அருட்கலாநிதி தாவீது அடிகளார் ஞாபகார்த்த டென்னிஸ் தொடர் முடிவுகள்

212

அருட்கலாநிதி தாவீது அடிகளார் நிறுவகமும் யாழ்ப்பாண டென்னிஸ் கழகமும் இணைந்து அருட்கலாநிதி தாவீது அடிகளார் ஞாபகார்த்தமாக வட மாகாண ரீதியிலான டென்னிஸ் சுற்றுப் போட்டியினை  முதலாவது தடவையாக நடாத்தியிருந்தன. 

வடக்கை அலங்கரிக்கும் அருட்கலாநிதி தாவீது அடிகளார் ஞாபகார்த்த டென்னிஸ் தொடர்

அருட்கலாநிதி தாவீது அடிகளார் நிறுவகமும் யாழ்ப்பாண

இம்மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரிகளினது டென்னிஸ் திடல்களில் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இப்போட்டித் தொடரினது இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று புனித பத்திரிசியார் கல்லூரி டென்னிஸ் திடலில் இடம்பெற்றிருந்தது.

வட மாகாணத்தில் முதல் முறையாக திறந்த பிரிவு போட்டிகள் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் இடம்பெற்றமை இத்தொடரின் சிறப்பம்சமாகும்.

திறந்த பிரிவில் மகளிர் ஒற்றையர், மகளிர்  இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சம்பியன் பட்டத்தினை தனதாக்கியிருந்தார் நித்தியா.  

அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவுகளில் அசத்திய சைலன் நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினை வென்று அசத்தினார்.

Photos: Fr. David Memorial Tennis Tournament | Semi Finals

ThePapare.com | Kanesalingam Renusan | 08/09/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended copyright infringement. /p>

சுமார் 117 இற்கும் அதிகமான போட்டியாளர்களை உள்ளடக்கி, 11 பிரிவுகளாக இடம்பெற்ற அருட்கலாநிதி. தாவீது அடிகளார் ஞாபகார்த்த டென்னிஸ் தொடரின் முடிவுகள்.  

பிரிவு போட்டியாளர்கள் புள்ளிகள் வெற்றியாளர்
14 வயதின்கீழ் ஆண்கள் டினியோ

எதிர்

றினோயன்

7:2 டினியோ
14 வயதின்கீழ் பெண்கள் பிறஜினா

எதிர்

வேணுயா

7:3 பிறஜினா
18 வயதின்கீழ் ஆண்கள் சிம்சொன் எதிர் லிந்துஜன் 7:5,7:5 சிம்சொன்
18 வயதின்கீழ் பெண்கள் டிலக்சனா

எதிர்

தனியா

6:3, 3:6, 10:4 டிலக்சனா
ஆடவர் ஒற்றையர் சைலன்

எதிர்

கோமளராஜ்

6:1, 6:0 சைலன்
ஆடவர் இரட்டையர் சைலன், துசாந்தன்

எதிர்  கோமளராஜ்,பிரியலக்சன்

6:1, 6:4 சைலன், துசாந்தன்
மகளிர் ஒற்றையர் நித்தியா

எதிர்

டிலக்சனா

6:1, 6:0 நித்தியா
மகளிர் இரட்டையர் நித்தியா, அருள் பிரியா

எதிர்

தனியா, அஸ்மிதா

4:6, 6:3,6:0 நித்தியா, அருள்பிரியா
கலப்பு இரட்டையர் கோமளராஜ், நித்தியா

எதிர்

பிரியலக்சன், அருள்பிரிய

6:3, 6:3 கோமளராஜ், நித்தியா
35 வயதின் மேல் ஆண்கள்ஒற்றையர் மோகனகுமார்

எதிர்

மதிவர்ணன்

7 :5, 5:7, 7:5 மோகனகுமார்
35 வயதின் மேல் ஆண்கள் இரட்டையர் மதிவர்ணன்,மோகனகுமார்

எதிர்

ரஞ்சித் தேவராஜா, அனிஸ் தயாநந்தன்

6:3, 4:6, 7:5 மோகனகுமார், மதிவர்ணன்

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க