சமீரவிற்குப் பதிலாக லக்மால் விளையாடும் வாய்ப்பு

537
Lakmal

இலங்கை அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி  வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான தம்மிக்க பிரசாத் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நாளை ஆரம்பமாகும் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் துஷ்மந்த சமீரவிற்குப் பதிலாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில்  சுரங்க லக்மால் இடம்பெறலாம் என்று இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் சம்பக்க ராமநாயக்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக சம்பக்க ராமநாயக்க கூறுகையில்துஷ்மந்த சமீர தொடரில் இருந்து வெளியேறியமை பாரிய ஒரு அடியாகும். ஆனால் எமது குழாமில் இன்னும் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அந்த அடிப்படையில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட் போட்டிகள் உட்பட 26  டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுரங்க லக்மாலை துஷ்மந்த சமீரவிற்குப் பதிலாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இணைக்க நினைப்பதாகக்” கூறியுள்ளார்.