விறுவிறுப்பான பெனால்டி உதைகளின் மூலம் வெற்றியை சுவீகரித்த விமானப்படை

525
Club Football
களனி கால்பந்து மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற FA கிண்ணத்தின் 32 அணிகள் கொண்ட சுற்றில், சிவில் பாதுகாப்பு அணியை 4-3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய விமானப்படை அணி 16 அணிகளைக் கொண்ட சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. குறித்த போட்டியின் போது, போட்டியின் முழு நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றதால் பெனால்டி உதைகளின் மூலம் அவ்வணி வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் 56வது நிமிடம் சிவில் பாதுகாப்பு அணியின் முன்கள வீரர் A.R. விக்ரமசிங்கவின் கோல் வாய்ப்பை விமானப்படை அணியின் விங் நிலை வீரர் தேவிந்த பண்டார தடுத்து நிறுத்தியதால், வழங்கப்பட்ட 90 நிமிட நேரத்துக்குள் மேலதிக கோல்கள் ஏதும் போடப்படாமையினால் போட்டியின் வெற்றியாளர்களை தீர்மானிக்க பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன.

பெனால்டி உதைகளின் போது தேவேந்திர பண்டார கிடைக்கபெற்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட போதும், சிவில் பாதுகாப்பு அணி சார்பாக D.S. ஹெட்டியாராச்சி மற்றும் சரிந்து சம்பத் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர். அதன் மூலம் 16 அணிகளைக் கொண்ட FA கிண்ண சுற்று போட்டிகளுக்காக தகுதி பெற்றுக்கொண்டதோடு போட்டியின் சிறந்த வீரராக கவிந்து இஷான் தெரிவு செய்யப்பட்டார். அந்த வகையில் வெற்றியை எதிர்ப்பார்த்திருந்த சிவில் பாதுகாப்பு அணி ஆதரவாளர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

விருந்தினர் அணியான களமிறங்கிய விமானப்படை அணி போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

விமானப்படை அணியின் முன்கள வீரர் D.K துமிந்தவுக்கு சிவில் பாதுகாப்பு அணியின் தடுப்பு வீரர்களை ஊடறுத்து சென்று கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டிய பொழுதும் அந்த வாய்ப்பு வீணானது.  

முதல் 30 நிமிடங்களுக்குள், சிவில் பாதுகாப்பு அணியின் வீரர்களான W.D.D வீரமந்த்ரி மற்றும் சுரேஷ் குமாரவுக்கு போட்டி விதி முறைகளை மீறியதன் காரணாமாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் பாதி நேரத்தில் விமானப்படை அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தி  சிவில் பாதுகாப்பு அணிக்கு பல்வேறான அழுத்தங்களை கொடுத்த போதிலும், உறுதியான தடுப்பாட்டதின் மூலம் விமானப்படை அணியின் கோலடிக்கும் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

முதல் பாதி : சிவில் பாதுகாப்பு அணி 0-0 விமானப்படை அணி

இடைவேளையின் பின்னர் விமானப் படை அணியின் பயிற்சியாளர் அணியில் பல மாற்றங்களை செய்தார். இரண்டாம் பாதி நேரத்தில், கோல் பெற்றுக்கொள்ளும் நோக்கில், லக்மால் குணசிங்கவுக்கு பதிலாக ரொஷான் பெர்னாண்டோவை களமிறக்கினார்.

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே குமார லங்கேசற எதிர் அணி வீரரோடு போட்டி விதிமுறையை மீறி முட்டிக்கொண்டதால் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

சிவில் பாதுகாப்பு அணி சார்பாக முதல் கோலினை A.R. விக்ரமசிங்க பதிவு செய்தாலும், அது ஓப் சைட் (Off side) என தெளிவாக தெரிந்தது. இது குறித்து விமானப்படை முறைப்பாடு செய்த போதிலும், களநடுவர்களினால் சிவில் பாதுகாப்பு அணிக்கு அந்த கோல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து, விமானப் படை அணித் தலைவர் M.A.N.U மதுஷங்க மற்றும் சிவில் பாதுகாப்பு அணி வீரர் கயஷான் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் அவரகள் இருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

56வது நிமிடத்தில் கோலை பதிவு செய்த சிவில் பாதுகாப்பு அணி, விமானப்படை அணி மீது மேலும் அழுத்தம் கொடுத்தது. அந்த வகையில், போட்டியை சமநிலைப்படுத்த கோல் அடிக்கும் நோக்கில் போட்டி முடிவடைய சில நிமிடங்களே எஞ்சிய நிலையில் விமானப்படை அணி உக்கிரமாக போராடியது.

