சோண்டர்ஸை வீழ்த்தி தரப்படுத்தலில் முன்னிலை பெற்றது கொழும்பு

272

சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் சோண்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை 3-1 என வெற்றி கொண்ட நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் தரப்படுத்தலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் 5ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணியின் கோல் எல்லைக்கு வெளியில் கிடைத்த ப்ரீ கிக்கை கொழும்பு அணியின் பொட்ரிக் திமித்ரி பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்தை ஷலன சமீர கால்களால் தட்ட, பந்து வெளியே சென்றது.

டில்ஷானின் ஹெட்ரிக் கோலினால் சுபர் சன்னை வீழ்த்திய சோண்டர்ஸ்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில்…

15ஆவது நிமிடத்தில் மீண்டும் அதே இடத்தில் கிடைத்த ப்ரீ கிக்கை சர்வான் ஜோஹர் ஷலனவுக்கு வழங்க, அவர் கோல் எல்லையில் இருந்த பசாலை நோக்கி பந்தை செலுத்தினார். பசால் கோலுக்குள் செலுத்திய பந்து இடது பக்க கம்பங்களை அண்மித்து வெளியே சென்றது

24ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் வீரர்கள் தமது தரப்பில் இருந்து எடுத்துச் சென்ற பந்தை சிறந்த முறையில் பல வீரர்களுக்கு இடையில் பரிமாற்றம் செய்தனர். இறுதியில் கோலுக்கு எதிரில் இருந்து சுந்தராஜ் நிரேஷ் உதைந்த பந்து பின்கள வீரரால் தடுக்கப்பட்டது.

முதல் பாதியின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் சோண்டர்ஸ் மத்திய களத்தில் திமித்ரி, சர்வானுக்கு வழங்கிய பந்தை அவர் பசாலுக்கு செலுத்தினார். கோல் பெட்டியின் எல்லையில் இருந்து பந்தைப் பெற்ற பசால் கோல் நோக்கி உதைந்த பந்தை சோண்டர்ஸ் கோல் காப்பாளர் அசன்க விராஜ் பிடித்தார்.

40 நிமிடங்களை அண்மித்த நிலையில் மத்திய களத்தில் இருந்து உட்செலுத்திய பந்தை ஆகிப் முன்னோக்கி எடுத்துச் செல்கையில், வேகமாக முன்வந்த அசங்க விராஜ் பந்தை பிடித்துக் கொண்டார்.

நடப்புச் சம்பியன் கொழும்பை சமன் செய்தது விமானப்படை

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில்…

மீண்டும் அடுத்த நிமிடம் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற ரிப்னாஸ் முன்னோக்கிச் சென்று வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை எதிரணி வீரர்கள் தடுக்க, கொழும்பு அணியின் முன்கள வீரர் மீது நடுவர் ஓப் சைட் சைகை காண்பித்தார்.

போட்டியின் முதல் பாதி முடிவுறும் தருவாயில் நிரேஷ் மற்றும் சர்வான் இருவரும் தமக்கெதிரே தொடர்ந்து கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட, நடுவர் இருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பித்தார்.

முதல் பாதி: கொழும்பு கா.க 0 – 0 சோண்டர்ஸ் வி.க

இரண்டாம் பாதியின் முதல் முயற்சியாக மத்திய களத்தில் இருந்து சோண்டர்ஸ் அணித்தலைவர் கிறிஷான்த அபேசேகர உள்ளனுப்பிய பந்தைப் சமோத் டில்ஷான் ஹேடர் செய்ய, பந்து வெளியே சென்றது.

எனினும், அதற்கு அடுத்த நிமிடம் மைதானத்தின் மத்தியில் இருந்து பந்தைப் பெற்ற திமித்ரி, அதனை எதிரணியின் கோல் எல்லைவரை எடுத்துச் சென்றார். கோல் காப்பாளர் அசங்க, திமித்ரியைத் தடுக்க வந்த போது அவர் கோல் திசைக்குள் செலுத்திய பந்தை பசால் வலைக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.  

