பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி தொடரை வென்ற அவுஸ்திரேலியா!

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானுடனான டி-20 யிலிருந்து பெட் கம்மின்ஸ் திடீர் விலகல்

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மி…

தொடரின் முதல் போட்டி மழைக்காரணமாக சமனிலையில்  முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை பெற்றது. இந்தநிலையில், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது. இதன் அடிப்படையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையை பெற, 20 ஓவர்கள் நிறைவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணிசார்பில் இரண்டாவது போட்டியில் அரைச் சதம் கடந்த இப்திகார் அஹமட், இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தப்படியாக இமாம் உல் ஹக்  14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, மிச்சல் ஸ்டார்க் மற்றும் சீன் எபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின்னர், இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி எவ்வித விக்கெட்டிழப்புமின்றி, வெறும் 11.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

கடந்த காலங்களில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் 36 பந்துகளில் 52 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 35 பந்துகளில் 48 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

இதன் அடிப்படையில், இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரை 3-0 என கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி, தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றது.

ஸ்மித்தின் அபாரத்தினால் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதமடித்து கைகொடுக்க அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது….

இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டி சுருக்கம்

பாகிஸ்தான் – 106/8 (20), இப்திகார் அஹமட் 45, கேன் ரிச்சட்சன் 3/18, மிச்சல் ஸ்டார்க் 2/29, சீன் எபோட் 2/14

அவுஸ்திரேலியா – 109/0 (11.5), ஆரோன் பின்ச் 52*, டேவிட் வோர்னர் 48*

முடிவு – அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<