தவறுதாலாக வழங்கப்பட்ட கோலினால் அதிக அழுத்தத்தை எதிர்கொண்ட போதிலும், தமது பலத்துடன் கோல் அடிக்கும் முயற்சிகளை விமானப்படை மேற்கொண்டது. அத்துடன் போட்டியின் நடுவே சில மாற்றங்களையும் செய்தது. D.K துமிந்தவுக்கு பதிலாக ஜீவந்த பெர்னாண்டோவை களமிறக்கியது. விங் நிலை வீரராக விளையாடிக்கொண்டிருந்த கவிந்து இஷான் முன்கள தாக்குதல் வீரராக விளையாடினார்.  

விமானப்படை அணி தொடர்ச்சியாக முயற்சித்த போதிலும், சிவில் பாதுகாப்பு அணி அத்தாக்குதல்களை தொடர்ந்தும் முறியடித்தது. எனினும் போட்டியின் 74ஆவது நிமிடம் கோல் கம்பத்துக்கு குறுக்காக வந்த பந்தை விமானப்படை அணியின் தேவிந்த பண்டார தலையால் அடித்து கோலாக மாற்றினார்.

அந்த வகையில் 1-1 என்ற கோல் அடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவுற்றதால், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன. அதன்படி, முதலாவது சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்ட விமானப்படை அணியின் தேவிந்த பண்டார கோல் போடத் தவறியதோடு மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

N.L.S கயஷான், மதுஷான் பெரேரா, திணிந்து பண்டார ஆகியோர் தமக்கான வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கோல்களைப் பதிவு செய்தனர். அந்த வகையில் இரண்டு பெனால்டிகள் எஞ்சிய நிலையில், 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் சிவில் பாதுகாப்பு அணி முன்னிலை பெற்றிருந்தது.

நான்காவது பெனல்டியை சிவில் பாதுகாப்பு அணியின் சுரேஷ் குமார தவறவிட்டதன் காரணாமாக பெனால்டி உதைகள் சமநிலை பெற்றது. அத்துடன் ஐந்தாவதும் இறுதியுமான பெனால்டியில் விமானப்படையின் கவிந்து இஷான் கோலினை பதிவு செய்துகொண்டதால் 4-3 என விமானப்படை முன்னிலை பெற்றது. போட்டியை தக்கவைத்துக்கொள்ள கட்டாயம் கோலை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் சிவில் பாதுகாப்பு அணி காணப்பட்டது.

இறுதி பெனால்டியை அடிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட சரிந்து சம்பத் அடித்த கோலினை விமானப்பபடை அணியின் கோல் காப்பாளர் ருவன் அனுரசிறி சிறப்பான முறையில் தடுத்து நிறுத்தினார்.

இறுதியில் 4-3 என்ற கோல்கள் அடிப்படையில் பெனால்டி உதைகளை விமானப்படை அணி வென்று இவ்வருடத்துக்கான இறுதி 16 அணிகளைக் கொண்ட FA கிண்ண சுற்றுப்போட்டிகளுக்குத் தகுதி பெற்றுக்கொண்டது.

போட்டியின் முழு நேரம் : சிவில் பாதுகாப்பு அணி 1-1 விமானப் படை அணி

பெனால்டி : சிவில் பாதுகாப்பு அணி 3-4 விமானப் படை அணி

கோல் போட்டவர்கள்

சிவில் பாதுகாப்பு அணி – A.R. விக்ரமசிங்க 56’

விமானப்படை அணி – தேவிந்த பண்டார 74′

மஞ்சள் அட்டைகள்

சிவில் பாதுகாப்பு அணி – W. D. D. வீரமந்த்ரி 22′, சுரேஷ் குமார 38′, M.A.N.U. மதுஷங்க 59’

விமானப்படை அணி – குமார லங்கேசற 51’, N.L.S கயஷான் 59’