டி20 கிரிக்கட் போட்டிக்குக் கிடைக்கும் மிகப் பெரிய ஆதரவால் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணத் தொடரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கட், ஒருநாள் கிரிக்கட்டிற்குப் பிறகு டி20 கிரிக்கட் அறிமுகமானது. இந்தப் போட்டி தொடங்கும் போது பெரிய அளவில் வெற்றி பெறும் என யாரும் நினைக்கவி்ல்லை. ஆனால் அனைவருடைய எதிர்பார்ப்பையும் மீறி இந்தப் போட்டிக்கு அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும், கோடான கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் போட்டியை ரசிக்கத் தொடங்கினர்.

யுவராஜ், கிப்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார் பிலிப்ஸ்

இதன் மூலம் இந்தத் தொடரை நடத்தும் நாட்டிற்கு அதிக வருவாய் கிடைக்கிறது. .சி.சி. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தொடரை நடத்துகிறது. இதில் வரும் வருமானத்தைப் பார்த்து அசந்துபோன .சி.சி. வருமானத்தை பெருக்கும் நோக்கத்தில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ணத்தை நடத்துவதுபற்றி ஆலோசனை நடத்திவருகிறது.

கடந்த மாதம் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கிண்ணப்  போட்டிகளை உலகளவில் 750 மில்லியன் மக்கள் வீடியோ, ஒன்லைன் மூலம் பார்த்து ரசித்தனர். 2015இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண போட்டிகளை வெறும் 250 மில்லியன் மக்கள் தான் பார்த்தனர். இதைவிட டி20 போட்டிகளை 3 மடங்கு அதிக அளவில் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும், அரையிறுதி, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளை எதிர்த்து இந்தியா விளையாடிய போட்டியை இந்தியாவில் மட்டும் 80 மில்லியன் மக்கள் ரசித்துள்ளனர்.

சமீரவிற்குப் பதிலாக லக்மால் விளையாடும் வாய்ப்பு

இதனால் .சி.சி. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை டி20 உலகக் கிண்ணத் தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக ஐசிசி சார்பில் நடத்தப்படும் டி20 உலகக்  கிண்ண போட்டி அடுத்ததாக 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டில் ஒரு டி20 உலகக் கிண்ணப் போட்டியை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இனிமேல் ஒவ்வொரு 2 ஆண்டுகளின் இடைவெளியில் டி20 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவும் ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஐசிசி.

2018ஆம் ஆண்டு செப்டம்பர்ஒக்டோபர் மாதங்களில் மூன்று வார காலமாக டி20 உலகக் கிண்ணப் போட்டியை தென் ஆபிரிக்காவில் நடத்த .சி.சி. திட்டமிட்டுள்ளது. ஆனால் சிலவேளை இந்தத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் போட்டி நடைபெற்றால் .பி.எல். தொடரின் வருவாய் பாதிக்கப்படும் என்று ஒளிபரப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்