மீண்டும் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் சோண்டர்ஸ் கோல் காப்பாளர் மற்றும் பின்கள வீரரிடையே நிகழ்ந்த தொடர்பாடல் பிழையினால் பந்து ரிப்னாஸிடம் சென்றது. அதனை அவர் கோலுக்குள் செலுத்தினார். எனினும் நடுவர் அதனை ஓப் சைட் என சைகை செய்தார்.

Photos: Saunders SC v Super Sun SC | Week 11 | Dialog Champions League 2018

ThePapare.com | Hiran Chandika | 17/01/2019 Editing and re-using images without permission of ThePapare.com will be considered…

அடுத்த நிமிடம் மத்திய களத்தில் இருந்து நிரேஷ் கோலின் ஒரு பக்க கம்பத்தை இலக்கு வைத்து உதைந்த பந்தை கொழும்பு கோல் காப்பாளர் இம்ரான் பாய்ந்து தட்டினார்.

70 நிமிடங்கள் கடந்த நிலையில், ஷலன சமீர மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை பெறுவதற்கு சர்வான் வருவதற்குள் அசன்க பந்தைப் பற்றிக்கொண்டார்.

எனினும், அதற்கு அடுத்த நிமிடம் ரிப்னாஸ் மைதானத்தின் மத்தியில் இருந்து பசாலுக்கு வழங்கிய பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்ற பசால், அதனை சர்வானுக்கு வழங்க, சர்வான் இலகுவாக கோலுக்குள் செலுத்தி அடுத்த கோலைப் பதிவு செய்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் கொழும்பு வீரர்கள் வேகமான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் கோல் எல்லையில் வைத்து எடுத்த முயற்சி சோண்டர்ஸ் பின்கள வீரரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

அதன்போது மீண்டும் பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்ற கொழும்பு அணியின் மாற்று வீரர் சஸ்னி பந்தை பசாலுக்கு வழங்கினார். கோலுக்கு வெளியில் ஒரு திசையில் இருந்து அவர் கோல் நோக்கி உதைந்த பந்து வலது பக்க கம்பத்தில் பட்டு திரும்பியது.

தொடர்ந்து 83ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணியின் கோலுக்கு நேர் எதிரே, கோல் பெட்டிக்கு வெளியில் கொழும்பு அணிக்கு ப்ரீ கிக்கிற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் போது, நடுவர் ஊதியை ஊத மறுகனமே கொழும்பு அணியின் தலைவர் ரௌமி மொஹிடீன் வேகமாக கோல் நோக்கி செலுத்திய பந்து, இடது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் கோலுக்குள் சென்றது.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் பின்களத்தில் இருந்த ரௌமியிடம் வந்த பந்தை அவர் கோல் காப்பாளர் இம்ரானுக்கு ஹெடர் செய்தார். பந்து இம்ரானின் கைகளுக்குள் செல்வதற்கு முன்னர் சோண்டர்ஸ் வீரர் ஷமத் ரஷ்மித்த வேகமாக இம்ரானின் கால்களுக்குள்ளால் பந்தை கோலுக்குள் செலுத்தி சோண்டர்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும் எஞ்சிய சில நிமிடங்களில் போட்டி நிறைவடைய, கொழும்பு கால்பந்துக் கழகம் மேலதிக 2 கோல்களால் வெற்றி பெற்று, டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் தமது எட்டாவது வெற்றியைப் பதிவு செய்து தரப்படுத்தலில் முதல் இடத்தைப் பிடித்தது.

முழு நேரம்: கொழும்பு கா.க 3 – 1 சோண்டர்ஸ் வி.க

  • ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மொஹமட் பசால் (கொழும்பு கா.க)

கோல் பெற்றவர்கள்
கொழும்பு கா.க – மொஹமட் பசால் 54′, சர்வான் ஜோஹர் 74′, ரௌமி மொஹிடீன் 83′
சோண்டர்ஸ் வி.க – ஷமத் ரஷ்மித 90+1′

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
கொழும்பு கா.க – அஹமட் சஸ்னி 34′, சர்வான் ஜோஹர் 44′
சோண்டர்ஸ் வி.க – சுந்தராஜ் நிரேஷ் 44′, மொஹமட் நளீம் 85′ , ஷமோத் டில்ஷான் 90+2′

– இந்தப் போட்டியை மீண்டும் பார்வையிட –