு 13 ஓவர்களில் 68 ஓட்டங்களைப் பெற்றது. ஜயதிலக்கவுக்கு உறுதுணையாக ஆடிய கருணாரத்ன 29 பந்துகளுக்கு முகம்கொடுத்து பெண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 33 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை கேர்ஷவ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 68 ஓட்டங்களைப் பெற்றது.

ரெட்புல் பல்கலைக்கழகத் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவான இலங்கை

அடுத்து களம் கண்ட சுமணசிறி, ஜயதிலக்கவுடன் இணைந்து  அதிரடியாக ஆட இலங்கை அணி 135 என்ற ஓட்ட இலக்கினை மிக விரைவாகப் பெற்றது. இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 135 ஆக இருந்த வேளை சிறப்பாக ஆடிய ஜயதிலக்க 41 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை எல்லேவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களம் கண்ட லியனாராச்சி 5 பந்துகளில் 11 ஓட்டங்களைப் பெற இலங்கை அணி 2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றது. இதன்போது சுமணசிறி 22 பந்துகளுக்கு முகம்கொடுத்து 3 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்களாக ஆட்டமிழக்காது  40 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் கேர்ஷவ், கேர் மற்றும் எல்லே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர், 164 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிகச் சிறப்பான ஆரம்பத்தினைப் பெற்றுக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக கேர் மற்றும் கிரேஸ் ஜோடி 63 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் மிகச்சிறப்பாக செயற்பட்ட கேர் துடுப்பாட்டத்திலும் அதிரடியாக ஆடி 27 பந்துகளுக்கு முகம் கொடுத்து 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 54 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில் போட்டியினை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவுஸ்திரேலிய அணியிடம் இருந்து கேர்ரின் விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம் சற்று இலங்கை அணியின் கையினை ஒங்கச்செய்தார் சாமிக்க கருணாரத்ன.

திசரவின் அபாரத்தால் த்ரில் வெற்றியை சுவைத்த உலக பதினொருவர் அணி

இந்த விக்கெட் இழப்பினைத் தொடர்ந்து சுதாகரித்துக்கொண்ட இலங்கை அணி ஓட்ட எண்ணிக்கையினைக் கட்டுப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுக்களைக் கைப்பற்ற அவுஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ஓட்டங்களைப் பெற்றது.

3 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற வேண்டிய கட்டாயத்திலிருந்த அவுஸ்திரேலிய அணி கேர்ஷவ் மற்றும் லோரன்ஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக இறுதி ஓவரில் 12 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையை எட்டியது. இறுதி 5 ஓவர்களில் அபோன்சோ மற்றும் சாமிக்க கருணாரத்ன தவிர்ந்த ஏனையோர் ஓட்டங்களை விட்டுகொடுக்க இலங்கையின் பக்கம் இருந்த போட்டி இரு அணிகளுக்கும் பொதுவான நிலையினை 19 வது ஓவரில் அடைந்தது.

சிறந்த தலைமைத்துவத்தின் பலனாக இறுதி ஓவர் வீசுவதற்காக சாமிக்க அழைக்கப்பட்டார். இந்த ஓவரின் 3 வது பந்து வீச்சில் சிறப்பான களத்தடுப்பு மூலம் சாமிக்க லோரன்ஸினை ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தமை போட்டியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

சாமிக்க  சிறப்பான பந்து வீச்சினை வீசிய போதும் சற்று  அசமந்தமான களத்தடுப்பு காரணமாக ஒட்டங்களை விட்டுகொடுக்க அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற 2 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற வேண்டி இருந்தது. இறுதிப் பந்தில் 4 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் பந்தினை எதிர்கொண்ட களத்திற்கு புதிதாக வந்த ப்ரண்ட்வூட்டிற்கு  சாமிக்கவின் யோக்கர் பந்து வீச்சினால் எதுவும் செய்ய முடியாமல் போக இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  

இதன்படி தொடர்ச்சியாக 2ஆவது முறையாகவும் ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான இலங்கை அணி தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கை அணி சார்பில்  லியனாராச்சி 4 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, அமில அபோன்சோ, சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜயவிக்கிரம ஆகியோர் தலா 1 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக துடுப்பட்டாத்தில் 29 பந்துக ளில் 33 ஓட்டங்களையும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிய சாமிக்க கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 163/6 (20) ஜயதிலக்க 5, சாமிக்க 33, சுமணசிறி 40*, கேர்ஷவ் 2/22, கேர் 2/19, எல்லேய் 2/29  

அவுஸ்திரேலியா 16௦/6 (2௦) – கேர் 54, கேர்ஷவ் 34*, லோரன்ஸ் 2*, லியனாராச்சி 2/19, அபோன்சோ 1/2, ஜயவிக்கிரம  1/23


பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்க

இத் தொடரின் மற்றுமொரு அரையிறுதிப் போட்டி பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் காலி சர்வதேச மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது. நாணயச் சுழட்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்க அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக 2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக மித்ரா 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் விங்கார்ட் 2 விக்கெட்டுக்களையும் லீ ரௌக்ஸ், மத்திவ்ஸ் மற்றும் துரோவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றினர்.

புனித பத்திரிசியார் கல்லூரிக்கு நெருக்கடி தந்த அஷான் டேனியல்

பின்னர் 122 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி மாலன் ஆட்டமிழக்காது பெற்ற 69 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது. மாலனுக்கு மேலதிகமாக லூப் 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் அணி சார்பில் அஹ்மத், இஸ்லாம் மற்றும் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம்  கைப்பற்றினர்.  

தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் ஜன்னேமன் மாலன் 195 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளதுடன் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் வரிசையில் டில்லின் மத்திவ்ஸ் 9 விக்கெட்டுக்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி நாளை காலை 1.3 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.   

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் 121/7 (2௦) – மித்ரா 27, இஸ்லாம் 19, ரஹ்மான் 17, விய்ங்க்கார்ட் 2/23, ரௌக்ஸ் 1/22, மத்திவ்ஸ் 1/16, துரௌவ் 1/18          

அவுஸ்திரேலியா 127/3 – ஜே மாலன் 69*, லூப் 32, அஹ்மத் 1/38, இஸ்லாம் 1/23, ரஹ்மான் 1/15