அம்லாவின் சதம் வீண் : பட்லர், ராணாவின் அதிரடியில் வீழ்ந்தது பஞ்சாப்

345

பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஒரு போட்டியாக அமைந்திருந்தது.

இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

சந்திமால், முனவீர ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினால் கொழும்பு அணிக்கு இலகு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர் வரும் சம்பியன் கிண்ண போட்டிகளை…

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை குவித்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஹசிம் அம்லா T-20 போட்டியில் தனது கன்னிச் சதத்தை விளாசினார். தொடக்க வீரராக களமிறங்கிய அம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்களாக 104 ஓட்டங்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இவரது கன்னி T-20 சதமாகும்.

மறு முனையில் அதிரடி வீரர் மெக்ஸ்வெல் 40(18), மார்ஷ் 26(21), சாஹா 11(15), ஓட்டங்களையும் எடுத்திருந்தனர். மும்பை தரப்பில் மிட்செல் மிக்லினாகன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 199 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான பார்த்திவ் படேல்ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.  

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ஓட்டங்களை குவித்திருந்தபோது, ஸ்டோனிஸ் பந்து வீச்சில் பார்த்திவ் படேல் 37(18) பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, பட்லருடன் இணைந்து பஞ்சாப் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இருவரும் இணைந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

இந்நிலையில், ஆட்டத்தின் 13ஆவது ஓவரை மோகித் சர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த பட்லர் மெக்ஸ்வெல்லிடம் பிடி கொடுத்து வெளியேறினார். பட்லர் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்ளடங்களாக 77 ஓட்டங்களை குவித்தார்.

IPL இல் கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணி எது? பிரபல ஜோதிடர் கணிப்பு

தற்பொழுது விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் 10ஆவது ஐ.பி.எல் தொடரில்..

இறுதியில் மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதையடுத்து பஞ்சாப்புக்கு எதிரான இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராணா 7 சிக்சர்கள் அடங்களாக 62(34) ஓட்டங்களுடனும், பாண்டியா 15(4) ஓட்டங்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக, வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பட்லர் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்  

கிங்ஸ் இலவன் பஞ்சாப் 198/4 – அம்லா 104(60), மெக்ஸ்வெல் 40 (18), மார்ஷ் 26(21), மிக்லினாகன் 2/46

மும்பை இந்தியன்ஸ் 199/2 – பட்லர் 77 (37), ராணா 62(34), பார்த்திவ் படேல் 37(18)

போட்டி முடிவு – மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றி