ரவீன் செயரின் சகலதுறை ஆட்டத்தால் வென்றது கென்ரிச் பினான்ஸ்

73

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair and Lovely Men) அனுசரணையில் நடைபெற்று வரும், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (Tier – B) கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற யுனிலிவர் ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி கென்ரிச் பினான்ஸ் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொழும்பு பி.சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதனடிப்படையில் களமிறங்கிய கென்ரிச் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிசாந்த டி சில்வா மற்றும் மத்தியவரிசை வீரர்களாக பிரமோத் மதுவந்த மற்றும் ரவீன் செயார் ஆகியோரின் ஓரளவு சிறந்த துடுப்பாட்ட வெளிப்படுத்தல்களுடன் 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக பிரமோத் மதுவந்த ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், நிசாந்த டி சில்வா 30 ஓட்டங்களையும், ரவீன் செயர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் டிலான் சுரவீர 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யுனிலிவர் ஸ்ரீலங்கா  அணி சானுக தெவிந்த மற்றும் ரவீன் செயரின் அபார பந்து வீச்சுக்கு தடுமாற்றத்துடன் முகங்கொடுத்து, 29 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது, போட்டியில் மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து போட்டியில் மழை பெய்து வந்ததால் கென்ரிச் பினான்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது. யுனிலிவர் ஸ்ரீலங்கா  அணிசார்பில் சச்சின் பெர்னாண்டோ மற்றும் தமிந்த பெரேரா ஆகியோர் தலா 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சானுக தெவிந்த 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ரவீன் செயர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டி சுருக்கம்

கென்ரிச் பினான்ஸ்254/10  (49), பிரமோத் மதுவந்த 33*, நிசாந்த டி சில்வா 30, ரவீன் செயர் 28, டிலான் சுரவீர 33/3

யுனிலிவர் ஸ்ரீலங்கா80/6 (29), தமிந்த பெரேரா 21, சச்சின் பெர்னாண்டோ 21, சானுக தெவிந்த 19/3, ரவீன் செயர் 21/2

போட்டி முடிவு கென்ரிச் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 25 ஓட்டங்களால் வெற்றி