நான் எப்போதும் நேர்மையாகவே நடப்பவன் – சனத் ஜயசூரிய

332

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட தேர்வாளருமான சனத் ஜயசூரிய மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அதனுடைய ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகளை இரண்டு தடவைகள் மீறி நடந்தார் என நேற்று (15) குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், சனத் ஜயசூரிய இன்று (16) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஐ.சி.சி. இன் விதிமுறைகளை மீறியதாக சனத் ஜயசூரிய மீது குற்றச்சாட்டு

மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்த குறித்த ஊடக அறிக்கையில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது கருத்துக்கள் எதுவும் தெரிவிக்க முடியாது எனக் கூறியிருந்த சனத் ஜயசூரிய குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துக்கள் சொல்லாது போனமைக்கு “போட்டி நிர்ணய சதிகளில் ஈடுபட்டதோ, ஆடுகள நிர்ணய சதிகளில் ஈடுபட்டதோ அல்லது ஏனைய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோ”  காரணங்கள் இல்லை எனவும் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவு  2017ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரில் இடம்பெற்றதாக கூறப்படும் குளறுபடிகளை விசாரணை செய்து வருகின்றது. இந்த விசாரணைகளுக்கு சனத் ஜயசூரிய சரியான முறையில் ஒத்துழையாது போயிருந்தமையே அவர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டாக அமைகின்றது.

இந்நிலையில் தற்பொழுது சனத் ஜயசூரிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை கீழ்வருமாறு:

ஒக்டோபர் மாதம் 15, 2018 என திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை, ஐய்ன் ஹிக்கின்ஸ், பொதுச்சபை, ஊழல் தடுப்பு பிரிவு, சர்வதேச கிரிக்கெட் பேரவை இடமிருந்து நான் பெற்றேன். குறித்த கடிதத்தில் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு, தான் அவர்களது விதிமுறைகளை மீறி நடந்ததாக பின்வரும் குற்றச்சாட்டுக்களை என் மீது வைத்திருந்தது.

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை?

இங்கிலாந்து அணிக்கு …

“ விதிமுறைகள் சரம் 2.4.6 இன் படி – ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு உரிய வகையில் ஒத்துழையாது போனமை. விசாரணைகளின் ஒரு அங்கமாக ஊழல் தடுப்பு பிரிவு கேட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியமை. “  

“ விதிமுறைகள் சரம் 2.4.7 இன்  படி – ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளை தாமதிக்க காரணமாக அமைந்தமை. இதற்குள் ஊழல்களை இனங்காணும் விசாரணைகளுக்கு தேவையாக இருந்த ஆவணங்களை சேதப்படுத்தியது, அதனை மறைத்து வைத்தது, மாற்றியது, அழித்தது போன்றவையும் அடங்கும். “

மேலே குறிப்பிட்ட இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்ததோடு, அது கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கும் மக்களிடையே வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது.  

எனக்கு இன்னும் 14 நாட்கள் அவகாசமாக கொடுக்கப்பட்டிருப்பதனால் நான் துரதிஷ்டவசமாக (இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில்) எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கும் நிலையில் இப்போது இல்லை. எனக்கு கிடைத்துள்ள சட்ட ஆலோசனைகளின் படி, நான் ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏதாவது கருத்து தெரிவிக்கும் போது அது ஐ.சி.சி. இன் விதிமுறைகளுக்கு சவால் விடுத்தது போன்று ஆகிவிடும்.

இலங்கை இளம் அணியில் சமாஸ், வியாஸ்காந்த் இணைப்பு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் …

எனது சட்ட ஆலோசனைக் குழுவினர் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எனது பதில்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். நான் இதற்கென பதில்கள் பூரணமாகியதுடன் அதனை இன்னுமொரு அறிக்கை ஒன்றில் வெளியிடுவேன்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டதையோ, ஆடுகள நிர்ணயத்தில் ஈடுபட்டதையோ அல்லது இதற்கு ஈடான ஏனைய ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதையோ பிரதிபலிப்பவை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளேன். இவை, அவர்கள் (ஐ.சி.சி) மேற்கொண்டிருந்த விசாரணைகளுக்கு நான் ஒத்துழையாது போயிருந்ததும், உதவியாக இல்லாமல் போயிருந்தது பற்றியுமானதாகும்.

நான் எப்போதும் நேர்மையாக நடப்பதோடு, விளையாட்டு சார்ந்த விடயங்களில் ஒளிவு மறைவுடன் இருப்பதில்லை. இதனையே நான் எதிர்காலத்திலும் செய்வேன்.

சனத் ஜயசூரிய

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க