டெஸ்ட் கிரிக்கெட்டில் சௌத் ஷகீல் புதிய சாதனை!

Pakistan tour of Sri Lanka 2023

83
Pakistan tour of Sri Lanka 2023

பாகிஸ்தான் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் சௌத் ஷகீல், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் சௌத் ஷகீல் 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார் 

>> இரண்டாவது டெஸ்டில் இருந்து நீங்கும் சர்பராஸ் அஹ்மட்

தன்னுடைய 7வது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சௌத் ஷகீல் தான் விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்ததிலிருந்து தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளிலும் அரைச்சதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டார். 

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய கன்னி இரட்டைச்சதத்தை பதிவுசெய்திருந்த இவர், மேலும் ஒரு சதம் மற்றும் 6 அரைச்சதங்களை தான் விளையாடிய 7 போட்டிகளில் விளாசியுள்ளார். 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் பாகிஸ்தான் அணி 3வது நாள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 563 ஓட்டங்களை குவித்ததுடன், இலங்கை அணியை விட 397 ஓட்டங்கள் ( இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 166) வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<