பொலிஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் சோபிக்கும் அஜந்த மெண்டிஸ்

813

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் ப்ரீமியர் லீக் தொடரின் B பிரிவுக்கான மூன்று போட்டிகள் இன்று (29) நிறைவடைந்தன. மூன்று நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் காலி கிரிக்கெட் கழக அணிகள் வெற்றி பெற்றதோடு எஞ்சிய இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றன.

காலி கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் காலி அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 406 என்ற இமாலய ஓட்டங்கள் மூலம் களுத்துறை நகர அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 115 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

களுத்துறை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 257 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் 142 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன் போது காலி அணி சார்பில் பந்துவீச்சில் மீண்டும் ஒருமுறை திறமையை வெளிக்காட்டிய சுராஜ் ரன்திவ் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமித் ஹுனுகும்புர சதம் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 149 (55) – நிலூஷன் நோனிஸ் 34,  ரனிது கொடிதுவக்கு 32, சுராஜ் ரன்திவ் 7/21, கயான் சிறிசோம 3/25

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 406/6d (103) – டி.என். ஹுகும்புர 127, சுராஜ் ரன்திவ் 67, கதினேரச்சி 62, கவின் கோத்திகொட 60, ஹர்ஷ விதான 55, எரங்க ரத்னாயக்க 3/63, பசிந்து மதுஷான் 2/117

களுத்துறை நகர கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 142 (46.5) – நிபுன் கமகே 43, அகீல் இன்ஹாம் 33, கயான் சிறிசோம 5/46, அகலங்க கனேகம 2/18, சுராஜ் ரன்திவ் 2/31

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 115 ஓட்டங்களால் வெற்றி


குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சோபித்த புளூம்பீல்ட் அணி குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Photos: Bloomfield C & AC vs Kurunegala Youth CC | SLC Major League 2018/19 – Tier “B”

புளூம்பீல்ட் அணிக்காக துடுப்பாட்டத்தில் சோபித்த இடது கை வீரர் கீஷாத் பண்டிதரத்ன முதல் இன்னிங்ஸில் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டதோடு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 245 (65.3) – சமீர சதமால் 77, கேஷான் வன்னியாரச்சி 72, திலீப் ஜயலத் 2/12, அரவிந்த பிரேமரத்ன 2/14

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 276 (81.2) – கீஷாத் பண்டிதரத்ன 99, அசன்த சிங்கப்புலிகே 61, ரசன்ஜன ஜயரத்ன 4/80, லஹிரு ஜயரத்ன 3/20

குருநாகலை இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 200 (81.2) – தனுஷ்க தர்மசிறி 77, தினுஷ்க மாலன் 31, அசன்த சிங்கப்புலி 3/30, திலிப் ஜயலத் 2/32

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 173/3 (37.1) – கீஷாத் பண்டிதரத்ன 59*, சனோஜ் தர்ஷிக்க 49*, சச்சின் ஜயவர்தன 24

முடிவு – புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி  

“நோ போல்” சர்ச்சையுடன் மும்பை அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) பெங்களூரில் நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில்,


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

வெலிசரை, கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்ட நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. நேற்று கடைசி நாள் ஆட்டத்தில் கடற்படை விளையாட்டுக் கழகத்திற்கு 313 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்ட நேர முடிவின்போது அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதில் இலங்கை அணியில் நீண்ட காலமாக இடம்பெறத் தவறிய பொலிஸ் அணித்தலைவர் அஜந்த மெண்டிஸ் தனது சுழற்பந்து வீச்சிலன்றி துடுப்பாட்டத்தில் சோபித்தார். கடைசி வரிசையில் அவர் இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச்சதம் பெற்றார். மெண்டிஸ் கடைசியாக 2015 ஆம் ஆண்டே இலங்கை தேசிய அணிக்கு விளையாடினார்.

Photos: Navy SC vs Police SC | SLC Major League 2018/19 – Tier “B”

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 306 (83.4) – நிஷான் மதுஷங்க 70, அமித் குமார 57, அஜந்த மெண்டிஸ் 57, கீதன்ஷ் கெர் 55, சவிந்து பீரிஸ் 4/120

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 284 (84.4) – சாலித்த பெர்னாண்டோ 82, டிலான் சந்திம 59, துஷான் ஹேமன்த 46, தினுக்க ஹெட்டியாரச்சி 6/105, மன்ஜுல ஜயவர்தன 3/58

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 290 (72.4) – கீதன்ஷ் கெர் 64, அஜன்த மெண்டிஸ் 63, அமித் குமார் 54, டிலன்க ஆவர்த் 3/55

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 136/5 (29) – தரூஷ இத்தமல்கொட 52*, சலித்த பெர்னாண்டோ 52, மஞ்சுல ஜயவர்தன 3/19

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.  


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க, விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் விமானப்படை மற்றும் பாணந்துறை அணிகள் வெற்றிக்காக போராடிய நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 268 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாணந்துறை விளையாட்டுக் கழகம் கடைசி நாள் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றிருந்தது.

Photos: Air Force SC vs Panadura SC | SLC Major League 2018/19 – Tier “B”

போட்டியின் சுருக்கம்  

விமானப்படை விளையாட்டுக கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 223 (71.4) – துலேஷ் உதயங்க 76*, சுமிந்த லக்ஷான் 33, ஷெஹான் வீரசிங்க 6/74, அமித் கௌஷல்ய 3/85

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 258 (74) – அபிசேக் குப்தா 79, மிஷேன் சில்வா 68, நிமேஷ் மெண்டிஸ் 4/41, உமேக சத்துரங்க 3/81, சமிந்த லக்ஷான் 2/55

விமானப்படை விளையாட்டுக கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 302/6d (65) – துலேஷ் உதயங்க 119*, கௌஷல்ய கஜசிங்க 72, அமித் கௌஷல்ய 4/91

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 146/6 (56) – அசன்த பஸ்னாயக்க 47*, வினோத் பெரேரா 30*, உமேக சதுரங்க 2/16, சம்பத் பெரேரா 2/18, நிமேஷ் மெண்டிஸ் 2/26

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க